ஊர்க்காரரின் கதை என்ற கமல்.. தந்தையை உணர்ந்தேன் என்ற எஸ்.கே.. முகுந்த் மகிழ்ந்திருப்பார் என்ற இந்து.. அமரன் படக்குழு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஊர்க்காரரின் கதை என்ற கமல்.. தந்தையை உணர்ந்தேன் என்ற எஸ்.கே.. முகுந்த் மகிழ்ந்திருப்பார் என்ற இந்து.. அமரன் படக்குழு

ஊர்க்காரரின் கதை என்ற கமல்.. தந்தையை உணர்ந்தேன் என்ற எஸ்.கே.. முகுந்த் மகிழ்ந்திருப்பார் என்ற இந்து.. அமரன் படக்குழு

Marimuthu M HT Tamil Published Oct 24, 2024 11:13 PM IST
Marimuthu M HT Tamil
Published Oct 24, 2024 11:13 PM IST

ஊர்க்காரரின் கதை என்ற கமல்.. தந்தையை உணர்ந்தேன் என்ற எஸ்.கே.. முகுந்த் மகிழ்ந்திருப்பார் என்ற இந்து.. அமரன் படக்குழு

ஊர்க்காரரின் கதை என்ற கமல்.. தந்தையை உணர்ந்தேன் என்ற எஸ்.கே.. முகுந்த் மகிழ்ந்திருப்பார் என்ற இந்து.. அமரன் படக்குழு
ஊர்க்காரரின் கதை என்ற கமல்.. தந்தையை உணர்ந்தேன் என்ற எஸ்.கே.. முகுந்த் மகிழ்ந்திருப்பார் என்ற இந்து.. அமரன் படக்குழு

சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்து வந்தார். இப்படம் ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய மேஜர் முகுந்த் வரதராஜனின், ’இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ்’ என்ற புத்தகத்தில் இருந்து, இக்கதையை எழுதி, திரைக்கதை அமைத்துள்ளார், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.

உலகநாயகனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் பிப்ரவரி 16ஆம் தேதி வெளியானது. அதில் படத்தின் பெயர், அமரன் என இந்த வீடியோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காமெடிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர்களிலும், குடும்ப உறுப்பினர்களைக் கவரும் விதமாகவும் நடித்து வந்த சிவகார்த்திகேயன், இந்த ’அமரன்’ படத்தில் முழுக்க அதிரடி ஹீரோவாக தோன்றியுள்ளார்.

அமரன் கேரக்டரில் ராணுவ வீரனாக சிவகார்த்திகேயன்:

ராணுவ வீரர் போல் உடல் கட்டமைப்பைப் பெறுவதற்காக, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, கடும்பயிற்சியை சிவகார்த்திகேயன் மேற்கொண்டார். படம் தொடங்கப்படும்போது, சிவகார்த்திகேயனின் ஒர்க் அவுட் வீடியோவை படக்குழுவினர் பகிர்ந்து, அவரை உற்சாகப்படுத்தினர்.

இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவினை சாய் என்பவர் செய்துள்ளார். எடிட்டிங்கினை கலை கலைவாணன் புரிந்துள்ளார். ஆக்‌ஷன் திரைப்படத்தை ஸ்டீஃபன் ரிச்டர் செய்துள்ளார். கலைப்பணியை பி.சேகரும், நடன அமைப்பினை ஷெரிஃப்பும் செய்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்கும் கமல்ஹாசன்:

இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தோடு சேர்த்து, சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ், நிறுவனம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரிலும், சில காட்சிகள் சென்னை, புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி முடிந்த ’அமரன்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்தது. அதன் பின்னர், போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்றுவந்தன. இந்நிலையில் அமரன் திரைப்படம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் அமரன் திரைப்படத்தின் ரிலீஸ் ட்ரெய்லர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி பரவலான வரவேற்பினைப் பெற்று வருகிறது.

எவல்வேஷன் ஆஃப் அமரன் காணொலி:

இந்நிலையில், இதுதொடர்பாக எவல்வேஷன் ஆஃப் அமரன் என்னும் காணொலியை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த காணொலியில் பேசிய கமல்ஹாசன், ‘’இயக்குநர் மேஜர் முகுந்தின் கதையைக் கொண்டு வந்தார். இது என்னுடைய நகரத்தில் இருந்து உருவாகி நாட்டைப் பாதுகாக்க சென்றவர் பற்றியது. தாம்பரத்தில் துவங்கி காஷ்மீரின் யுத்தக்களம் வரை செல்கிறது’’என்றார்.

அடுத்து அந்த காணொலியில் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறுகையில், ‘சினிமாவுக்கு என்றால் Larger Than Life அப்படின்னு சொல்வாங்க. ஒரு ஹீரோவுடைய கேரக்டரை உருவாக்குறதுக்கு, ஒரு கதையின் நாயகனின் கதையை உருவாக்குறதுக்கு, சம்பவத்தைப் பற்றிச் சொல்வதற்கு ஏதோ ஒருவகையில் ஈர்ப்பு இருக்கணும். முகுந்த் வரதராஜனின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ராணுவ வாழ்க்கையிலும் நடந்தது ஃபோர்ஸ் ஆஃப் ஆர்மி என அப்படி இருந்தது. இந்தப் படம் ராணுவத்தினர் பற்றிய பதிவு ஆக இருக்கும். எல்லோருடனுமே கனெக்ட் செய்து கொள்வதற்கான தொடர்பு இருக்கும்ன்னு தோணுச்சு’’என்றார்.

படம் தொடர்பாகப் பேசிய மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ், ‘’ ராஜ்குமார் படம் எடுப்பது தொடர்பாக நிறைய நேர்காணல் என்னிடம் செய்திருந்தார். அதில் ரொம்ப கமிட்டட் ஆக இருந்தார். படம் யாராவது எடுக்கணும் நினைத்தால், அது ராஜ்குமார் சாரை வைத்து செய்யவைக்கணும்னு. அன்பே சிவம் திரைப்படத்தின் வசனங்களை தான் அவர் முதலில் என்னிடம் சொன்னார். ராஜ்குமார் சார், இந்தப் படத்தை கமல்ஹாசன் சார் தான் புரொடியூஸ் செய்றார் அப்படின்னு சொன்னபோது, இது நன்கு வொர்க் ஆகும் என்று தோன்றியது. முகுந்த் எங்கு இருந்தாலும் ரொம்ப சந்தோஷமாக இருந்திருப்பார், கமல்ஹாசன் சார் நம்முடைய கதையை எடுக்கிறார் என்று’’என முடித்தார்.

தான் நடித்த கதாபாத்திரம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன், ‘’மேஜர் முகுந்த் வரதராஜனின் கதையை முழுமையாக கேட்டுட்டு ஓகே சொல்ல எனக்கு ஒரு நைட் தேவைப்பட்டது. அந்தக் கதையைக் கேட்டு முடிக்க அன்னைக்கு என்னால் தூங்க முடியல. என்னுடைய அப்பாவுக்கும் மேஜர் முகுந்துக்கும் கேரக்டர் கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் இருந்தது. இந்தக் கதையைச் சொல்லும்போது என்னுடைய அப்பாவுக்கும் கதையின் உண்மையான நாயகனுக்கும் செய்யும் மரியாதையாக இருக்கும்ன்னு தோணுச்சு’’ என்றார்.