HBD Neelima Rani: 'ஏது மாயத்தேவரின் மகளுக்கு இப்போ 2 மகள்களா?’ - பிறந்தநாள் மகிழ்ச்சியில் நீலிமா ராணி
நடிகை நீலிமா ராணி இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அவ்வப்போது சினிமா, பெரும்பாலும் சீரியல், இதனிடையே ஆடியோ லாஞ்ச் தொகுப்பாளினி எனப் பல்வேறு அவதாரங்களில் கலக்கி வருபவர், நடிகை நீலிமா ராணி. அவர் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். திரைத்துறையில் அவரது காலடிச்சுவடுகள் என்ன என்பது குறித்துப் பார்ப்போம்.
நீலிமா ராணி 1983, நவம்பர் 6ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் தற்போது சின்னத்திரை மற்றும் திரைப்பட விழாக்களில் தொகுப்பாளினியாகவும் பணிபுரிந்து வருகிறார்.
நீலிமா ராணி, 1992ஆம் ஆண்டு வெளிவந்த தேவர் மகன் படத்தில், மாயத்தேவர் கதாபாத்திரத்தில் நடித்த நாசரின் மகள் மீனா என்னும் கதாப்பாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பின், பாண்டவர் பூமி, விரும்புகிறேன், தம், பிரியசகி, இதயத்திருடன், திமிரு, ஆணிவேர், மொழி, சந்தோஷ் சுப்ரமணியம், ராஜாதி ராஜா, சிலந்தி, புகைப்படம், ரசிக்கும் சீமானே,நான் மகான் அல்ல, முரண், மிதிவெடி, காதல் பாதை, மதில்மேல் பூனை, ஓநாயும் ஆட்டிக்குட்டியும், பண்ணையாரும் பத்மினியும், அமளி துமளி, மன்னர் வகையறா, ருத்ரன் ஆகியப் பல படங்களில் நடித்தவர்.
அதேபோல் சீரியல்களில் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடரில், 5 கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர். பின், தற்காப்புக்கலை தீராதா, கோலங்கள், என் தோழி என் காதலி என் மனைவி, புதுமைப் பெண்கள், தென்றல், இதயம், பவானி, செல்லமே, மகாபாரதம் போன்ற எண்ணற்ற தொடர்களில் நடித்தவர், நீலிமா ராணி.
மக்களிடையே பரவலாக அறியப்பட்ட படங்கள்: நான் மகான் அல்ல படத்தில் நடிகர் கார்த்தியின் தோழியாகவும், பண்ணையாரும் பத்மினியும் படத்தில் பண்ணையாரின் மகளாகவும் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர். தவிர, மெட்டி ஒலி சீரியல் இவரை மிகப்பிரபலமாக்கியிருந்தது என்றே கூறலாம்.
தற்போது என்ன செய்து வருகிறார் நீலிமா?
நீலிமா தற்போது இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயாகவுள்ளார். அவரது கணவரின் பெயர் இசை வாணன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் திரைவிழாக்களில் தொகுப்பாளினி அவதாரம் எடுக்கிறார்.
பன்முகத்திறமை கொண்ட நடிகை நீலிமா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்..!
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
