தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Aamir Khan Son Junaid Khan And Khushi Kapoor Toi Pair Up In Love Today Hindi Remake

Love Today Hindi Remake: இந்தி லவ் டுடே படத்தில் இணையும் பாலிவுட் வாரிசுகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 25, 2023 08:33 PM IST

தமிழ் மற்றும் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான லவ்டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகள் இணைந்து நடிக்கவுள்ளார்கள்.

லவ்டுடே இந்தி ரீமேக்கில் இணையும் வாரிசுகள்
லவ்டுடே இந்தி ரீமேக்கில் இணையும் வாரிசுகள்

ட்ரெண்டிங் செய்திகள்

இன்றைய இளைஞர்களுக்கு இடையிலான காதல், மோதலையும், அவர்கள் தங்களது மொபைல் போன்களை பறிமாற்றிக்கொண்டால் நிகழும் அக்கப்போர்களையும் காமெடியுடன் கலந்து சுவாரஸ்யமான கதைகளத்தை கொண்டதாக இந்தப் படம் அமைந்திருந்தது. குறிப்பாக இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்து இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. வெறும் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ரூ. 100 வரை பாக்ஸ் ஆபிஸில் வசூதித்ததாக கூறப்படுகிறது.

படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மற்றொரு ப்ளஸாக இருந்தது. இதில் இடம்பிடித்த மாமாகுட்டி என்ற பாடல் டிரெண்டிங்கில் டாப்பில் இருந்ததுடன், தற்போது வரையிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அத்துடன் படத்தில் இடம்பிடித்த காட்சிகளின் ரீல்ஸ் சமூக வலைத்தளங்களில் இப்போதும் உலாவிக்கொண்டிருக்கின்றன.

லவ்டுடே திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஆந்திரா, தெலங்கானாவில் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் அங்கும் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தகள் நடைபெற்று வந்த நிலையில், படத்தில் யார் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது.

பாலிவுட்டில் உருவாக இருக்கும் லவ்டுடே இந்தி ரீமேக்கை பாந்தோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பாலிவுட் கான்களில் ஒருவரான ஆமிர்கான் மகன் ஜூனைத் கான் கதாநாயகனாகவும், பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகளுமான குஷி கபூர் கதாநாயகியாகவும் நடிக்க உள்ளார்கள்.

ஆமிர்கான் மகன் ஜூனைத் கான் ஏற்கனவே மகாராஜா என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், வெளியீட்டுக்காக காத்துகிடக்கிறது. இதேபோல் ஸோயா அக்தர் இயக்கிய, தி ஆர்சிஸ் என்ற படத்தில் குஷி கபூரும் நடித்துள்ளார்.

இதையடுத்து இந்த வாரிசுகளின் இரண்டாவது படமாக லவ்டுடே இந்தி ரீமேக் உருவாகிறது. படத்தில் இடம்பிடிக்கும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்