தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Abirami Escapes From Villian Gang And Met An Accident, Know About Karthigai Deepam Today Episode

Karthigai Deepam: ரவுடியின் பிடியில் இருந்து தப்பி விபத்தில் சிக்கிய அபிராமி! அடுத்து நடக்க போவது என்ன?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 04, 2024 04:36 PM IST

ரவியின் பிடியில் இருந்த அபிராமி, அங்கிருந்து எஸ்கேப் ஆகி தப்பிக்கும் போது விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார். கார்த்திக் அவரை சென்றனைந்தாரா என்பதை காட்டும் விதமாக பரபரப்பான காட்சிகளுடன் இன்றையை கார்த்திகை தீபம் எபிசோட் ஒளிபரப்பாகவுள்ளது.

கார்த்திகை தீபம் சீரியலில் நடிகை அர்திகா
கார்த்திகை தீபம் சீரியலில் நடிகை அர்திகா

ட்ரெண்டிங் செய்திகள்

அபிராமி எஸ்கேப்

அதாவது, கார்த்திக் போலீசுடன் அபிராமியை அடைத்து வைத்திருக்கும் குடோனுக்கு கிளம்பி வருகிறான். இங்கே அபிராமி தண்ணீர் வேண்டும் என்று சொல்லி கேட்க ரவுடி ஒருவன் கட்டை அவிழ்த்து விட்டு தண்ணீர் கொடுக்க அபிராமி அவனை கட்டையால் அடித்து விட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிறாள்.

இதனையடுத்து மெய்ன் ரவுடிக்கு இந்த விஷயம் தெரிய வர அவனும் அபிராமியை துரத்தி வர போலீசுடன் குடோனுக்கு வந்த கார்த்திக் அபிராமியை தேடி பார்க்கிறான். அங்கு அபிராமி இல்லாத நிலையில், அங்கு இருக்கும் தடயங்களை வைத்து இப்போ தான் தப்பி சென்றிருக்கணும் என்று முடிவெடுத்து அபிராமியை தேடுகின்றனர்.

விபத்தில் சிக்கும் அபிராமி

மறுபக்கம் தப்பி ஓடி வரும் அபிராமி ரோட்டை அடைந்து விட எதிர்பாராத விதமாக ஒரு வண்டி இடித்து விட விபத்தில் சிக்கி சரிந்து விழுகிறாள். உடனே அங்கிருந்தவர்கள் அவரை ஹாஸ்பிடலுக்கு ஏற்றி அனுப்பி வைக்க முயற்சிக்கிறார்கள்.

அப்போது அந்த வழியாக வரும் ஆட்டோவை கை காட்டி நிறுத்துகிறார்கள். அந்த ஆட்டோ ட்ரைவர் கார்த்திக் பாட வைத்த துப்புரவு பணியாளர் பெண் ராணியின் கணவர் தான்.

ஆனால் அவருக்கு அபிராமியை பற்றி தெரியாத காரணத்தால் ஹாஸ்பிடலில் கொண்டு வந்து அட்மிட் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறான். இப்படியான நிலையில் பரபரப்பு காட்சிகளுடன் அடுத்து நடக்க போவது என்ன என்பது இன்றை எபிசோடில் இடம்பெற இருக்கிறது.

அபிராமிக்கு என்ன நடந்தது, அவள் இருக்கும் ஆஸ்பிடலை கார்த்திகை அடைந்தாரா, வில்லன் கும்பல் மீண்டும் அபிராமியை பிடித்ததா என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு காண தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம் சீரயல்

இந்த சீரயலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் , அர்திகா பிரதான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். விசித்ரா, மீரா கிருஷ்ணன், நடிகர் ராஜேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்தித்தில் தோன்றுகிறார்கள். விஜயகுமார், வனிதா விஜயகுமார், வடிவுக்கரசி சிறப்பு வேடத்தில் நடிக்கிறார்கள்.

தமிழ் டிவி சீரியல்கள் அதிகம் பேரால் பார்த்து ரசிக்ககூடிய கார்த்திகை தீபம் சீரியல் 2022 முதல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. ஜீ பங்களா டிவியில் ஒளிபரப்பான கிருஷ்ணாகோயில் சீரியலின் ரீமேக்காக கார்த்திகை தீபம் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்