Aamir Khan: ‘கணவனா எங்கிட்ட உனக்கு என்ன குறை..’.. - விவாகரத்து உண்டியலை மேடையில் உடைத்த அமீர்கான்!
அமீர்கான் தயாரிப்பில் கிரண் ராவ் முதன்முறையாக இயக்குநராக மாறி இருக்கும் திரைப்படம் லாபதா லேடீஸ்.

நடிகர் அமீர்கானும், கிரண்ராவும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இவர்கள் விவாகரத்து செய்து கொண்ட போதும் தங்களது குழந்தைக்கு நல்ல பெற்றோராகவும், நண்பர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
அமீர்கான் தயாரிப்பில் கிரண் ராவ் முதன்முறையாக இயக்குநராக மாறி இருக்கும் திரைப்படம் லாபதா லேடீஸ். இந்த படத்தை புரமோட் செய்யும் விதமாக கடந்த வெள்ளிக்கிழமை இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அந்த நிகழ்வில் தங்களுடைய விவாகரத்து குறித்து பேசினர்.
'நான் எதை மேம்படுத்த முடியும்?'
அந்த நிகழ்ச்சியில் பேசிய அமீர்கான், “ நான் உங்களுக்கு ஒரு வேடிக்கையான விஷயத்தை சொல்கிறேன். நாங்கள் அண்மையில் விவாகரத்து செய்து கொண்டது எல்லோருக்கும் தெரியும்.
ஒரு மாலை நேரத்தில் நான் இதனை கிரணிடம் கேட்டேன். அவரிடம் நான், ஒரு கணவனாக நான் எந்த விதத்தில் உனக்கு குறை உள்ளவனாக இருந்தேன். நல்ல கணவனாக மாற நான் என்னென்ன விஷயங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டேன்.” என்றார்.
இதனையடுத்து கிரண் ஒரு பட்டியலுடன் தயாராக இருந்தாள். நான் என்னுடைய குறைகளை பாய்ண்டுகளாக மாற்ற வைக்கப்பட்டேன்.
தொடர்ந்து கிரண், “ நீ அதிகமாக பேசுகிறாய். நீ மற்றவர்களை பேசவே விடமாட்டாய். உன்னுடைய கருத்தையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருப்பாய்” என்றார். நான் அதற்கு 15 முதல் 20 பாய்ண்டுகளை கொடுத்தேன்.” என்று பேசினார்.
இதற்கு சோசியல் மீடியாவில் சிலர் எதிர்வினையாற்றி இருந்தனர். அதில் ஒருவர் இவ்வளவு முதிர்ச்சி தேவையில்லை என்று கமெண்ட் செய்திருந்தார். இன்னொருவர் அமீர்கான் எவ்வளவு முதிர்ச்சியாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறார்.” என்று கமெண்ட் செய்திருந்தார்.
லாபதா லேடீஸ்அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. அமீர் கடைசியாக லால் சிங் சத்தா படத்தில் நடித்தார். அவர் தனது அடுத்த படத்தை இன்னும் அறிவிக்கவில்லை.

டாபிக்ஸ்