"அஜித்தே கடவுளே" - வா?.. உடனே நிறுத்துங்க... ரொம்ப கவலையா இருக்கு" - அஜித் அறிக்கை!
பொது இடங்களில் கடவுளே அஜித்தே என்று ரசிகர்கள் கூப்பாடு போடுவது தனக்கு பிடிக்கவில்லை என்று நடிகர் அஜித் கூறியிருக்கிறார்.
நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
‘க.... அஜித்தே ’
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில், அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் 'க.... அஜித்தே "என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
பொது இடங்களிலும்
எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்.
என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்!
வாழு & வாழ விடு!" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
முன்னதாக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவரை அவரது ரசிகர்கள் முன்னதாக "தல " என்று அழைத்து வந்தனர். அதில் உடன்பாடு இல்லாத அஜித்குமார், தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்றும் தன்னை அஜித்குமார் அல்லது ஏகே என்று அழையுங்கள் என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் சமீப காலமாக அஜித் குமாரை அவரது ரசிகர்கள் பொது இடங்களில் அஜித்தே கடவுளே என்று கரகோஷம் எழுப்பியும், ரீல்களில் அஜித்தே கடவுளே என்று பேசி யும் வீடியோக்களை வெளியிட்டும் தங்களது அன்பை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால் இது பல இடங்களில் தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையூறு அளிக்கும் வகையில் இருந்தது.
சமூக வலைதளங்களிலும், அஜித் படத்தின் அப்டேட் வெளியாகும் போதும், அஜித்தின் செயல்பாடுகள் தொடர்பான போட்டோக்கள் வெளியாகும் பொழுதும் ரசிகர்கள் இந்த ஹேஷ்டேக் கை ட்ரெண்ட் செய்து வந்தனர். இது அநாகரிகமாக இருப்பதாக பலர் கூறி வந்தனர். இந்த நிலையில், அஜித் இந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.
ரசிகர்களின் இந்த செயல்பாடு பார்ப்பதற்கு அருவருப்பானதாகவும், இளைஞர்களிடமிருந்து இப்படி ஒரு கரகோஷம் எழுவது ஏமாற்றத்தை தருவதாகவும் அமைந்திருந்தது. பொதுவாக அடைமொழிகளில் அதிகமாக ஆர்வம் காட்டாத அஜித் தற்போது இதனை அறிக்கை வெளியிட்டு கண்டித்திருக்கிறார். ஆக இனிவரும் காலங்களில் இது போன்ற கரகோஷங்கள் எழுப்பப்படாது என்று நம்பலாம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்