‘அஜித் உடம்புல ஒரு சின்ன கீறல் கூட.. பாதையில் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் நிறைய.. எதிர்கொள்ள தயார்’ -ஃபேபியன்
அஜித் விபத்து அப்டேட்: சாலையில் இன்னும் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கிறன; நாங்கள் அணியாக, குடும்பமாக அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்’ – ஃபேபியன்
அஜித்தின் கார் விபத்துக்குள்ளானது குறித்து, அஜித் குமார் ரேசிங் அணியின் வீரரும், மேனஜருமான ஃபேபியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அஜித் நலமாக இருக்கிறார்
இது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘முதல் பயிற்சி நிறைவு பெற்றது; அஜித் நலமுடன் இருக்கிறார்; அவர் உடம்பில் ஒரு சிறு கீறல் கூட இல்லை. அதுதான் இங்கு மிக முக்கியமானது. பயணத்தில் கற்றுக்கொள்ளல் என்பது, எப்போது முடியாது என்பதை இந்தச்சம்பவம் மீண்டும் ஒருமுறை நினைவு படுத்தி இருக்கிறது; இது பின்னடைவு கிடையாது; ரேசிங்கின் மீது எங்களுக்குள்ள ஆர்வம் எங்களுக்கு கிடைக்கும் அனுபவத்தில் இருந்து எங்களை கற்றுக்கொள்ள வைக்கிறது.
மேம்படுத்துகிறது.. முன்னோக்கி தொடர்ந்து ஓட வைக்கிறது. சாலையில் இன்னும் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கிறன; நாங்கள் அணியாக, குடும்பமாக அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
24H Dubai 2025
இயல்பிலேயே, மோட்டார் ரேசிங்கின் மீது ஆர்வம் கொண்ட அஜித்குமார், அஜித் குமார் ரேசிங் என்ற நிறுவனத்தை தொடங்கி, அதற்கான குழுவை உருவாக்கினார். இந்தக்குழு துபாயில் நடக்கும் 24H Dubai 2025 ரேசிங்கில் பங்கேற்க இருக்கிறது. இந்த நிலையில் நேற்று அதற்கான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அஜித் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
சிங்கப்பூரில் மகள் பிறந்தநாள்
அஜித் அண்மையில் தன்னுடைய குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்று புத்தாண்டு மற்றும் தன்னுடைய மகளின் பிறந்தநாளை கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படத்தை ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். கடந்த ஜனவரி 5ம் தேதி சென்னை திரும்பிய அவர்களில் அஜித் மட்டும் ரேசில் பங்குகொள்ள துபாய் சென்றார். அது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
முன்னதாக, அஜித் துணிவு படத்திற்குப் பின் கமிட்டான படம், விடாமுயற்சி. இப்படத்தை லைகா புரொடக்ஷன் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப்படத்தின் டீசரும் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், அனிருத் இசையில் வெளியான சவாதீகா பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகவில்லை என்று அறிவிக்கப்பட்டது.
ஐந்தாவது முறையாக அஜித்துடன் ஜோடி சேர்ந்த திரிஷா:
இப்படத்தில் நடிகை திரிஷா, ஜி, கிரீடம், மங்கத்தா, என்னை அறிந்தால் ஆகியப் படங்களுக்குப் பின் நடிகர் அஜித் குமாருடன் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் இப்படத்தில் ரெஜினா, அர்ஜூன், ஆரவ் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துவருகின்றனர். இயக்குநர் மகிழ் திருமேனி இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை அஜர்பைஜானில் படமாக்கியுள்ளார்.
ஏப்ரல் 10 ரிலீஸ்
இதற்கிடையே, நடிகர் அஜித் குமார்- இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. மார்க் ஆண்டனி திரைப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தத் திரைப்படத்தில் அஜித்துடன் அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்தப்படம் ஏப்ரல் 10 அன்று வெளியாக இருக்கிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்