Aamir Khan: 60 வயதில் 3 ஆவது காதலி.. ‘இவகிட்டதான் கரை சேர்ந்த மாதிரி இருக்கு’-அதிகாரப்பூர்வமாக அறிவித்த அமீர்கான்!
Aamir Khan: ஒரு முறை மும்பையில் அவரை சந்திக்க நேர்ந்தது. தொடர்ந்து பேசினோம். பழகினோம்.. அதன் பின்னர் நடந்தது அனைத்தும், மிக இயல்பாக நடந்ததுதான். - அமீர்கான்

Aamir Khan: மும்பையில் நேற்றைய தினம் நடந்த நிகழ்வு ஒன்றில் பாலிவுட் நடிகர் அமீர்கான் கௌரி ஸ்ப்ராட் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதை தெரிவித்தார். இந்த நிகழ்வில் பேசிய அமீர்கான் அமீர்கான், நீங்கள் எல்லோரும் அவரை சந்திக்க, இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக இருக்கும் என்று நினைத்தேன். அதுமட்டுமல்ல நான் மறைந்திருக்க வேண்டிய அவசியமில்லை.’ என்றார்.
மேலும் பேசிய அமீர்கான், " கெளரி பெங்களூரைச் சேர்ந்தவர். எங்களை ஒருவருக்கொருவர் 25 ஆண்டுகளாக அறிவோம். ஆனால், நாங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர்தான் காதலில் விழுந்தோம். ஒரு முறை மும்பையில் அவரை சந்திக்க நேர்ந்தது. தொடர்ந்து பேசினோம். பழகினோம்.. அதன் பின்னர் நடந்தது அனைத்தும், மிக இயல்பாக நடந்ததுதான்.’ என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘நான் ஒரு வலுவான உறவில் இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம். ரீனாவும் நானும் 16 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தோம். பின்னர் கிரணும், நானும் 16 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தோம். பல வழிகளில் நாங்கள் இன்னும் ஒன்றாக இருக்கிறோம். அதில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். தற்போது கௌரியுடன் இணைந்திருப்பது கரை சேர்ந்தது போன்ற உணர்வை கொடுத்திருக்கிறது. என் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எனது முன்னாள் மனைவிகளுடன் இதுபோன்ற சிறந்த உறவைக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் அதிர்ஷ்டம்" என்றார்.
6 வயது மகனைக் கொண்ட ஸ்ப்ராட், மென்மையான மற்றும் புத்திசாலித்தனமான ஒருவரைத் தேடிக்கொண்டிருந்ததாகவும், அவரைக் கண்டுபிடித்ததில் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், 1976 ஆம் ஆண்டு வெளியான "கபி கபி" என்ற இந்தி திரைப்படத்தின் 'கபி கபி மேரே தில் மெயின்' என்ற பாடலுக்கு அமீர்கானும் ஸ்ப்ராட்டியும் இணைந்து ஆடினர்.
அமீர்கான் 1986 முதல் 2002 வரை திரைப்பட தயாரிப்பாளர் ரீனா தத்தாவுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஜுனைத் மற்றும் இரா கான் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2005 ஆம் ஆண்டில், அவர் இயக்குநர் கிரண் ராவை மணந்தார். கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த ஜோடி, கடந்த 2021 இல் பிரிந்தது. அவர்கள் பிரிந்த போதிலும், அவர்கள் தங்கள் மகன் ஆசாத்தை தொடர்ந்து இணை பெற்றோராக பார்த்துக்கொள்ளப்போவதாக கூறியிருக்கின்றனர்.
அமீர்கான் அடுத்ததாக 2007 ஆம் ஆண்டு வெளியான "தாரே ஜமீன் பர்" திரைப்படத்தின் தொடர்ச்சியான "சித்தாரே ஜமீன் பர்" படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் ப்ரீத்தி ஜிந்தா, சன்னி தியோல் நடிப்பில் உருவாகி வரும் 'லாகூர் 1947' படத்தை அமீர்கான் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்