Abishek Raja: ‘அவளையும், இவளையும் ஒப்பிட முடியாது.. சீக்கிரமே அப்பா ஆகணும்னு ஆசை வந்திருச்சு’ - அபிஷேக் ராஜா!
Abishek Raja: “இன்னும் ஓப்பனாக சொல்ல வேண்டும் என்றால், எனக்கு கூடிய சீக்கிரமே அப்பாவாக வேண்டும் என்று ஆசை வந்து விட்டது. அப்படி ஆவதற்கு இந்த சமுதாயம் நிச்சயமாக கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.” - அபிஷேக் ராஜா!

Abishek Raja: யூடியூப்பில், பல திரைப்படங்களை விமர்சனம் செய்து பிரபலமானவர் அபிஷேக்ராஜா.அதில் கிடைத்த பிரபலத்தின் வாயிலாக, பிக்பாஸ் தமிழ் 5 ஆவது சீசனிலும் போட்டியாளராக களமிறங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. வீட்டிற்குள் அவர் சக போட்டியாளர்களுடன் நடந்து கொண்ட விதமும், பேசிய வார்த்தைகளும் மக்களிடம் கடுமையான விமர்சனங்களை பெற்றன.
நெட்டிசன்கள் இவர் பேசுவதை க்ரிஞ்ச் என்று கூறி ட்ரோல் செய்தனர். இதனையடுத்து அவர் அவர் பிக்பாஸில் நுழைந்த 21ம் நாள் வெளியேற்றப்பட்டார். தற்போது, அபிஷேக் ராஜா ஜாம் ஜாம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாக இருக்கிறார். இந்தப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். இதற்கிடையே அவர், அண்மையில் தன்னுடைய காதலியான சுவாதி நடராஜனை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், அபிஷேக் ராஜாவும், சுவாதி நாகராஜனும் அண்மையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்தனர்.
அந்த பேட்டியில் இருவரும் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் இங்கே!
சுவாதி: அபிஷேக் என்னுடன் பழகிய ஒன்றரை வருடத்தில், இரண்டு வருடம் கழித்து நாம் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டார். இதை அவர் கேட்ட உடன், என்னுடன் பழகி கொண்டிருந்த இவர், யார் என்று எனக்குள்ளேயே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன். பொதுவாகவே எனக்கு கடவுள் சிவன் மீது பற்று அதிகம்.
சிவன் அனுப்பி வைத்த ஆள்
அன்று அவர் அப்படிக் கேட்ட உடனே, எனக்கு சிவன் அனுப்பி வைத்த ஆள் இவர்தான் போல என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.
அபிஷேக்: எனக்கு விவாகரத்து ஆன பின்னர், என்னுடைய வாழ்க்கையில், நானும் சுவாதியும் நண்பர்களாக பழகி வந்தோம். அப்போது ஒரு டைம் லைனில், ஒருவருக்கொருவர் காதலை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டோம்.
இன்னும் ஓப்பனாக சொல்ல வேண்டும் என்றால், எனக்கு கூடிய சீக்கிரமே அப்பாவாக வேண்டும் என்று ஆசை வந்து விட்டது. அப்படி ஆவதற்கு இந்த சமுதாயம் நிச்சயமாக கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. அதனால்தான் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்தேன். சுவாதிக்கு பொசசிவ்னஸ் மிகவும் அதிகம்.
உண்மையான அன்பு
அவளிடம் எனக்கு பிடித்தது அவள் செலுத்தும் உண்மையான அன்பு. அது அன்பாக இருந்தாலும், வெறுப்பாக இருந்தாலும், அது 100% அவளிடமிருந்து வரும். இந்த உலகத்தில் வாழும் அனைவரும், ஏதோ ஒரு எதிர்பார்ப்புடனேயே பிறரிடம் பழகுவார்கள். ஆனால் சுவாதி அப்படி கிடையாது. அவள் என்னிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகினாள்.
நான் என்னுடைய கடந்த கால மனைவியான தீபாவையும் தற்போது இருக்கும் சுவாதியையும் ஒப்பிட விரும்பவில்லை. ஆனால், எனக்கு இந்த மாதிரியான ஒரு பெண்ணை அடைவதற்கு தகுதி இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நான் என்னையே படிப்படியாக மாற்றிக்கொண்டு இவளை அடைந்திருக்கிறேன்” என்று பேசினார்
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்