பொங்கல் ரேஸில் இருந்து தள்ளிப் போன விடாமுயற்சி.. திட்டம் போட்டு அஜித்தை காலி செய்தனரா? பொங்கும் ரசிகர்கள்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பொங்கல் ரேஸில் இருந்து தள்ளிப் போன விடாமுயற்சி.. திட்டம் போட்டு அஜித்தை காலி செய்தனரா? பொங்கும் ரசிகர்கள்..

பொங்கல் ரேஸில் இருந்து தள்ளிப் போன விடாமுயற்சி.. திட்டம் போட்டு அஜித்தை காலி செய்தனரா? பொங்கும் ரசிகர்கள்..

Malavica Natarajan HT Tamil
Jan 01, 2025 07:54 AM IST

நடிகர் அஜித் குமாரை தயாரிப்பு நிறுவனமான லைகா திட்டம் போட்டு காலி செய்ததாக அவரது ரசிகர்கள் பொங்கி வருகின்றனர்,

பொங்கல் ரேஸில் இருந்து தள்ளிப் போன விடாமுயற்சி.. திட்டம் போட்டு அஜித்தை காலி செய்தனரா? பொங்கும் ரசிகர்கள்..
பொங்கல் ரேஸில் இருந்து தள்ளிப் போன விடாமுயற்சி.. திட்டம் போட்டு அஜித்தை காலி செய்தனரா? பொங்கும் ரசிகர்கள்..

இதனால், விடாமுயற்சி படம் குறித்தும் நடிகர் அஜித் குமார் குறித்தும் பல வதந்திகள் பரப்பப்பட்டது. இயக்குநருடன் அஜித்திற்கு சண்டை வந்ததால் தான் அஜித் வேண்டுமென்றே படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஷூட்டிங்கை வைத்துக் கொண்டு ஊர் ஊராக பைக்கிலும் காரிலும் சுற்றி வரவும் அதுதான் காரணம் என்றெல்லாம் கூறப்பட்டது.

வதந்திகள்

இதையடுத்து இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு படப்பிடிப்பு முழுமையாக முடிந்திருப்பினும் ரிலீஸில் அடுத்த சிக்கல் வந்தது. படப்பிடிப்புகள் எல்லாம் தாமதமாக முடிந்ததால் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இன்னும் முடியவில்லை. அதனால் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகலாம். அல்லது விடாமுயற்சி படத்திற்கு முன்னரே குட் பேட் அக்லி படம் வெளியாகலாம் என கூறப்பட்டு வந்தது.

விடாமுயற்சி அப்டேட்

இந்நிலையில். விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. அதுமட்டுமின்றி, அஜித் ரசிகர்கள் குஷியாக்கும் விதமாக டீசர், முதல் சிங்கிள் என அடுத்தடுத்த அப்டேட்களை கொடுத்து வந்தது.

லைகாவின் அதிர்ச்சி அறிவிப்பு

இந்த அறிவிப்புகளால் குஷியாக இருந்த அஜித் ரசிகர்களை ஒரே ட்விட் மூலம் ஆஃப் செய்துள்ளது லைகா தயாரிப்பு நிறுவனம். ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த கையோடு, அதே பதிவில் தவிர்க்க முடியாத காரணங்களால் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப் போகிறது என்றும் கூறி ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு ஆப்பு வைத்தது.

இதைக் கண்ட ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எங்களுக்கும் சில எதிர்பார்ப்பு இருக்கு

விடாமுயற்சி தள்ளிப்போன விரக்தியில் ரசிகர் ஒருவர், திரு அஜித்குமார், சுரேஷ் சந்திரா, மற்றும் பிடிச்சா மட்டும் படம் பாருன்னு சொல்றவங்களுக்கு தான் இந்த பதிவு. ஒரு அஜித் ரசிகனா எனக்கும் சில எதிர்பார்ப்பு இருக்கு. ஆனா, இங்க பல பேர் நீ அப்படி ஒநஅனும் படம் பாக்க வேண்டாம்ன்னு சொல்றாங்க.

இப்படி ஒவ்வொரு ரசிகரும் நெனச்சா நீங்க ஒரு ஸ்டார் நடிகரே கிடையாது. இப்ப கோடி கணக்குல சம்பாதிக்குற நீங்க ஆரம்பத்துலயும் இதே மாதிரி பேசியிருந்தா காணாம போயிருப்பீங்க. அதுக்காக நான் பெருசா எல்லாம் எதிர்பாக்கல, ஆனா ரசிகர்கள கேவலமா நடத்தாதீங்க. நானும் சொல்றேன். நீங்க போய் உங்க வேலைய பாருங்க. இனிமேல் நடிச்சு சம்பாதிக்காதிங்க என தனது ஆற்றாமையை வெளிப்படுத்தி உள்ளார்.

மக்களை திசை திருப்பும் முயற்சி

மற்றொரு நபர், எனக்கு மட்டும் தான் விடாமுயற்சி ரிலீஸ் தள்ளிப்போன செய்தி அண்ணா பல்கலைகழக பிரச்சனையிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக அறிவிக்கப்பட்டதாக தெரிகிறதா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

மோசமான தயாரிப்பு நிறுவனம்

மற்றொரு நபர், எனக்கு தெரிந்து கோலிவுட்டின் மிர மோசமான தயாரிப்பு நிறுவனமாக லைகா இரு்ககிறது. படத்திற்காக இது எந்த விளம்பரமும் செய்யவில்லை, முறையான விநியோகமும் இல்லை. இப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் ஆசையையும் கெடுத்துவிட்டது என திட்டி உள்ளார்.

பொங்கலுக்கு அப்டேட் கொடுங்க ப்ளீஸ்

இன்னொரு நபரோ, இசையமைப்பாளர் ஜி,வி. பிரகாஷிடம் அப்டேட் கேட்டு அழுதுள்ளார். விடாமுயற்சி படம் தள்ளி போய்விட்டது. அஜித்தின் படம் 2 வருடம் கழித்து தியேட்டருக்கு வரும் என நினைத்து சந்தோஷப்பட்டேன். ஆனால் ஏமாற்றம் தான் கிடைத்தது. அதனால், குட் பேட் அக்லி படத்தில் அப்டேட் ஆவது பொங்கலுக்கு கொடுங்கள். ப்ளீஸ் என இதயம் உடைந்து அழும் எமோஜியை பயன்படுத்தி உள்ளார்.

வருஷத்துல முதல் நாள் நல்ல செய்தி

மற்றொரு ரசிகர், லைகா புரொடக்ஷன்ஸை நல்லா இருடா.. வருஷத்துல முதல் நாள் நல்ல செய்தி என கடுப்பான முகத்துடன் உள்ள எமோஜியை பதிவிட்டுள்ளார்.

இன்னொருவர், இப்படி என்னை மனநிலை பாதிக்கப்படும் அளவிற்கு கொண்டு போயிட்டிங்களேன்னு அழும் எமோஜி பதிவிட்டுள்ளார்.

என்ன அப்டேட் கொடுத்தாலும் கொண்டாடுவாங்கன்னு நெனப்பு

அந்த வலைப்பேச்சு யூடியூப்ல அடிச்சு சொன்னாங்க படம் வராதுன்னு, இப்போ அது தான் நடந்திருக்கு. நீ எப்போ, என்ன அப்டேட் குடுத்தாலும் கொண்டாட ரசிகர்கள் இருக்காங்கன்ற நினைப்பு... அதான் இந்த திமிரு.. 2 படம் கைல வச்சிகிட்டு சரியா பிளான் பண்ண முடியலனா நீயல்லாம் எதுக்கு PRO னு???? என சுரேஷ் சந்திராவை திட்டியுள்ளார் ரசிகர் ஒருவர்

கருத்து சொல்ல ஒன்றும் இல்ல

நல்ல வேளை இந்த அறிவிப்பு வந்த சமயத்தில் நான் தூங்கிவிட்டேன். இது ஒரு மனவேதனையை தருகிறது. இதில் கருத்து சொல்ல எதுவும் இல்லை. இதை 2 நாட்களுக்கு முன்பே சொல்லி இருந்தால் என்ன? ஏன் புத்தாண்டு தினத்தில் சொல்ல வேண்டும் என கேள்வி எழுப்பி உள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.