சோப் போட்டு மேக்கப் கலைப்பு.. எல்லார் முன்னாடியும் திட்டு.. பொளபொளன்னு வந்த கண்ணீர்.. இயக்குநர் பாலா பற்றி அபிதா பகிர்வு
சோப் போட்டு மேக்கப் கலைப்பு.. எல்லார் முன்னாடியும் திட்டு.. பொளபொளன்னு வந்த கண்ணீர்.. இயக்குநர் பாலா பற்றி அபிதா பகிர்வு
வணங்கான் படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழாவும், பாலா திரைத்துறைக்கு அறிமுகமாகியதன் 25ஆம் ஆண்டு விழாவும், சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
அப்போது அந்நிகழ்வில் கலந்துகொண்ட நடிகைகள் வரலட்சுமி, அபிதா, வேதிகா ஆகியோர் மேடையில் பேசியதின் தொகுப்பைக் காணலாம். அப்போது பேசிய,
வரலட்சுமி: முதலில் ஒரு கேள்வி. சரக்கு கிடைக்குமா சார். இந்த டயலாக் இன்னைக்கு வரைக்கும் வைரலாகப் போயிட்டு இருக்கு. கடபுட கடபுடன்னு இப்போ எதுவும் வாயில் வரமாட்டியுது.
பாலா: ஏதாவது இவள் பேசுறது புரியுதா?
வரலட்சுமி: சார் படத்திலேயே புரியல. அதுதான் சார் ஹிட்டாச்சு. அருணுக்கு முதல் வாழ்த்து. எல்லோரும் படிப்படியாக ஏறிவருவாங்க. இப்போது நீங்கள் உச்சத்தில் இருக்கீங்கன்னு நினைக்கிறேன். இன்னொரு சந்தோஷமான விஷயம். பாலா சார் எங்கம்மாவை படத்தில் அறிமுகப்படுத்தியிருக்காங்க. எங்கம்மா நல்ல நடிச்சதாக சொன்னாங்க. என்னுடைய நடிப்பு அவங்களிடம் இருந்து எனக்கு வந்திருக்கலாம்.
அவரைப் பத்தி சொல்லணும்னா, என்னுடைய குரு. என்னுடைய முதல் படம் போடா போடி. ஆனால், என்னை நடிகையாக அறிமுகம் செய்தது தாரை தப்பட்டை தான். நிறைய தடவை சொல்லியிருக்கேன். உங்களுக்கு ஒரு கிட்னி வேணும்னா, என்னுடைய கிட்னி ஒன்றை எடுத்துக்கங்கன்னு சொல்லியிருக்கேன். அது உண்மை. எனக்கு அப்பா போன்றவர். இரண்டே இரண்டு பேர் தான், நான் போன் பண்ணுனால், எழுந்து நின்று பதில் சொல்வேன். ஒன்னு எங்க அப்பா, இன்னொன்னு பாலா சார்.
சோப் போட்டு மேக்கப் கலைப்பு - அபிதா
அபிதா: பாலா சாரை பார்க்கும்போது சேது படத்தின் ஆடிசன், சூட்டிங் அதுதான் ஞாபகத்துக்கு வருது. நான் சின்ன சின்ன கேரக்டர் பண்ணிட்டு இருந்தேன். முதல்தடவை, ஹீரோயின் ரோல் இருக்குன்னு பாலா சார் ஆபிஸில் இருந்து போன் பண்ணுனாங்க. முதல்முறை ஹீரோயின் என்று சொன்னவுடன் நல்ல மேக்கப், நல்ல டிரெஸ்ஸிங் எல்லாம் பண்ணிட்டுப் போயிருந்தேன். போனவுடன், ஒரு கையில் சோப், டவுல் கொடுத்து முகம் கழுவிட்டு வாம்மான்னு சொன்னார். ஏன் சார்னு கேட்டேன். என்னோட படத்தில் மேக்கப்பே இருக்கக் கூடாது. எப்படியிருப்பீங்களோ, அதே மாதிரி இருந்தால்போதும்னு சொன்னாங்க. அப்பவே சார்கிட்ட ஏதோ ஒரு விஷயம் இருக்குன்னு நினைச்சேன். அதற்கப்புறம், செட்யூல் போயிட்டே இருந்தது. முதல் வாரமாக ஃபுல் அந்த கானா சாங் போயிட்டு இருந்தது. அதற்கப்புறம் தான், மெல்ல மெல்ல ஆரம்பிச்சாங்க என்னோட சீன்ஸ் எல்லாம். என்னோட அறிமுக சீனில் டான்ஸ் எனக்கு வரல.
எல்லோர் முன்பும் பயங்கரமான திட்டு: பாலா
எல்லோர் முன்னாடியும் பயங்கரமா திட்டிட்டார். நானும் எல்லோர் முன்னாடியும் பயங்கரமா அழுதிட்டேன். அப்ப என்ன சொன்னார்னா, உன்னுடைய நல்லதுக்காக தான் நான் சொல்றேன். நீ பெரிய ஆளாக வரணும். படம் சக்ஸஸ் ஆகணும். உனக்கும் இது ஃபர்ஸ்ட் படம். எனக்கும் இது ஃபர்ஸ்ட் அப்படின்னு சொன்னார். அவரும் நானும் ஜாஸ்தி பேசமாட்டோம். ஹாய், பாய் அவ்வளவு தான். ரொம்ப நன்றி சார். நீங்கள் வாய்ப்பு கொடுத்ததால் தான், இவ்வளவு பெரிய மேடையில் வந்து நிக்கமுடிஞ்சது. இந்த 25 வருஷம் மட்டுமில்லை, 50ஆவது வருஷம் உங்களுக்கு கொண்டாடும்போதும், எனக்கு ஆயுசு இருந்தால் நான் கண்டிப்பாக வருவேன்.
இயக்குநர் பாலா பற்றி வேதிகா சொன்னது:
வேதிகா: நான் தமிழ் சினிமா நடிகையாக வரல. பாலா சாரின் மாணவியாக வந்திருக்கிறேன். அதில் எனக்கு ரொம்ப ரொம்ப பெருமையாக இருக்கு. என்னுடைய கேரியரில் பரதேசி படத்துக்குப் பின், வித்தியாசத்தைப் பார்க்கமுடியும். பரதேசி படத்துக்குப் பின் நடித்த ஃபெர்மான்ஸ் சார்ந்த படங்கள், பாலா சார் இயக்கிய பரதேசியால் தான் கிடைச்சிருக்கு. சென்னையைவிட்டுக் கிளம்பும்போது, பாலா சார் கூட படம் பண்ணுனதை நினைச்சுட்டுதான் போவேன். வணங்கான் படக்குழுவுக்கு வாழ்த்துகள்'’ எனத் தெரிவித்தார்.
டாபிக்ஸ்