‘படைப்பாற்றல் பேர்ல ரஹ்மான் செஞ்ச விஷயம்.. இரவு 2 மணிக்கு ஸ்டியோவுக்கு கூப்பிட்டார்.. நான் என்ன பைத்தியமா? - அபிஜீத்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘படைப்பாற்றல் பேர்ல ரஹ்மான் செஞ்ச விஷயம்.. இரவு 2 மணிக்கு ஸ்டியோவுக்கு கூப்பிட்டார்.. நான் என்ன பைத்தியமா? - அபிஜீத்

‘படைப்பாற்றல் பேர்ல ரஹ்மான் செஞ்ச விஷயம்.. இரவு 2 மணிக்கு ஸ்டியோவுக்கு கூப்பிட்டார்.. நான் என்ன பைத்தியமா? - அபிஜீத்

Kalyani Pandiyan S HT Tamil
Jan 04, 2025 09:03 PM IST

நள்ளிரவு 2 மணிக்கு என்னை ஸ்டுடியோவுக்கு வரச்சொன்னார்கள்; நான் என்ன பைத்தியமா? நான் தூங்கிவிட்டேன் என்று கூறிவிட்டேன். அதனை தொடர்ந்து, நான் காலையில் சென்றேன்; ஆனால் ரஹ்மான் அங்கு இல்லை. - அபிஜீத்

‘படைப்பாற்றல் பேர்ல ரஹ்மான் செஞ்ச விஷயம்.. இரவு 2 மணிக்கு ஸ்டியோக்கு  கூப்பிட்டார்.. நான் என்ன பைத்தியமா? - அபிஜீத்
‘படைப்பாற்றல் பேர்ல ரஹ்மான் செஞ்ச விஷயம்.. இரவு 2 மணிக்கு ஸ்டியோக்கு கூப்பிட்டார்.. நான் என்ன பைத்தியமா? - அபிஜீத்

தமிழில் ‘என்ன விலை அழகே’ பாடலாக வெளியான இந்தப்பாடலை உன்னிக்கிருஷ்ணன் பாடியிருந்தார். இந்தப்பாடலுக்கு பிறகு, ஏ.ஆர்.ரஹ்மானும் அபிஜீத்தும் இணைண்ட்இல்லை. இந்த நிலையில், இது குறித்து அவர் தனியார் சேனல் ஒன்றிற்கு பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, ‘ நான் என்னுடைய மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தேன். நானும் அவருடன் இணைந்த பாடலுக்கு அவரிடம் இருந்து அழைப்பு வந்த போது, ஹோட்டலில் அவருக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது; ஒரு கட்டத்தில், இனியும் காத்திருக்க கூடாது என்று முடிவு செய்தேன். மேலும் அங்கிருந்தவர்களிடம் காலையில் பதிவு செய்யலாம் என்று சென்றேன்.

 

2 மணிக்கு அழைப்பு வந்தது!

இந்த நிலையில், நள்ளிரவு 2 மணிக்கு என்னை ஸ்டுடியோவுக்கு வரச்சொன்னார்கள்; நான் என்ன பைத்தியமா? நான் தூங்கிவிட்டேன் என்று கூறிவிட்டேன்.

அதனை தொடர்ந்து, நான் காலையில் சென்றேன்; ஆனால் ரஹ்மான் அங்கு இல்லை. வழக்கமான நேரங்களில் வேலை செய்யும் பழக்கம் இவர்களுக்கு இருப்பதில்லை. நான் ஒரு முறையான நேரத்தில் வேலை செய்ய பழக்கப்பட்டவன்; படைப்பாற்றல் என்ற பெயரில், அதிகாலை 3:33 மணிக்கு பாடலை பதிவு செய்வேன் என்று சொன்னால், எனக்கு அது புரியாது’ என்று அபிஜீத் கூறினார்.

காத்திருந்திருக்க வேண்டும்

மேலும் பேசிய அவர், ‘ரஹ்மான் இறுதியில் பாடல் பதிவுக்கு வரவில்லை; ஒரு உதவியாளரை அனுப்பினார்; அங்கு வைக்கப்பட்ட ஏசியிலிருந்து வந்த அதிக குளிர் காரணமாக, எனக்கு ஜலதோஷம் வந்த போதிலும், நான் பாடினேன். இதையெல்லாம் செய்வதால் ஒரு கலைஞன் பெரியவனாகவோ, சிறியவனாகவோ ஆகிவிடுவதில்லை... நான் அவருக்காக காத்திருந்திருக்க வேண்டும் என்று என்னிடம் கூறப்பட்டது; ஆனால் எனக்கு வேலைகள் இருப்பதை அவர்களிடம் தெரிவித்தேன்’ என்று பேசினார்.

முன்னதாக, மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், தன்னுடைய தனித்துவமான திறமையால், இன்றும் இசைத்துறையில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார். அண்மையில் இவர் ஓடு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்தார்.

அந்த பேட்டியில் குடிகார கிட்டாரிஸ்ட் ஒருவர் பேசிய பேச்சுதான் நான் தனித்துவமான இசையை நோக்கி நகர்வதற்கு உந்துதலாக இருந்தது என்று பேசி இருந்தார். அந்த பேட்டி இங்கே!

இது குறித்து அவர் பேசும் பொழுது,' நான் பல இசையமைப்பாளர்களிடம் வேலை பார்த்து இருக்கிறேன். ஆகையால், அவர்களின் இசையானது எனக்குள் மிகவும் ஆழமாக ஊன்றி போனது. அதனால் என்னுடைய இசையில் இருந்து, அவர்களிடமிருந்து பெற்ற இசையே பெரும்பான்மையான நேரங்களில் வந்து கொண்டிருந்தது.

அவர் கேட்ட கேள்வி

இந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் என்னுடைய இசைக் குழுவில் இருந்த கிட்டாரிஸ்ட் ஒருவர் நன்றாக குடித்து இருந்தார். அப்போது நான் வாசித்துக் கொண்டிருந்தேன். என்னிடம் வந்த அவர், நீ என்ன வாசிக்கிறாய்... படங்களுக்கான இசையைதானே நீ வாசித்துக் கொண்டிருக்கிறாய் என்றார்.

அந்த மொமெண்டில், என்னால் அவர் சொன்னதை உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை ஆனால், வாரங்கள் செல்லச் செல்ல அவர் உண்மையில் என்ன சொன்னார் என்பதை என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. அவர் சொன்ன அந்த கமெண்ட், என்னை தலைகீழாக போட்டு திருப்பி அடித்தது என்று சொல்லலாம்.

என்னுடைய இசையை

அவர் சொன்னது மிகச் சரியானது என்பதை நான் புரிந்து கொண்டேன். நான் பல இசையமைப்பாளர்களிடம் வேலை செய்து, அவர்கள் இசையமைக்கும் இசையின் மூலமாக அதிகமாக இன்ஸ்பையர் செய்யப்பட்டிருக்கிறேன் என்பது எனக்கு புரிந்தது.

அந்த புரிந்த மொமெண்டில் இருந்து நான் எனக்கான இசையை தேடி அலைய ஆரம்பித்தேன். என்னுடைய மனது எது என்னுடைய இசை என்பதை தேடி அலைந்தது. அந்த செயல்முறையில், பிற கலைஞர்களிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட இசையின் தாக்கத்தை கைவிட்டு என்னுடைய இசையை கண்டுபிடிப்பதற்கு கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆகிவிட்டது' என்று பேசினார்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.