தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Ajith Kumar Brain Surgery Done And Discharging Today

Ajith Health Update: முடிந்தது அறுவை சிகிச்சை.. வீடு திரும்பும் அஜித்.. படப்பிடிப்பில் எப்போது கலந்து கொள்கிறார்?

Aarthi Balaji HT Tamil
Mar 08, 2024 01:25 PM IST

Ajith Kumar: நடிகர் அஜித் குமார் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.

 அஜித் குமார்
அஜித் குமார்

ட்ரெண்டிங் செய்திகள்

மதுரை, கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை வந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்களாம். அவரது மூளையில் இருந்ததாக கூறப்பட்ட கட்டி அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் இன்று அல்லது நாளை மருத்துவமனையில் இருந்து அஜித் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். 

உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து திட்டமிட்டபடி படப்பிடிப்பில் கலந்துகொள்ள அஜித் முடிவு செய்து இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி அஜித் வரும் 15ஆம் தேதி 'விடாமுயற்சி' படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் செல்ல திட்டமிட்டு இருக்கிறாராம்.

மகிழ் திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வந்த நிலையில், அதற்கிடையே சென்னைக்கு வந்தநிலையில் அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நடிகர் அஜித் குமார், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். எச். வினோத் இயக்கிய துணிவு என்ற படத்திற்குப் பிறகு இப்படம் வருவதால், இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

விடாமுயற்சி ஒரு குழும நடிகர்களைக் கொண்ட ஒரு அதிரடி திரில்லர் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. அங்கு ரசிகர்கள் அஜித்தை ஒரு புத்தம் புதிய அவதாரத்தில் பார்க்கப் போகிறார்கள்.

இதற்கிடையில், படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகள் ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளன.

அதனை சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் இந்தியா ஜனவரி 17 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தபோது அதே செய்திக்காக திரைப்படம் தலைப்புச் செய்திகளில் வந்தது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியது.

இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

அஜித்துக்கு வெற்றிகரமாக சிகிச்சை முடிந்து ஓய்வில் இருப்பதாக உலா வரும் செய்தி ஆறுதலாக அமைந்ததுடன், அஜித்தின் உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்