Bigg Boss Arun: முதல் திருமணத்தை மறைத்த பிக்பாஸ் அருண்? 2ம் தாரமாகிறாரா அர்ச்சனா? கிளம்பிய புதுப் பிரச்சனை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Arun: முதல் திருமணத்தை மறைத்த பிக்பாஸ் அருண்? 2ம் தாரமாகிறாரா அர்ச்சனா? கிளம்பிய புதுப் பிரச்சனை!

Bigg Boss Arun: முதல் திருமணத்தை மறைத்த பிக்பாஸ் அருண்? 2ம் தாரமாகிறாரா அர்ச்சனா? கிளம்பிய புதுப் பிரச்சனை!

Malavica Natarajan HT Tamil
Jan 28, 2025 09:53 AM IST

Bigg Boss Arun: பிக்பாஸ் அருண் பிரசாத்திற்கு 5 வருடத்திற்கு முன்னே திருமணம் ஆனதாகவும், தான் அவரது மனைவி எனவும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்து புது பிரச்சனையை கிளப்பி உள்ளார்.

Bigg Boss Arun: முதல் திருமணத்தை மறைத்த பிக்பாஸ் அருண்? 2ம் தாரமாகிறாரா அர்ச்சனா? கிளம்பிய புதுப் பிரச்சனை!
Bigg Boss Arun: முதல் திருமணத்தை மறைத்த பிக்பாஸ் அருண்? 2ம் தாரமாகிறாரா அர்ச்சனா? கிளம்பிய புதுப் பிரச்சனை!

சீரியல் பிரபலம்

சேலத்தை சேர்ந்த இவர், சினிமா வாய்ப்புக்காக பல ஷார்ட் பிலீம்களில் நடித்து புகழ்பெற்றார். பின் மேயாத மான் உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே வாய்ப்பு கிடைத்ததால், அவர் சீரியலில் நடிக்க தயாரானார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் அவர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இந்த சீரியலின் வெற்றியால் 2ம் பாகத்தையும் விஜய் டிவி வெளியிட்டது., ஆனால், இது அவ்வளவாக மக்களிடம் ஆதரவு பெறாத நிலையில் விரைவாகவே சீரியலும் முடிக்கப்பட்டது.

பிக்பாஸில் என்ட்ரி

இந்த சீரியலுக்கு பின் பெரிதாக சீரியலிலோ, படங்களிலோ அவரை காண முடியவில்லை. இந்த சமயத்தில் தான் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் தன்னை நுழைத்துக் கொண்டார். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக வேண்டும் என பலரும் கூறி வந்த நிலையிலும், ஒருவரது போஸ்ட் மட்டும் ஆரம்ப காலத்தில் இருந்தே பெரிதாக பேசப்பட்டது. அவரைப் பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

5 வருடத்திற்கு முன் திருமணம்?

அவர் பெயர் தான் சுபத்ரா. இவர் அருணின் சிறு வயது தோழி என்றும், இருவரும் ஒந்றாக படித்த சமயத்தில் காதலித்து 5 வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டனர் எனவும் சொல்லப்படுகிறது. இவரை அருண் பொது இடங்களிலோ, மீடியா முன்போ இதுவரை அறிமுகப்படுத்தியதே இல்லை. ஆனால், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற சமயத்தில் இல்லை, அதற்கு முன்பு ஷார்ட் பிலிம் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் இருந்தே அவரது புகைப்படங்களை பதிவிட்டு அவருக்கு தன் ஆதரவை தெரிவித்து வருகிறார் சுபத்ரா.

சுபத்ராவின் இன்ஸ்டா ஐடி மாற்றம்
சுபத்ராவின் இன்ஸ்டா ஐடி மாற்றம்

செல்லப் பெயரில் கொஞ்சல்

இவரது இன்ஸ்டாகிராம் ஐடி கூட சுபத்ரா அருண் என்று தான் இருக்கிறது. இந்த விவகாரம் பூதாகரமானதற்கு முன் அவர், அருணை தன் அர்ஜூனன் என்று கூறியது மட்டுமின்றி, தன்னுடைய 5 வருட காதல் என்றும் கூறி இருப்பார். அத்துடன் செல்லப் பெயர்களையும் வைத்து கொஞ்சி இருப்பார். ஆனால், இப்போது அவர் அத்தனை விவரங்களையும் நீக்கி விட்டு தன் பயோவில் வெறும் சுபத்ரா அருண் என்ற பெயரை மட்டும் பயன்படுத்தி வருகிறார்.

ஹார்லி குயினுடன் காதல்

அருண் சுபத்ராவை உண்மையாகவே திருமணம் செய்தாரா, அல்லது ஒரு ரசிகையாக அவர் இதுபோன்று கூறி வருகிறாரா என்பது குறித்து தற்போது வரை எந்தத் தகவலும் தெரியவில்லை. ஆனால், பிக்பாஸ் வீட்டில் பங்கேற்ற அருண் பிரசாத், தான் ஹார்லி குயின் என்பவரை காதலித்து வருவதாக கூறி பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் தங்களுக்கு திருமணம் நடக்க போவதாகவும் கூறி இருப்பார்.

உறுதி செய்த அர்ச்சனா

இந்த ஹார்லி குயின், தொகுப்பாளர், சீரியல் நடிகை, பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா தான் என்பது அர்ச்சனாவின் பிறந்தநாள் அன்று உறுதி ஆனது. அத்துடன், பிக்பாஸ் freze டாஸ்கிற்கு பின், போட்டியாளர்களின் நண்பர்கள் பங்கேற்ற போது, பொது வெளியில், அத்தனை பேருக்கும் முன், அர்ச்சனா தான் ென் ஹார்லி குயின். அவரைத் தான் திருமணம் செய்ய உள்ளேன் எனக் கூறி தங்களது காதலையும் வெளிப்படுத்தி இருப்பார்.

குழப்பத்தில் மக்கள்

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த உடன், அவர் அர்ச்சனாவை சந்திக்க சென்ற வீடியோவையும் அர்ச்சனா அவரது சோசியல் மீடியாவில் பதிவிட்டிருப்பார். நிலைமை இப்படி இருக்க யார் இந்த சுபத்ரா, இவருக்கும் அருணுக்கும் என்ன உறவு என்பதை அருணோ அல்லது அவரது குடும்பத்தாரோ தான் கூறி விளக்கம் அளிக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.