Celebraty Entry: பலத்த பாதுகாப்புடன் இந்தியா வந்த நடிகை! 8 ஆண்டுக்குப் பின் காத்திருக்கும் சம்பவம்! நடக்குமா?
Celebraty Entry: பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, திடீரென ஹைதராபாத் விமான நிலையத்தில் காணப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

Celebraty Entry: பாலிவுட் நட்சத்திர நடிகையான பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டிற்குச் சென்று உலகப் புகழ்பெற்ற நடிகையாக உயர்ந்துள்ளார். அமெரிக்க பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை மணந்து அமெரிக்க மருமகளாகிவிட்டார். தற்போது பிரியங்கா சோப்ரா பல சர்வதேச திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
SSMB29 படத்தில் நடிக்கிறாரா?
இந்த நிலையில், பிரியங்கா சோப்ரா மீண்டும் இந்தியத் திரைப்படங்களில் நடிப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி கூட்டணியில் உருவாகும் SSMB29 படத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்கிறார் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது.
பிரியங்கா சோப்ராவின் வீடியோ வைரல்
சமீபத்தில், வியாழக்கிழமை (ஜனவரி 16) மாலை பிரியங்கா சோப்ரா ஹைதராபாத் விமான நிலையத்தில் அவர் வந்திறங்கி உள்ளார். ஹைதராபாத் விமான நிலையத்தில் அவர் உள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், அவர் பழுப்பு நிற உடையில், பழுப்பு நிற தொப்பியுடன் முகத்தை மறைத்துக் கொண்டு சென்றுள்ளார்.
கடுமையான பாதுகாப்புடன்
கடுமையான பாதுகாப்புடன் தனது உதவியாளர்களுடன் விமான நிலையத்தில் நடந்து செல்லும் பிரியங்கா சோப்ராவை அந்த வீடியோவில் காணலாம். பிரியங்கா சோப்ரா ஹைதராபாத் வந்ததற்கான காரணம் SSMB29 படப்பிடிப்புக்காகத்தான் என்று பரவலாகப் பேசப்படுகிறது. விரைவில் SSMB29 படத்தில் பிரியங்கா சோப்ரா நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராஜமௌலியின் படத்திற்காகவா?
"தனது அடுத்த இந்தியப் படத்தின் அறிவிப்பிற்காக பிரியங்கா சோப்ரா ஹைதராபாத் வந்துள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன" என்று பாலிவுட் வலைத்தளங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரைவில் தெளிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'பாகுபலி', 'ஆர்.ஆர்.ஆர்' படங்களின் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியின் அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ராவைத் தேர்வு செய்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
கடைசியாக நடித்த படம்
இந்தப் படம் மற்றும் அதில் பிரியங்கா சோப்ரா நடிக்கும் கதாபாத்திரம் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான 'தி வொயிட் டைகர்' தான் பிரியங்கா சோப்ரா நடித்த கடைசி இந்தியப் படம். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2016 ஆம் ஆண்டு ஷோனாலி போஸ் இயக்கிய 'தி ஸ்கை இஸ் பிங்க்' தான் அவர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான கடைசி இந்தியப் படம்.
பிரியங்கா சோப்ராவின் வரவிருக்கும் படங்கள்
ஃபர்ஹான் அக்தர் இயக்கத்தில் அலியா பட், கத்ரீனா கைஃப் ஆகியோருடன் 'ஜீ லே ஜரா' படத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளார். தற்போது பிரியங்கா சோப்ரா 'ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட்', 'தி பிளஃப்', 'சிட்டாடல் சீசன் 2', 'ஹாலிடே' (ஜோனாஸ் பிரதர்ஸுடன்) போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் படத்தில் அறிமுகம்
மாடலிங் உலகில் ஆர்வம் கொண்டிருந்த பிரியங்கா சோப்ரா, முதல் முதலில் வெள்ளித் திரையில் நடித்து வெளியான திரைப்படம் என்றால் அது நடிகர் விஜய்யின் தமிழன் திரைப்படம் தான். இந்தப் படத்தின் மூலம் அவருக்கு நல்ல மார்க்கெட் கிடைத்தது. அறிமுகமான முதல் படத்திலேயே மொழியே தெரியாமல் அவர் பாடல் ஒன்றையும் பாடி இருப்பார்.

டாபிக்ஸ்