‘கெரியர் தொடக்கத்துல நான் குள்ளமா இருக்கிறத நினைச்சு ரொம்ப கவலை பட்டேன்’ - அமீர்கான் பேட்டி!
அமீர் கான் தன்னைத்தானே நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளும் திறனைப் பற்றி பேசினார், பாலிவுட்டில் அறிமுகமானபோது அவரது உயரம் காரணமாக பதட்டமாக இருந்ததை நினைவு கூர்ந்தார்.

‘கெரியர் தொடக்கத்துல நான் குள்ளமா இருக்கிறத நினைச்சு ரொம்ப கவலை பட்டேன்’ - அமீர்கான் பேட்டி! (AFP)
பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் ஜூன் 20 அன்று வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தின் ட்ரெய்லரில் அமீரின் தாயார் வருபவர் அவரை ‘டிங்கு’ என்று அழைப்பார்.
இது அமீரின் குறைவான உயரத்தை சுட்டிக்காட்டி கிண்டல் செய்வதாக அமைந்திருந்தது. இந்த நிலையில் அமீர்கான் அந்தக்காட்சி குறித்தும், தன்னுடைய உயரம் குறித்தும் ஜஸ்ட் டூ ஃபிலிமிக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
நல்ல நகைச்சுவை என்பது..
அந்தப்பேட்டியில் அவர் பேசும் போது, ‘உண்மையில், ஜாவேத் சாப் ( பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர்) ஒருமுறை நகைச்சுவையைப் பற்றி விஷயம் ஒன்றை சொன்னார். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.