Ajith: அமைதிக்கு முன் ஒரு புயல் - அஜித் புகைப்படம் வைரல்
நடிகர் அஜித் பைக் பயண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
நடிகர் அஜித் 3 ஆவது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் நடித்து வரும் படம் துணிவு.
இந்த படத்தில் நாயகியாக பிரபல நடிகை மஞ்சுவாரியர் நடிக்கிறார். வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், பாங்காங், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது.
இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் உள்ள பேங்காக்கில் நடைபெற்று வந்தது. தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அஜித் தாய்லாந்தில் மீண்டும் தன் பைக் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
அதில், ’அமைதிக்கு முன் ஒரு புயல்’ என குறிப்பிட்டுள்ளார். ஸ்டைலாக அஜித் புத்தர் முன்பு பைக்கில் அதில் நின்று கொண்டு இயற்கையை ரசிப்பது போல் உள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
முன்னதாக நடிகர் அஜித் பெல்ஜியம், லடாக், இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய இடங்களுக்கு பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்