Ajith Kumar: 'அஜித் ஸ்வீட் ஹார்ட்.. ஜென்டில் மேன்.. அவர முதல்ல பாத்தது நான்தான்..' கலா மாஸ்டர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajith Kumar: 'அஜித் ஸ்வீட் ஹார்ட்.. ஜென்டில் மேன்.. அவர முதல்ல பாத்தது நான்தான்..' கலா மாஸ்டர்

Ajith Kumar: 'அஜித் ஸ்வீட் ஹார்ட்.. ஜென்டில் மேன்.. அவர முதல்ல பாத்தது நான்தான்..' கலா மாஸ்டர்

Malavica Natarajan HT Tamil
Published Feb 12, 2025 01:06 PM IST

Ajith Kumar: நடிகர் அஜித் ஒரு ஸ்வீட் ஹார்ட்.. ஜென்டில் மேன். அவர் எல்லாம் கொண்டாடப்பட வேண்டியவர் எனக் கூறி இருக்கிறார் நடன இயக்குநர் கலா மாஸ்டர்.

Ajith Kumar: 'அஜித் ஸ்வீட் ஹார்ட்.. ஜென்டில் மேன்.. அவர முதல்ல பாத்தது நான்தான்..' கலா மாஸ்டர்
Ajith Kumar: 'அஜித் ஸ்வீட் ஹார்ட்.. ஜென்டில் மேன்.. அவர முதல்ல பாத்தது நான்தான்..' கலா மாஸ்டர்

அஜித் ஒரு ஸ்வீட் ஹார்ட்

அந்தப் பேட்டியில், "அஜித் ரொம்ப ஸ்வீட் ஹார்ட். அவருக்கு பத்ம பூஷண் விருது கிடைச்சது பெர்சனலாவே எனக்கு ரொம்ப சந்தோஷம் தான். ஒரு விஷயம் சொல்லியே ஆகணும். அஜித் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே பாத்தது நான் தான். நான் ரகு மாஸ்டர்கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை செஞ்சேன். அப்போ தெலுங்கு டைரக்டர் ஒருத்தர் எனக்கு பிரண்ட். அவரு படம் எடுக்க ஹீரோ, ஹீரோயின் தேடிட்டு இருக்காரு. அந்த டைம்ல அவரு எனக்கு 5 ஹீரோ, ஹீரோயின் போட்டோ அனுப்பி வச்சு, இதுல யாரு கரெக்டா இருப்பான்னு சொல்ல சொல்லி கேக்குறாரு. என்கிட்ட கேக்கும் போதே அவங்களும் செலக்ட் பண்ணி இருக்காங்க. அப்போ, அஜித் போட்டோவும் அதுல இருந்தது.

நான் தான் டான்ஸ் கத்து கொடுத்தேன்

நான் அஜித்தையும், சங்கவியையும் பாத்து இவங்க ஓகேன்னு சொல்றேன். நான் நெனச்சது தான் அவரும் நெனச்சிருக்காரு. அந்த டைரக்டரும் இவங்க ரெண்டு பேரையும் செலக்ட் பண்ணிருக்காங்க.

அப்போ அவரு, ஒரு 5 நாள் டான்ஸ் கத்துக்க என்கிட்ட அஜித்த அனுப்புறாரு. என் சித்தப்பா பையன் தான் அவருக்கு டான்ஸ் சொல்லி தான். அதுக்கு அப்புறம் நான் அஜித்த பாக்கவே இல்ல. ரொம்ப வருஷம் கழிச்சு ஒரு வேட்டி விளம்பரம் ஷூட்டிங்ல பாத்தேன். அப்போ என்ன பாத்து கலாஜீன்னு கட்டிப்பிடிச்சு ரொம்ப நேரம் பேசுனாரு. ஆனா, நாங்க என்ன பேசுனோம்ன்னே நியாபகம் இல்ல.

நட்புக்கு முக்கியத்துவம்

அவரு பக்கா ஜென்டில் மேன். ப்யூர் ஹார்ட்டட் பெர்சன். நட்புக்கு ரொம்ப முக்கியத்துவம் தர்ற ஆளு. டெய்லி பேசுனா தான் ப்ரண்ட்ஸ்ன்னு இல்ல. அதெல்லாம் மனசுக்குள்ள இருந்து வரணும்.

எனக்கு ஷாலினியும் ரொம்ப நல்லாவே பழக்கம். நாங்க சினிமாவுல அதிகம் ஒன்னா வேலை செஞ்சிருந்தாலும், அத தாண்டி நிறைய புரொகிராம் பண்ண போவேம். அப்போ எல்லாம் நிறைய கதை பேசுவோம். அஜித் ஷாலினி கல்யாணம் நடக்குறதுக்கு ஒருவாரம் முன்னாடி கூட நாங்க ஒரு படத்துக்காக வேலை செஞ்சோம். அப்போ, நான் ஷாலினிகிட்ட சொன்னேன். நீ ஒரு ஜென்டில் மேன கல்யாணம் பண்ணிக்க போறேன்னு.

கொண்டாடப்பட வேண்டியவர்

இவங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கு அப்புறம் நான் ஷாலினிய அதிகம் பாத்திருக்கேன். ஆனா, அஜித்த பாத்தது இல்ல. அவரு எல்லாம் கொண்டாடப்பட வேண்டியவரு. சினிமாவுல எந்த பின்புலமும் இல்லாம, தனி ஆளா வந்து நின்னு சாதிச்சு காட்டி உயரத்துக்கு போயிருக்காரு. அதோட மட்டும் இல்லாம, நம்மாள ஸ்போர்ட்ஸ்லயும் சாதிக்க முடியும்ன்னு இவ்ளோ பெரிய இடத்துக்கு வந்துருக்காரு. அவர நெனச்சாலே எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. சினிமாங்குறது குடும்பம். அந்த குடும்பத்துல யாருக்கு விருது கொடுத்தாலும் நாம அத கொண்டாடனும்.

நியாபகத் திறமை

அதுவும் இல்லாம நாம அவரோட நியாபகத் திறமையையும் பாராட்டியே ஆகணும். விஸ்வாசம் படம் ஷூட்டிங்கு டான்ஸ் ஆட என் சித்தப்பா பையன் போயிருக்கான். முதல் நாள் அவன பாத்து உங்கள எங்கயோ பாத்துருக்கேன்னு சொல்லிட்டே இருந்துருக்காரு. அடுத்த நாள் வந்து, நீங்க கலாஜீ வீட்ல எனக்கு டான்ஸ் சொல்லித் தந்தவரு தானன்னு கேட்டு அவரோட ரொம்ப நெருக்கமா பேசிட்டு இருந்திருக்காரு. அவன் போன் பண்ணி என்கிட்ட சொல்றான்.

அந்த மனசு யாருக்கு வரும்

எத்தனையோ பேர் நம்மள தெரிஞ்சாலும் ஒரு உயரத்துக்கு போன கண்டுக்காம போறாங்க, தெரிஞ்சாலும் தெரியாம போறாங்க. ஆனா, அவரு நியாபகப்படுத்தி அவங்கள பாராட்டுறாரு. அந்த மனசு எல்லாம் யாருக்கு வரும். அஜித் வாழ்க, விஜய் வாழ்கன்னு சொல்றீங்க. நீங்க எப்போ வாழப்போறீங்கன்னு எல்லாம் யார் கேட்பா சொல்லுங்க. உண்மையிலயே அவரு பியூர் ஹார்ட் தான்" என அஜித்தை பற்றி பேசும் போதே பூரிப்படைந்தார் கலா மாஸ்டர்.