Aadvik Ajith: அப்பாவுக்கு ரேஸ்.. மகனுக்கு அத்லெட்டிக்.. பள்ளி தடகளப்போட்டியில் ஆதிக்கம் செலுத்திய ஆத்விக் அஜித்!
Aadvik Ajith: அப்பாவுக்கு ரேஸ்.. மகனுக்கு அத்லெட்டிக்.. பள்ளி தடகளப்போட்டியில் ஆதிக்கம் செலுத்திய ஆத்விக் அஜித்!

Aadvik Ajith: அப்பாவுக்கு ரேஸ்.. மகனுக்கு அத்லெட்டிக்.. பள்ளி தடகளப்போட்டியில் ஆதிக்கம் செலுத்திய ஆத்விக் அஜித் குறித்துப் பார்ப்போம்.
அஜித் குமார் எஃப் 1 கார் ரேஸில் இறங்கி, இருப்பது போலவே, அவரது ஒன்பது வயது மகன் ஆத்விக்கும் தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது.
ஆத்விக் அஜித், தான் சென்னையில் படிக்கும் பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் தடகளப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றார்.
பந்தயத்தில் அஜித்தின் மகன் ஆதிக்கம்:
அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித், ஜனவரி 29ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன் ஆத்விக், அவரது பள்ளியில் தடகளப் பாதையில் தனது போட்டியாளர்களைவிட மிகவும் முன்னால் ஓடும் வீடியோவைப் பகிர்ந்து இருந்தார்.
அவர் தனது தலைப்பில் ஒரு சில எமோஜிகளை வெளியிட்டிருந்தார். அதில், பிரகாசம், கொண்டாட்டம் என எழுதி இதய எமோஜியைப் பகிர்ந்து இருந்தார். ஓட்டப்பந்தயத்தில் தனது மகன் வெற்றி பெறும்போது கூச்சலிடுவதையும் பார்க்க முடிகிறது.
வைரலான ஆத்விக்:
ஆத்விக்கின் தடகள திறன்களால் இணையத்தில் பேசுபொருள் ஆனார். அது அவரது தந்தை அஜித்துடன் ஒப்பிடப்பட்டார்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பயனர், "சூப்பர் ஸ்டார்" என்று கருத்து தெரிவித்தார். மற்றொருவர், "குட்டி ஏ.கே’’ என எழுதி, சிவப்பு இதயம் மற்றும் இதய கண்கள் ஈமோஜிகளைக் கொண்டிருக்கிறது" என்று எழுதினார்.
பல இணையப் பயனர்கள் அதை பொருத்தமாக, "தந்தையைப் போல், மகன்" என்று பொருத்தமாக எழுதியிருக்கிறார்.
அதேபோல், டிஸ்னியின் 1994ஆம் ஆண்டு ஹாலிவுட் அனிமேஷன் சாகசப் படமான தி லயன் கிங்கிலிருந்து முஃபாசா மற்றும் அவரது குட்டி சிம்பாவின் GIF ஐ, ஒரு இணையப் பயனர் பகிர்ந்து இருந்தார்.
இன்னொரு நெட்டிசன், ’’டி.என்.ஏ டெஸ்ட் தேவையில்லை! வாழ்த்துக்கள் சாம்பியன்!" என்று கமெண்ட் செய்துள்ளார்.
"அஜித் சார் ரேஸ் டிராக்கை ஜெயித்தார். இப்போது அவரோட மகன் ஆத்விக் அத்லெடிக் ஃபீல்டில் ஆட்சி பண்றார். பந்தயம் அவர்களின் இரத்தத்தில் ஓடுகிறது என்று நினைக்கிறேன். வேகத்தின் உண்மையான ராஜாக்கள்!" என்று ஒரு இணையப் பயனர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
அஜித்தின் சமீபத்திய சாதனைகள்
குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருதை அஜித்துக்கு வழங்குவதாக இந்திய அரசு அறிவித்தது. 1993-ம் ஆண்டு அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர், அஜித். வாலி, முகவரி, மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகியவை இவரது நடிப்பில் வந்த பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் ஆகும். நடிகர் அஜித் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்திலும், அடுத்து ’குட் பேட் அக்லி’ திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இதில் விடாமுயற்சி திரைப்படம், பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸாகிறது.
நடிகர் அஜித்தும் அடிப்படையில் ஒரு விளையாட்டு ஆர்வலர். மோட்டார் ஸ்போர்ட்ஸில் அவருக்கு ஒரு சுவாரஸ்யமான ஆர்வமும் வரலாறும் உண்டு.
நடிகர் அஜித் ஆசிய ஃபார்முலா பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப், பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப் மற்றும் எஃப்ஐஏ ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப்பில் கூட போட்டியிட்டுள்ளார். அஜித் மோட்டார் சைக்கிள் பந்தயத்துடன் தனது பந்தய வாழ்க்கையைத் தொடங்கினார். அடுத்து, தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்டார். தற்போது, அஜித் குமார் ரேஸிங் என்ற பந்தய அணியின் உரிமையாளராகவும் நடிகர் அஜித் குமார் இருக்கின்றார். கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது அணியைத் தொடங்கி செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்