AA22 X A6: சயின்ஸ் ஃபிக்சன் ஜானர்.. ஹாலிவுட் தரம்.. அதகள படுத்திய அட்லி! - வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aa22 X A6: சயின்ஸ் ஃபிக்சன் ஜானர்.. ஹாலிவுட் தரம்.. அதகள படுத்திய அட்லி! - வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

AA22 X A6: சயின்ஸ் ஃபிக்சன் ஜானர்.. ஹாலிவுட் தரம்.. அதகள படுத்திய அட்லி! - வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 08, 2025 05:16 PM IST

AA22 X A6: அல்லு அர்ஜூன் , அட்லி உள்ளிட்டோருக்கான சம்பளம் என்ன? படத்தின் பட்ஜெட் என்ன? கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

AA22 X A6: சயின்ஸ் ஃபிக்சன் ஜானர்.. ஹாலிவுட் தரம்.. அதகள படுத்திய அட்லி! - வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
AA22 X A6: சயின்ஸ் ஃபிக்சன் ஜானர்.. ஹாலிவுட் தரம்.. அதகள படுத்திய அட்லி! - வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில், இந்தப்படத்தில் அல்லு அர்ஜூன் , அட்லி உள்ளிட்டோருக்கான சம்பளம் என்ன? படத்தின் பட்ஜெட் என்ன? கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தத்தகவல்கள் பல்வேறு இணையதளங்களில் இருந்து எடுக்கப்பட்டதாகும். அதிகாரப்பூர்வ தகவல்கள் அல்ல

யாருக்கு எவ்வளவு சம்பளம்?

பிங்க் வில்லா வெளியிட்ட தகவல்களின் படி, பிரமாண்டமாக உருவாக இருக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு 175 கோடி சம்பளமாகவும், படத்தின் பங்குகளில் 15 சதவீத லாபமும் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி இருக்கிறது. சயின்ஸ் ஃபிக்சன் ஜானரில் உருவாக இருப்பதாக கூறப்படும் இப்படம் 800 கோடி செலவில் தயாரிக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.

அட்லி சம்பளம்

முன்னதாக ஷாருக்கானின் ஜவான் படத்திற்கு சம்பளமாக அட்லி 30 கோடி பெற்றதாக கூறப்படும் நிலையில் அல்லு அர்ஜூன் படத்திற்கு அட்லிக்கு 100 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் அட்லியின் சம்பளம் 233 சதவீதம் அதிகமாகி இருக்கிறதாம். விஎஃப் எக்ஸ் பணிகளுக்காக மட்டும் 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறதாம்.

திரும்பி பார்க்க வைக்கும் தென்னிந்திய சினிமா

அண்மை காலமாக இந்திய சினிமாவை குறிப்பாக தென்னிந்திய சினிமாக்களை உலகமே திரும்பி பார்த்துக்கொண்டிருக்கிறது. காரணம், எமோஷன் நிறைந்த கதைகளங்களை, துல்லியமான கிராஃபிக்ஸ் காட்சிகளை கொண்டு நம்மூர் இயக்குநர்கள் கனகச்சிதமாக திரையில் சொல்லி விடுகிறார்கள். அதற்கு அண்மை உதாரணம் ராஜமெளலியின் ஆர். ஆர்.ஆர்.

அல்லு அர்ஜூன் - அட்லி இணையும் படமும் சயின்ஸ் ஃபிக்சன் படம் என்பது இன்று வெளியான அறிவிப்பிலிருந்தே தெரிந்து விட்டது. அட்லீக்கு சயின்ஸ் ஃபிக்ஷன் வகை படத்தை இயக்குவது முதல் முறையாகும். அதேபோல், அல்லு அர்ஜுனுக்கும் இது முதல் சயின்ஸ் ஃபிக்ஷன் கதை கொண்ட திரைப்படமாகும். இதனால், படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராஃபிக்ஸ் காட்சிகளோடு சேர்ந்து படத்தின் எமோஷனும் வொர்க் அவுட் ஆகும் பட்சத்தில் படம் மிகப்பெரிய வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

அறிவிப்பு வீடியோவில் சொன்னது என்ன?

இன்று வெளியான பட அறிவிப்பு வீடியோவில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பிரபலமான லோலா விஎஃப்எக்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி பேசுகின்றனர்.

ஸ்டுடியோவில் உள்ள பொருட்கள் மற்றும் விஎஃப்எக்ஸ் பணிகளை ஆய்வு செய்தனர். அல்லு அர்ஜுனுக்கு விஎஃப்எக்ஸ் டெஸ்ட் மற்றும் 360 டிகிரி 3D ஸ்கேனிங் செய்யப்பட்டது.

அங்கு பணியாற்றி வரும் கலைஞர்களும் படத்தின் கதையை கேட்டு, இந்தக்கதையை அட்லி எப்படி எழுதினார் என்று சிலாகித்தனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.