தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aavesham Teaser: மலையாளத்தில் மீண்டும் அறிமுகமாகும் ஃபஹத் - ஆனால், இம்முறை முழுக்க முழுக்க நெகட்டிவ் ரோல்!

Aavesham Teaser: மலையாளத்தில் மீண்டும் அறிமுகமாகும் ஃபஹத் - ஆனால், இம்முறை முழுக்க முழுக்க நெகட்டிவ் ரோல்!

Marimuthu M HT Tamil
Jan 24, 2024 07:38 PM IST

ஜிது மாதவன் இயக்கத்தில் நஸ்ரியா நசீம் மற்றும் அன்வர் ரஷீத் தயாரித்துள்ள படம், ஆவேசம். இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் நெகட்டிவ் ரோலில் அசத்தியுள்ளார்.

ஆவேசம் திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசில்
ஆவேசம் திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசில்

ட்ரெண்டிங் செய்திகள்

 தெலுங்கு மொழியில் புஷ்பா: தி ரைஸ் மற்றும் தமிழில் விக்ரம், மாமன்னன் ஆகிய மொழிகளில் நெகட்டிவ் ரோலில் கலக்கியிருந்த ஃபஹத் ஃபாசில் மலையாளத்தில் இதுபோன்று நடிப்பது இதுவே முதல்முறையாகும். 

‘’ஆவேஷம்'' படத்தின் 103 விநாடி புரோமோவில் ஃபஹத் ஃபாசில், ரங்காவாக நடிக்கிறார். மீசையை முறுக்கிக்கொண்டு, கூலிங் கிளாஸை போட்டுக்கொண்டு, ஃபஹத் நடிக்கும்போது மாஸாக இருக்கிறது. 

"ரங்கா எப்படி இவ்வளவு பெரிய ஆளாக ஆனார்?" என்று டீஸரில் ஒரு சிறுவன் கேட்க, குண்டர் ஒருவன், அவனது வன்முறை பின்னணியை விவரிக்கிறான்.

அதில், "ரங்கா பள்ளியில் படிக்கும்போது, உறவினர் ஒருவரின் ஜூஸ் கடையில் பகுதி நேரமாக வேலை பார்த்தார். கலவரத்தை ஏற்படுத்த ஆயுதங்களுடன் சில குண்டர்கள் வந்தபோது, ரங்கா அவர்கள் மீது பாய்ந்து, அவர்களின் தலைவரை கத்தியால் குத்திக் கொன்றார்" என்று விளக்குகிறார்.

ரங்கா எப்படி இவ்வளவு ஆபத்தானவர் என்பதை டீஸர் விவரிக்கிறது. ஆனால் கதைசொல்லி இந்த நிகழ்வுகள் எதையும் அவர் நேரடியாகப் பார்க்கவில்லை என்பதையும் வெளிப்படுத்துகிறார். இவை அனைத்தையும் ஒரு பார்வையாளனாகப் பார்க்கும்போது, மிகைப்படுத்தப்பட்டவையாக இருப்பதை உணர முடிகிறது.

ஆவேஷம் ரிலீஸ் தேதி

ஆவேஷம் படத்தில் சமீர் தாஹிர் ஒளிப்பதிவாளராகவும், சுஷின் ஷியாம் இசையமைப்பாளராகவும், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். இப்படம் ஏப்ரல் 11-ம் தேதி விஷூ மற்றும் ஈத் பண்டிகையை ஒட்டி திரைக்கு வருகிறது. 

அப்போது பிருத்விராஜ் சுகுமாரனின் ஆடுஜீவிதம் (தி கோட் லைஃப்) திரைப்படமும்; பிரணவ் மோகன்லாலின் வருஷங்களுக்கு சேஷம் ஆகியப் படங்களும் ரிலீஸாகிறது.

இந்நிலையில் இந்த டீஸரைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஒரு ரசிகர் எக்ஸ் தளத்தில், "ஆவேசம் டீஸர் இந்த ஆண்டின் சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கு உத்தரவாதம்! ஃபஹத் ஃபாசில் ரங்காவாக வந்துட்டான்! எனத் தெரிவித்துள்ளார். மற்றொருவர், "ஒரு ரோலர்கோஸ்டர் சவாரி போல் உள்ளது" என்று குறிப்பிட்டிருக்கிறார். மற்றொருவர் "இது ஒரு ஃபஹத் ஃபாசிலின் பைத்தியக்காரத்தனமாக இருக்கும்" என்று சமூக வலைதளத்தில் எழுதியுள்ளார். 

 

தெலுங்கில் புஷ்பா: தி ரூல் படத்தில் பன்வர் சிங் ஷெகாவத் என்ற கதாபாத்திரத்தில் ஃபஹத் நடித்து வருகிறார். தவிர, தமிழில் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திலும்; மலையாளத்தில் பாட்டு, மாரீசன் ஆகியப் படங்களிலும் நடித்து வருகிறார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.