தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Ajith Along With His Wife Shalini Went To Vetri Duraisamy House And Consoled Him

வெற்றி துரைசாமி மறைவு.. நெருங்கிய நண்பனை இழந்த சோகத்தில் அஜித்.. மனைவி ஷாலினியுடன் நேரில் அஞ்சலி!

Divya Sekar HT Tamil
Feb 13, 2024 04:53 PM IST

இமாச்சலப் பிரதேசத்தில் விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்கள் தேடுதலுக்குப்பின் மீட்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வெற்றி துரைசாமி வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார்.

நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வெற்றி துரைசாமி வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார்
நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வெற்றி துரைசாமி வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார்

ட்ரெண்டிங் செய்திகள்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் 200 மீட்டர் ஆழத்தில் சட்லஜ் நதியில் விழுந்தது. அதில் வெற்றி துரைசாமியையும், மற்றொரு பயணி பற்றியும் எந்தவொரு குறிப்பும் கிடைக்காமல் இருந்தது.

காசாவில் இருந்து சிம்லாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் தனது மகன் வெற்றி துரைசாமியைக் கண்டுபிடிப்பவர்களுக்கு, ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி அறிவித்து இருந்தார். இதனை கின்னார் துணை ஆணையர் அமித் குமார் சர்மாவும் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார். துரைசாமியும் தனது மகனை கண்டுபிடிக்க உதவுமாறு உள்ளூர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விபத்தினைத் தொடர்ந்து தேடுதல் குழுக்கள் ஆற்றங்கரையில் ஒரு சடலத்தின் எச்சங்களை மீட்டுள்ளன. மேலும் அவை டி.என்.ஏ பிரித்தெடுத்தல் மற்றும் பகுப்பாய்வுக்காக ஜுங்காவில் உள்ள மாநில தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். இந்த எச்சங்கள் காணாமல் போனவருடையதாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அது டி.என்.ஏ.பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடலை 8 நாட்களுக்குப் பிறகு, நேற்றைய தினம் சட்லஜ் நதியில் இருந்து மீட்புப் படையினர் மீட்டர். பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக வெற்றியின் உடல் ரெகாங்புவாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னை நந்தனம் சிஐடி நகர் பகுதியில் உள்ள இல்லத்தில் இன்று மாலை 5 மணி அளவில் வெற்றிதுரைசாமியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனவும், 6 மணி அளவில் கண்ணம்மா பேட்டை மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெற்றி துரைசாமியின் நண்பரான அஜித் தனது மனைவி ஷாலினியுடன் சைதை துரைசாமியின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறியுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் வெற்றி துரைசாமியின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.