அன்ஷிதா கர்ப்பமா? பிக்பாஸ் வந்துதான் பேபி ஆச்சா என கேட்டும் ரயான்.. என்ன நடந்தது? வைரலாகும் வீடியோ!
பிக்பாஸ் போட்டியாளரான அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமாக உள்ளதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் ரயான் மற்றும் அன்ஷிதா பேசிக் கொள்ளும் வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகம் தேவை இல்லை. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி ஆரம்பம் ஆனதில் இருந்தே, போட்டியாளர்கள் போட்டியை சுவாரசியமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை காட்டமாக பேசி, வாரம் வாரம் ட்ரில் எடுத்து வரும் அவரின் தொகுத்து வழங்கும் பாங்கு அனைவரையும் கவர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் புதிது, புதிதாக டாஸ்க்குகளை பிக்பாஸும் கொடுத்து நிகழ்ச்சியை சுவார்சியமாக்க முயற்சி செய்து வருகிறார். அதனால் நிகழ்ச்சி விமர்சனத்திற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.
12 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 12 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இன்னும் ஒரு மாதத்தில் நிகழ்ச்சி நிறைவடையவுள்ளதால் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த 7 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை கண்டுள்ளது.
இன்னும் ஒரு மாதத்தில் நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ள நிலையில் தீபக், முத்துக்குமரன், விஜே விஷால், அருண் பிரசாத், ஜெஃப்ரி, ராணவ், ரயான், சௌந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா, மஞ்சரி ஆகிய 12 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.