2024 Box Office: புஷ்பா மட்டும் இல்லைன்னா.. கொண்டாடும் இந்தி சினிமா! சரிவைக் குறைக்க உதவிய படங்கள்..
2024 Box Office: 2024 ஆம் ஆண்டில் இந்திய சினிமா அதன் வணிகத்தில் 3% சரிவைக் கண்டுள்ளது. குறிப்பாக இந்தி படங்களின் பங்கு வெகுவாக குறைந்துள்ளதாகவும், ஹாலிவுட் படங்கள் பாதிப்பு அதிகளவு பாதிப்படைந்துள்ளதாகவும் அறிக்கை வெளியாகியுள்ளது.

2024 Box Office: 2024 ஆம் ஆண்டில் இந்திய சினிமா அதன் வணிகத்தில் 3% சரிவைக் கண்டுள்ளது. குறிப்பாக இந்தி படங்களின் பங்கு வெகுவாக குறைந்துள்ளதாகவும், ஹாலிவுட் படங்கள் பாதிப்பு அதிகளவு பாதிப்படைந்துள்ளதாகவும் அறிக்கை வெளியாகியுள்ளது.
2024ம் ஆண்டு பல பெரிய பட்ஜெட் படங்கள் வெளியானது. அதில் சில பாக்ஸ் ஆபிஸில் அற்புதமான வெற்றியைப் பெற்றன, மற்றவை திரையரங்கை விட்டு விரைவாக வெளியேறின.
ஓர்மேக்ஸ் மீடியா அறிக்கை
ஓர்மேக்ஸ் மீடியாவின் சமீபத்திய அறிக்கையின்படி, 2024ம் ஆண்டு வெளியான படங்களில் மூன்று படங்களால் மட்டுமே ரூ .500 கோடி எனும் மைல்கல்லை தாண்ட முடிந்தது. அவற்றில் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2: தி ரூல் படம் 2024 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படமாக உருவெடுத்தது.
பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் கார்டு
திங்களன்று, ஆர்மேக்ஸ் மீடியா பாக்ஸ் ஆபிஸ் அறிக்கை: 2024 ஐ வெளியிட்டது. 2024 ஆம் ஆண்டில் இந்திய பாக்ஸ் ஆபிஸ் மொத்தமாக ரூ.11,833 கோடி வசூலித்தது. இது இந்திய பாக்ஸ் ஆபிஸின் கடந்த கால வசூலை காணும்போது, இது இரண்டாவது சிறந்த ஆண்டாக மாறியுள்ளது. முதலாவதாக 2023 ஆம் ஆண்டு இந்திய சினிமா ரூ. 12,226 கோடியாக வசூலித்ததே அதிகம்.
1000 கோடியை தாண்டிய படங்கள்
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024ம் ஆம்டு 3% சரிவை சந்தித்துள்ளது. இருந்தபோதிலும், 2019, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து ₹10,000 கோடியைத் தாண்டிய நான்காவது ஆண்டையும் இது குறிக்கிறது.
அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் புஷ்பா 2: தி ரூல் 2024 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படமாக உருவெடுத்தது. மொத்த பாக்ஸ் ஆபிஸ் ரூ .1,403 கோடியாக இருக்கிறது. அதில் டப்பிங் செய்யப்பட்ட இந்தி பதிப்பு ரூ .889 கோடியை வசூலித்து. இது அனைத்து மொழிகளை விடவும் அதிகம் என்பது புதிய சாதனை ஆகும்.
500 கோடியை தாண்டிய படங்கள்
இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ .500 கோடியைத் தாண்டிய படங்களாக புஷ்பா 2: தி ரூல், கல்கி கி.பி 2898 மற்றும் ஸ்திரி 2 ஆகியவை மட்டுமே இடம்பெற்றது. ஜூனியர் என்.டி.ஆரின் தேவாரா - பகுதி 1, கார்த்திக் ஆரியனின் பூல் புலைய்யா 3 மற்றும் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ஆகியவை ரூ .300 கோடிக்கு மேல் வசூலித்த மற்ற மூன்று படங்களாகும்.
இருப்பினும், மலையாள சினிமா ஒரு பிரேக்அவுட் ஆண்டைக் கொண்டிருந்தது. 2023ம் ஆண்டு 5% ஆக இருந்த அதன் பங்கை 2024 ம் ஆண்டு10% ஆக இரட்டிப்பாக்கியது. குஜராத்தி சினிமாவும் அதன் மொத்த பாக்ஸ் ஆபிஸ் புள்ளிவிவரங்களில் 66% அதிகரித்து வளர்ச்சியைக் கண்டது.
இந்தி திரைப்படங்கள் போராட்டம்
அதே சமயம், இந்தி மொழி சினிமா ஒரு சவாலான ஆண்டை எதிர்கொண்டது. மொத்த பாக்ஸ் ஆபிஸில் 40% பங்களிப்பை மட்டுமே இந்தி சினிமா வழங்கியது, இது 2023இல் 44% பங்கிலிருந்து குறைந்தது. குறிப்பாக, இந்தி சினிமாவின் வசூலில் 31% தென்னிந்திய படங்களின் டப்பிங் பதிப்புகளிலிருந்தே பெற்றது. புஷ்பா 2: தி ரூல் (இந்தி) மற்றும் ஸ்ட்ரீ 2 இந்தி பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்த படங்களாக மாறிய போதிலும், 2024 ஆம் ஆண்டில் இந்தி சினிமாவின் ஒட்டுமொத்த வசூல் 13% குறைந்துள்ளது. இது 2019ம் ஆண்டை விட குறைவாக உள்ளது.
சரிவை குறைக்க உதவிய டப்பிங் படங்கள்
அசல் இந்தி மொழிப் படங்களை மட்டும் கருத்தில் கொண்டால், பாக்ஸ் ஆபிஸில் சரிவு 37% ஆகும். டப்பிங் செய்யப்பட்ட தலைப்புகளின் செயல்திறன், குறிப்பாக புஷ்பா 2: தி ரூல் மற்றும் கல்கி கி.பி 2898, ஒட்டுமொத்த சரிவைக் குறைக்க உதவியது.
பார்வையாளர்களைப் பொறுத்தவரை, இது 2024 இல் 16% சரிந்தது. 2023 ஆம் ஆண்டில் 16 படங்களுடன் ஒப்பிடும்போது, ஆறு அசல் இந்தி மொழி படங்கள் மட்டுமே இந்த ஆண்டு ரூ .100 கோடிக்கு மேல் வசூலிக்க முடிந்தது.
ஹாலிவுட் சரிவைக் காண்கிறது
பெரும்பாலான பிற மொழிகள் சரிவைச் சந்தித்தாலும், ஹாலிவுட் இந்த ஆண்டு மிக மோசமான வீழ்ச்சியைக் கண்டது. இது 17% ஆக தன்னை சுருக்கியது. 2023 ஆம் ஆண்டில் 9% ஆக இருந்த பங்கு தற்போது 8% ஆக குறைந்தது, அதன் வருவாய் 17% குறைந்து ரூ .941 கோடியாக இருந்தது.
முஃபாசா: தி லயன் கிங் (ரூ .178 கோடி), டெட்பூல் & வால்வரின் (ரூ .160 கோடி) மற்றும் காட்ஜில்லா x காங்: தி நியூ எம்பயர் (ரூ .133 கோடி) போன்ற படங்கள் முதல் 3 இடத்தில் உள்ளன. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, இந்தியாவில் எந்த ஹாலிவுட் படமும் ரூ .200 கோடியைத் தாண்டவில்லை, மூன்று படங்கள் மட்டுமே ரூ .100 கோடியைத் தாண்டியுள்ளன.
ஹாலிவுட்டின் பலவீனமான ஆண்டு
வெனம்: தி லாஸ்ட் டான்ஸ், குங் ஃபூ பாண்டா 4, டெஸ்பிகபிள் மீ 4, கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ், மோனா 2, டூன்: பார்ட் டூ மற்றும் இன்சைட் அவுட் 2 ஆகியவை சிறப்பாக செயல்பட்ட மற்ற படங்கள். வெறும் 3.8 கோடியில் பார்வையாளர்களுடன், 2024ம் ஆண்டை கடந்ததால் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் ஹாலிவுட்டின் பலவீனமான ஆண்டாக இது உள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்