வெற்றிமாறன்: ‘அப்பாவை பேசியே கரெக்ட் பண்ணிட்டார்.. முதல் குழந்தை கருவிலே கலைஞ்சிருச்சு’ - ஆர்த்தி வெற்றிமாறன் பேட்டி
ஆர்த்தி வெற்றிமாறன்: அப்பொழுதே அவர் நான் படம் எடுத்துவிட்டுதான் கல்யாணம் செய்து கொள்வேன் என்பதில் உறுதியாக இருந்தார். ஒரு கட்டத்தில் பல இடங்களில் கதை சொல்லி கவிதாலாயா தயாரிப்பு நிறுவனத்தில் அவரை வைத்து படம் தயாரிக்க ஒப்புக்கொண்டார்கள்

ஆர்த்தி வெற்றிமாறன்: பிரபல இயக்குநரின் மனைவியான ஆர்த்தி வெற்றிமாறன், தன்னுடைய காதல் வாழ்க்கையில் எதிர்கொண்ட கஷ்டமான சம்பவங்கள் குறித்து கலாட்டா யூடியூப் சேனலுக்கு சில நாட்களுக்கு முன் கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார். அந்த பேட்டியை இங்கே பார்க்கலாம்.
எதையும் எதிர்பார்க்கவில்லை
அதில் அவர் பேசும் போது, ‘காதல் செய்து கொண்டிருக்கும் பொழுதே மற்ற பெண்களை போல அவரிடம் நான் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை.
அப்பொழுதே அவர் நான் படம் எடுத்துவிட்டுதான் கல்யாணம் செய்து கொள்வேன் என்பதில் உறுதியாக இருந்தார். ஒரு கட்டத்தில் பல இடங்களில் கதை சொல்லி கவிதாலாயா தயாரிப்பு நிறுவனத்தில் அவரை வைத்து படம் தயாரிக்க ஒப்புக்கொண்டார்கள்.
இந்த நிலையில் உடனே அவர் எனக்கு போன் செய்து வீட்டில் பேசி விடு என்றார். நான் வீட்டில் இதனை சொன்ன பொழுது, பெரிய பிரளயமே வெடித்தது. என்னுடைய அப்பா அழ ஆரம்பித்து விட்டார். உடனே நான் அவரிடம் உங்களை எதிர்த்து வெற்றியை நான் கல்யாணம் செய்து கொள்ள விரும்பவில்லை.
நீங்கள் ஒருமுறை அவரை பாருங்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நான் அவரை விட்டு விடுகிறேன் என்று கூறினேன். இதனையடுத்து என்னுடைய அப்பாவை அவர் பார்க்க வந்தார். என் அப்பாவிடம் அவர் பேசும் பொழுதே, அவரை அப்பாவிற்கு பிடிக்க ஆரம்பித்து விட்டது.
காரணம், அப்பாவிடம் மிகவும் ஓப்பனாக, தான் புகைப்பிடிப்பது, உதவி இயக்குநராக வேலை பார்ப்பது உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் சொல்லிவிட்டார். அதைக் கேட்டு அப்பாவுக்கு இந்த காலத்தில் இப்படி ஒரு உண்மையான பையனா? என்ற ரீதியில் ஓகே சொல்லிவிட்டார்.
கல்யாணம் முடிந்தும் நாங்கள் பல பிரச்சினைகளை சந்தித்தோம். கல்யாணத்திற்கு முன்னால் எனக்காக அவர் பல இடங்களுக்கு வந்து காத்திருப்பார் கல்யாணத்துக்கு பின்னர் நான் அவருக்காக காத்திருக்கிறேன். கல்யாணமான புதிதில் கர்ப்பமாக இருந்தேன். அது தொடர்பாக நான் மருத்துவமனை சென்று சோதித்த போது, என்னை சோதனை செய்த மருத்துவர், குழந்தை கலைந்து விட்டதாக கூறினார் அதைக் கேட்டு அப்படியே நான் உடைந்து போய் விட்டேன்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அந்த மருத்துவமனையின் வெளியே உள்ள சேரில் உட்கார்ந்து அழுதேன். வெற்றிமாறனுக்கு போன் செய்தேன். அவர் அப்போது ஏவிஎம் ஸ்டுடியோவில் ஷூட்டிங் இருந்தார். என்னை அங்கு வரச் சொன்னார் இதனையடுத்து நான் அங்கு சென்றேன். அவரால் அங்கிருந்து என்னுடன் வர முடியாது என்பது எனக்கு நன்றாக தெரியும். நானே அதனை புரிந்து கொண்டு நீங்கள் வரவேண்டாம் என்று கூறி கிளம்பி சென்று விட்டேன். இப்படி முக்கியமான கட்டங்களில் அவர் என்னுடன் இல்லாமல் இருந்திருக்கிறார். ஆனால், அதனை என்னால் புரிந்துகொள்ள முடியும்’ என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்