ஜெனிக்கு வயசு 37.. உங்களுக்கு வயசு 60… 23 வயசு இடைவெளி பாஸ்.. எப்படி படத்தில் சாத்தியம்? - அமீர்கான் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஜெனிக்கு வயசு 37.. உங்களுக்கு வயசு 60… 23 வயசு இடைவெளி பாஸ்.. எப்படி படத்தில் சாத்தியம்? - அமீர்கான் பேட்டி!

ஜெனிக்கு வயசு 37.. உங்களுக்கு வயசு 60… 23 வயசு இடைவெளி பாஸ்.. எப்படி படத்தில் சாத்தியம்? - அமீர்கான் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 09, 2025 02:39 PM IST

நடிகர்களுக்கு வயது ஒரு தடையல்ல என்று கூறிய அமீர்கான் இன்று விஎஃப்எக்ஸ் எப்படி அதற்கு உதவி புரிகிறது என்பது குறித்து பேசி இருக்கிறார்.

ஜெனிக்கு வயசு 37.. உங்களுக்கு வயசு 60… 23 வயசு இடைவெளி பாஸ்.. எப்படி படத்தில் சாத்தியம்? - அமீர்கான் பேட்டி!
ஜெனிக்கு வயசு 37.. உங்களுக்கு வயசு 60… 23 வயசு இடைவெளி பாஸ்.. எப்படி படத்தில் சாத்தியம்? - அமீர்கான் பேட்டி!

23 வயது இடைவெளி இருந்த போதும்…

இந்த நிலையில் 23 வயது இடைவெளி இருந்தபோதிலும் ஜெனிலியாவுடன் இணைந்து நடித்தது குறித்து அமீர்கானிடம் கேட்கப்பட்டது. இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ‘ஆமாம் எனக்கும் அந்த எண்ணம் எனக்கு வந்தது. ஆனால், படத்தில் நாங்கள் இருவரும் 40 களின் ஆரம்பத்தில் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறோம்.

ஜெனிலியாவிற்கு அந்த வயசு இருக்கும். எனக்கு 60 வயதாகிறது. ஆனால், இன்றைய நாளில் வயதை குறைத்துக்காண்பிப்பதற்கு வி.எஃப்.எக்ஸ் பெரிய உதவி செய்கிறது.

முன்பெல்லாம் 18 வயது இளைஞனாக நடிக்க நேர்ந்தால், புரோஸ்டெடிக்ஸ் பயன்படுத்த வேண்டியிருந்தது. அனில் கபூர் ஈஸ்வரில் (1989) செய்ததைப் போல… இன்று அவரை 80 வயது தோற்றத்திலும், வி.எஃப்.எக்ஸ் மூலம் நேர்மாறாக காட்ட முடியும். எனவே, இனி நடிகர்களுக்கு வயது ஒரு தடையல்ல.’ என்று பேசினார்.

சித்தாரே ஜமீன் பர் பற்றி

சித்தாரே ஜமீன் பர் என்பது அமீரின் வெற்றிப் படமான தாரே ஜமீன் பர் படத்தின் அடுத்த பாகம் ஆகும். இப்படத்தில் அமீர்கான் ஒரு கூடைப்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார்.

முன்னதாக அவர் பேசிய ஒரு பேட்டியில் மகாபாரதம் குறித்து பேசினார். அந்த பேட்டியையும் பார்க்கலாம்.

அதில் அமீர்கானிடம் உங்கள் கடைசி படத்தின் கரு என்னவாக இருக்கும் என்று கேட்டபோது, அமீர்கான், ‘மகாபாரதத்தை உருவாக்குவது எனது கனவு, ஜூன் 20 ஆம் தேதி சித்தாரே ஜமீன் பர் வெளியான பிறகு, நான் அதற்கான பணிகளைத் தொடங்குவேன். நான் அதைச் செய்தவுடன், அதற்குப் பிறகு நான் எதுவும் செய்ய முடியாது என்ற உணர்வை எனக்கு அது விட்டுவிடக்கூடும் என்று நினைக்கிறேன்.

ஆனால், எனக்குத் தெரியவில்லை; ஏனென்றால் அந்தக்கதை அப்படி இருக்கிறது. அது பல அடுக்குகளை கொண்டது. உணர்ச்சிபூர்வமானது. பிரம்மாண்டம் நிறைந்தது. உலகில் உள்ள அனைத்தையும் மகாபாரதத்தில் பார்க்கலாம். ‘என்று பேசினார்.

மேலும் பேசிய அவர், ‘ஏ.கே. ஹங்கல் அவர்கள் கூறுவது போல, 'நான் வேலை செய்து கொண்டே இறக்க விரும்புகிறேன்' – அதைத்தான் நாம் அனைவரும் விரும்புகிறோம்.

மகாபாரதம் பற்றி அமீர்கான்

முன்னதாக, தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா உடனான நேர்காணலில், அமீர்கான் தனது கனவுத் திட்டமான மகாபாரதத்தை உருவாக்குவது குறித்து பேசினார், அதில் அவர் பேசும் போது, ‘நீங்கள் மகாபாரதத்தை ஒரு படத்தில் சொல்ல முடியாது.ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவில் திட்டமிட வேண்டும் என்றால், நமக்கு பல இயக்குநர்கள் தேவைப்படலாம். ஒன்றன் பின் ஒன்றாக செய்தால், அதற்கு மிக நீண்ட காலம் எடுக்கும்.’ என்று பேசினார்.

ஜெனிலியா டிசோசா மற்றும் பல நடிகர்கள் உள்ளிட்ட பலர் நடித்து ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை அமீர்கான் மற்றும் அபர்ணா புரோஹித் தயாரித்து இருக்கின்றனர். இந்தத்திரைப்படம் ஜூன் 20 அன்று திரையரங்குகளில் வர திட்டமிடப்பட்டுள்ளது.