தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthikai Deepam: சொத்தை பிரிக்கும் அபிராமி.. தீபா சொன்ன வார்த்தை - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Karthikai Deepam: சொத்தை பிரிக்கும் அபிராமி.. தீபா சொன்ன வார்த்தை - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 12, 2024 04:29 PM IST

சொத்தை பிரிப்பது பற்றி அபிராமி கூறியதற்கு தீபா சொன்ன வார்த்தையும், அருண் ஐஸ்வர்யாவும் பேசிக்கொள்ளும் விஷயமும் கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில் இடம்பெறவுள்ளது.

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி வீட்டுக்கு வர தீபா ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்கும் காட்சி இடம்பிடித்தது. இதையடுத்து இன்று நாளில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, தீபாவிடம், "நீ இந்த குடும்பத்துக்காக செய்த தியாகத்தை எல்லாம் நான் புரிஞ்சுகிட்டேன். நானே தேடி இருந்தா கூட இந்த மாதிரி ஒரு பொண்ணு கார்த்திக்கு கட்டி வச்சிருக்க முடியாது அவனுக்கு ஏத்தவன் நீ தான்" என்று சொல்லும் அபிராமி, தீபாவை தன் மகனாக ஏற்றுக் கொள்கிறாள்.

பிறகு மீனாட்சி பார்த்து உனக்குத்தான் என்ன சொல்றதுன்னு தெரியல என்று வருத்தப்படுகிறார். என்னைக்கு இருந்தாலும் நீ தான் என் மருமக என்று சொல்ல, மீனாட்சி நீங்கதான் என்னுடைய அத்தை என்று சொல்கிறாள்.

அதனைத் தொடர்ந்து அபிராமி சொத்தை பிரிக்கப் போவதாக சொல்கிறாள். பிறகு ஆனந்த் மற்றும் ரியா காஸ்மெடிக் கம்பெனி, இந்த வீடு எல்லாம் நமக்கு வரணும் என பேசிக் கொள்கின்றனர். இதை அடுத்து அருண் ஐஸ்வர்யாவும் பேசிக்கொள்கிறார்கள். அப்போது, ஐஸ்வர்யா நமக்கு சின்ன கம்பெனி போதும், ஆனா இந்த வீட்டை மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது அதுதான் நம்முடைய அடையாளம் நீங்க கேக்கலனாலும் நான் இந்த வீட்ட கேட்கலனாலும் என்று சொல்கிறாள்.

பிறகு கார்த்திக் சொத்து பிரிப்பது பற்றி பேசி வருத்தப்படும் தீபா, யார் என்னை கேட்டாலும் சரி அத்தையும் மாமாவையும் நாம விட்டுக் கொடுக்கக் கூடாது, அவங்க நம்பக் கூட தான் இருக்கணும் என்று சொல்கிறாள்.

மறுநாள் லாயர் வீட்டுக்கு வருகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் காணத் தவறாதீர்கள்.

நேற்றைய எபிசோடில் நடந்தது

வீட்டுக்கு வரும் கார்த்திக், அம்மாவோட இந்த நிலைமைக்கு ஐஸ்வர்யா அண்ணி தான் காரணம், அவங்க தான் எல்லா வேலையும் பண்ணி இருக்காங்க என்று சொன்னதும், அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஐஸ்வர்யா எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, என்னை உனக்கு பிடிக்காது என்பதால், தேவையில்லாமல் பழி போடாத என்று வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறாள்.

கார்த்திக்கோ, அண்ணி எனக்கு எல்லாமே தெரியும், தயவு செய்து பொய் சொல்லிட்டு இருக்காதீங்க என்று சொல்ல, ஐஸ்வர்யா ஆதாரம் இல்லாமல் எதுவும் பேசாத என்று சாடுகிறாள். அந்த நேரம் போலீஸ் வீட்டுக்கு வந்து, ஐஸ்வர்யா வாட்ஸ் சப் காலில் பேசிய அனைத்து ரெக்கார்டும் இருக்கிறது என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றனர்.

ஐஸ்வர்யாவை காப்பாற்ற ராஜேஸ்வரி நான் தான் எல்லாத்தையும் பண்ணேன், என் பொண்ணை அவங்க அடிச்சதால் அந்த கோபத்தில் இப்படி பண்ணிட்டேன் என்று சொல்ல, கார்த்திக் அதை நம்ப மறுக்கிறான், எல்லோரும் கேள்வி கேட்க ஐஸ்வர்யாவும் ஏன் மா இப்படி பண்ணீங்க என்று கேள்வி கேட்டு டிராமா போடுகிறாள். இதனையடுத்து போலீஸ் ராஜேஸ்வரியை கைது செய்து ஜெயிலில் அடைக்கிறது.

பிறகு ஐஸ்வர்யா ஸ்டேஷனுக்கு வந்து அம்மாவிடம் நல்ல வேளை என்னை காப்பாத்தீட்டீங்க, இல்லனா என் வாழ்க்கையே போய் இருக்கும் என்று சொல்கிறாள். அதனை தொடர்ந்து ஐஸ்வர்யா அந்த தீபாவையும், கார்த்தியையும் சும்மா விட மாட்டேன் என்று சொல்ல, ராஜேஸ்வரி எதுவும் செய்து மாட்டிக்காத என்று எச்சரிக்கிறாள்.

மறுபக்கம் அபிராமி கண் விழிக்க, கார்த்திக் ஏன் மா இப்படி பண்ணீங்க என்று கேள்வி கேட்கிறான்.

கார்த்திகை தீபம் சீரியல்

இந்த சீரயலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் , அர்திகா பிரதான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். விசித்ரா, மீரா கிருஷ்ணன், நடிகர் ராஜேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்தித்தில் தோன்றுகிறார்கள். விஜயகுமார், வனிதா விஜயகுமார், வடிவுக்கரசி சிறப்பு வேடத்தில் நடிக்கிறார்கள்.

தமிழ் டிவி சீரியல்கள் அதிகம் பேரால் பார்த்து ரசிக்ககூடிய கார்த்திகை தீபம் சீரியல் 2022 முதல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. ஜீ பங்களா டிவியில் ஒளிபரப்பான கிருஷ்ணாகோயில் சீரியலின் ரீமேக்காக கார்த்திகை தீபம் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே  உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்