Aadujeevitham Box Office Day 7: ஆடு ஜீவிதம் படத்தின் 7ஆவது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Aadujeevitham The Goat Life Box Office Day 7: பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ஆடுஜீவிதத்தின் கலெக்ஷன் மெல்ல குறையத் தொடங்கியுள்ளது.
Aadujeevitham The Goat Life Box Office Day 7: இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த திரைப்படம், ஆடுஜீவிதம். இப்படம் வெளியாகி ஒரு வாரத்தைத் தொட்டுள்ள நிலையில், அதன் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் சற்று சரிந்துள்ளதாகத் தெரிகிறது.
Sacnilk.com என்ற இணையதள அறிக்கையின்படி, ஏப்ரல் மூன்றாம் தேதி, இந்தியாவில் சுமார் 3.75 கோடி ரூபாய் கலெக்ஷனை ஈட்டியது. இது இப்படத்தின் இதுவரை இல்லாத அளவில் மிகக் குறைந்த வசூல் ஆகும்.
கேரளாவினை கதைக்களமாகக் கொண்டு மலையாளத்தில் உருவாகி, பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், டப் செய்யப்பட்டு மார்ச் 28-ம் தேதி ஆடுஜீவிதம் திரைப்படம் வெளியானது.
ஆடுஜீவிதம் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் நிலவரம்:
Sacnilk.com இணையதளத்தின் அறிக்கையின்படி, ஆடுஜீவிதம் திரையரங்குகளில் அதன் தொடக்க வாரத்தில் இந்தியாவில் சுமார் ரூ.43.85 கோடியை நிகரமாக வசூலித்தது.
முதல் நாளில், ஆடுஜீவிதம்: தி கோட் லைஃப் திரைப்படம் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் ரூ .7.6 கோடி நிகர வசூலைப் பெற்றுள்ளது. இரண்டாவது நாளில் ரூ.6.25 கோடியை வசூலித்துள்ளது. மூன்றாவது நாளில் ரூ.7.75 கோடியும்; நான்காவது நாளில் ரூ.8.7 கோடியும் வசூலித்தது.
மேலும், ஐந்தாவது நாள் ரூ.5.4 கோடியும்; ஆறாவது நாள் ரூ.4.4 கோடி வசூல் செய்துள்ளது. இது ஏழாவது நாளில் 3.75 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்துள்ளது.
'ஆடுஜீவிதம்: தி கோட் லைஃப்' படத்தில் பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பிரெஞ்சு நடிகர் ஜிம்மி ஜீன்-லூயிஸ், அமலா பால், கே.ஆர்.கோகுல் மற்றும் அரபு நடிகர்கள் தாலிப் அல் பலுஷி மற்றும் ரிகாபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பென்யாமின் எழுதிய ‘’ஆடுஜீவிதம்'' என்ற மலையாள நாவலை அடிப்படையாகக் கொண்ட இப்படம் கேரளாவைச் சேர்ந்த நஜீப் என்பவரின் உண்மைக் கதையைச் சொல்கிறது.
90-களின் முற்பகுதியில், நஜீப் என்னும் கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட நபர், வேலை தேடி வளைகுடாவுக்கு குடிபெயர்ந்தார். ஆனால், அங்கு அவருக்கு ஒரு நல்ல பணி கிடைப்பதற்குப் பதில், ஒரு பாலைவனத்தில் ஒரு ஆடு மேய்க்கும் பணியில் பணியமர்த்தப்பட்டார்.
அதன்பின் தனது நரக வாழ்க்கையை உணர்ந்து, அந்த குடியிருப்பில் இருந்து தப்பித்து வீடு திரும்ப விரும்ப முயற்சிக்கிறார். அதுதான் கதை.
ஆடுஜீவிதம் தி கோட் லைஃப் குறித்து பிருத்விராஜ்
சமீபத்தில் ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் ஆடுஜீவிதம் திரைப்படம் குறித்து பிருத்விராஜ் சுகுமாரன் அளித்த பேட்டியில், "2008ஆம் ஆண்டில், பிளெஸ்ஸி முதன்முதலில் இந்தப் படத்தில் நடிப்பது பற்றி என்னிடம் கேட்டபோது, எனது ஆரம்ப எண்ணம் என்னவென்றால், இந்த கதாபாத்திரத்தை நான் எவ்வாறு சரிசெய்யமுடியும்? என்று சந்தேகம் இருந்தது.
உண்மையில் நீங்கள் யார் என்பதைப் பற்றி படத்தில் பேசுகிறேனா அல்லது பென்யாமின் எழுதிய நஜீப் கதாபாத்திரத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேனா அல்லது பிளெஸ்ஸியின் மனதில் இருக்கும் நஜீப்பைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேனா? இதுதான் எனக்கு அப்படத்தில் நடிப்பதற்கு முன் எனக்கு இருந்த குழப்பம்.
இறுதியாக, நாவல் மற்றும் பிளெஸ்ஸி கற்பனை செய்த நஜீப்பை அடிப்படையாகக் கொண்டு, என் மனதில் நான் கற்பனை செய்யும் நஜீப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அந்த நஜீப்பை தான் படத்தில் நீங்கள் பார்க்கிறீர்கள். அதில் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கும்’’ என்றார்.
டாபிக்ஸ்