Aadujeevitham OTT: பல ஆண்டு உழைப்பு.. ஓடிடியில் விற்பனையாகாமல் இருக்கும் ஆடு ஜீவிதம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aadujeevitham Ott: பல ஆண்டு உழைப்பு.. ஓடிடியில் விற்பனையாகாமல் இருக்கும் ஆடு ஜீவிதம்

Aadujeevitham OTT: பல ஆண்டு உழைப்பு.. ஓடிடியில் விற்பனையாகாமல் இருக்கும் ஆடு ஜீவிதம்

Aarthi Balaji HT Tamil
Published Jun 14, 2024 11:50 AM IST

Aadujeevitham OTT: 'ஆடு ஜீவிதம்' மே 26 முதல் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கும் என்று முன்னதாக செய்திகள் வந்தன, ஆனால் தயாரிப்பாளர்களால் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

 பல ஆண்டு உழைப்பு.. ஓடிடியில் விற்பனையாகாமல் இருக்கும் ஆடு ஜீவிதம்
பல ஆண்டு உழைப்பு.. ஓடிடியில் விற்பனையாகாமல் இருக்கும் ஆடு ஜீவிதம்

படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சுமார் 14 வருட உழைப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது.

கேரளாவினை கதைக்களமாகக் கொண்டு மலையாளத்தில் உருவாகி, பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், டப் செய்யப்பட்டு மார்ச் 28 ஆம் தேதி ஆடு ஜீவிதம் திரைப்படம் வெளியானது.

'ஆடு ஜீவிதம்: தி கோட் லைஃப்' படத்தில் பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பிரெஞ்சு நடிகர் ஜிம்மி ஜீன்-லூயிஸ், அமலா பால், கே.ஆர்.கோகுல் மற்றும் அரபு நடிகர்கள் தாலிப் அல் பலுஷி மற்றும் ரிகாபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கதையின் கரு

வறுமை காரணமாக, தன்னை நம்பி வந்தவளை காப்பாற்றி கரை சேர்க்க வேண்டும் என்பதற்காக, அவள் வயிற்றில் இருக்கும் அவரின் குழந்தைக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பதற்காக, நண்பர் ஒருவரின் உதவியை பெற்று, அரபு நாட்டுக்கு உதவியாளர் பணிக்கு பயணப்படுகிறார் நஜீப் முகமது (பிரித்விராஜ்). ஆனால் எதிர்பாராத விதமாக அவர் வாழ்க்கை முழுவதும் அடிமைப்படுத்தி வாழ வைக்கும், ஆடு மேய்க்கும் கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது.

பசுமையை மட்டுமே பார்த்து, முகர்ந்து உணர்ந்து வாழ்ந்த அவரின் தேகம், அந்த இரக்கமே இல்லாத பாலைவனத்தில் அணு, அணுவாய் அனுபவிக்கும் சித்திரவதைகளும் அதில் இருந்து அவன் எப்படி மீண்டான் என்பதுமே, ஆடு ஜீவிதம் படத்தின் கதை.

ஏமாற்றத்தில் ரசிகர்கள்

ஆரம்பத்தில், இந்த படம் மே மாதத்திலிருந்து ஓடிடி தளங்களிலும் வெளியாகும் என்று அறிக்கைகள் இருந்தன, ஆனால் அது நடக்கவில்லை, இது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது.

எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, ஸ்ட்ரீமிங் துறையில் ஒரு முக்கிய நிறுவனமான டிஸ்னி+ ஹாட் ஸ்டார், 'ஆடு ஜீவிதம்' உரிமையை வைத்து இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் டிஸ்னி+ ஹாட் ஸ்டார் நிறுவனம், 'ஆடு ஜீவிதம்' ஓடிடி உரிமையை பெறவில்லை.

'ஆடு ஜீவிதம்' மே 26 முதல் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கும் என்று முன்னதாக செய்திகள் வந்தன, ஆனால் தயாரிப்பாளர்களால் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தற்காலிகமாக நிறுத்தம்

ஆஸ்கார் பிரச்சாரத்திற்காக ஒப்பந்தம் செய்வதே தயாரிப்பாளர்களின் முதல் கருத்தாகும். இது தவிர சர்வதேச திரையிடல்கள், விளம்பர உத்திகள் உள்ளிட்ட விஷயங்கள் இறுதி செய்யப்பட உள்ளதால் ஓடிடி சாட்டிலைட் உரிமை குறித்த பேச்சு வார்த்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.