Bhimsingh Memorial Day: இவர் உருவாக்கிய கதாபாத்திரத்துக்கு மதிப்பு தர சிவாஜி-சாவித்திரி எடுத்த முடிவு
பாவ மன்னிப்பு, பாசமலர், படிக்காத மேதை, பந்த பாசம், பார்த்தால் பசிதீரும், பாலும் பழமும் என பல படங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம்.

ஏ. பீம்சிங் தமிழ் சினிமாவில் முக்கியமாக பணியாற்றிய படைப்பாளி ஆவார். தமிழ் மட்டுமின்றி, இந்தியில் 18 படங்களும், தெலுங்கில் 8 படங்களும், மலையாளத்தில் 5 படங்களும், கன்னடத்தில் 1 படமும் என பிற மொழிகளில் படங்களை உருவாக்கியுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அவர், 1940களின் பிற்பகுதியில் திரைப்படத் தயாரிப்பாளரான கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோருடன் உதவி எடிட்டராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.
பின்னர், அவர் உதவி இயக்குநரானார். அதைத் தொடர்ந்து காலம் போற்றும் படங்களை இயக்கிய இயக்குநர் ஆனார். அவரது படங்கள் முக்கியமாக குடும்பம் மற்றும் உறவுகளை கையாள்கின்றன. சிவாஜி கணேசனை வைத்து 'ப, பா' என தலைப்பு தொடங்கும் படங்களை இயக்கியவர்.
பாவ மன்னிப்பு, பாசமலர், படிக்காத மேதை, பந்த பாசம், பார்த்தால் பசிதீரும், பாலும் பழமும் என பல படங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம்.
இவரது மகன்கள் பி.லெனின் பிரபல படத்தொகுப்பாளர், பி.கண்ணன் பிரபல கேமரா மேன் ஆவர். இவர் இயக்கிய படங்களில் முத்திரை பதித்த சில படங்கள் குறித்துப் பார்ப்போம்.
களத்தூர் கண்ணம்மா: 1960ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிவர் கமல்ஹாசன். இளம் வயதில் பிரியும் தம்பதியினருக்கு ஒரு மகன் இருந்து, அவர் அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தால் என்னாகும் என்பதை சொன்னது இப்படம். ஆகவே, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் வெற்றிபெற்றது. இப்படத்தில் நடித்தமைக்காக கமல்ஹாசனுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
பாச மலர்
அண்ணன் - தங்கைப் பாசத்தினை மிகவும் எமோஷனலாகப் பதிவு செய்த படம், பாசமலர். இப்படத்தில் அண்ணனாக சிவாஜி கணேசனும் தங்கையாக சாவித்திரியும் நடித்திருந்தனர்.
இப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானவுடன், இருவரும் ஜோடி சேர்ந்து நடிப்பது இல்லை என முடிவு எடுத்தனர். அந்தளவுக்கு அவர்களும் பாசமலர் கதாபாத்திரங்களுக்கு மதிப்பளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் இடம்பெற்ற ‘மலர்ந்தும் மலராத பாதி பலர்’ போன்ற என்னும் பாடல் அண்ணன் தங்கை பாசத்தையும், ’வாராயோ தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ' என்னும் பாடல் இன்றைய திருமணங்களில் பெண் அழைப்பின் போதும் ஒலிபரப்பப்படுகின்றன.
இப்படி காலம்போற்றும் படங்களை உருவாக்கிய இயக்குநர் பீம்சிங்கின் நினைவு நாள் இன்று.
