14 years of Renigunta: சிறுநகரத்தில் அலையும் சிறார்களின் கதை தான் ரேனிகுண்டா!
ரேனிகுண்டா திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.
ரேனிகுண்டா படமானது கடந்த டிசம்பர் 4, 2009ல் ரிலீஸானது. இப்படத்தை இயக்குநர் எம்.பன்னீர்செல்வம் இயக்கியிருந்தார். இப்படத்துக்கான வசனங்களை சிங்கம்புலி எழுதியிருந்தார். மேலும், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஜானியும் சனுஷாவும் நடித்திருக்கின்றனர். தவிர, பாண்டுரங்கனாக நிஷாந்தும், பிரேம்குமார் என்ற டப்பாவாக தீப்பெட்டி கணேசனும், மாரியாக தமிழும் மைக்கேலாக சந்தீபும் நடித்துள்ளனர். இப்படத்துக்கான இசையை கணேஷ் ராகவேந்திரா என்பவர் செய்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ’மழைபெய்யும்போதே நனைகின்ற யோகம் இது என்ன மாயம்’ என்னும் பாடல், இப்போதும் பலரது ஃபேவரைட் ரகமாக உள்ளது.
ரேனிகுண்டா படத்தின் கதை என்ன?
மதுரையில் பெற்றோருடன் மகிழ்ச்சியாக இருக்கும் சிறுவன் சக்தி(ஜானி), சமூகவிரோதிகளால் தனது பெற்றோர் கொல்லப்படுவதை அறிகிறான். அதில் பழிவாங்க முற்படுகையில் சிறைக்கு செல்கிறார், சக்தி. அங்கு பாண்டு (நிஷாந்த்), டப்பா(தீப்பெட்டி கணேசன்), மாரி(தமிழ்), மைக்கேல்(சந்தீப்)ஆகிய இளம் குற்றவாளிகளுடன் நட்பு ஏற்படுகிறது. இவர்கள் தங்கள் விடுதலைக்குப்பின், பெரிய ரவுடிகளாக மாற மும்பை செல்ல ரயிலில் ஏறுகின்றனர். ஆந்திராவின் ரேனிகுண்டாவில் இறங்குகிறார்கள். அங்கு அவர்கள் பங்கர் என்னும் கொலை செய்ய உதவும் புரோக்கரைப் பார்க்கிறார்கள். பின், ரேனிகுண்டாவின் டான் சர்தாரின் அறிமுகம் கிடைக்கிறது. அந்த நகரில் சர்தார் கொடுத்த அசைன்மெண்ட் ஒன்றில் ஃபெயிலிர் ஆக,அதில் பாண்டு சம்பவ இடத்தில் கொல்லப்படுகிறார். அக்கொலைக்கு சர்தார் தான் காரணம் என சக்தியும் மாரியும் சர்தாரை குற்றம்சாட்டுகிறார்கள். அதன்பின் மாரி கொல்லப்படுகிறார். இறுதியில் சக்தி, டப்பா மற்றும் மைக்கேலுடன் கைகோர்க்கிறார். இறுதியில் காவல்துறை அவர்களைத் துரத்துகிறது. இதற்கிடையே ஒரு வாய்பேச முடியாத பெண்ணை(சனுஷா), சக்தி காதலிக்கிறார். அவரை ரேனிகுண்டா ரயில் நிலையத்துக்கு வரச்சொல்லி, அவருடன் தப்பிவிடலாம் என இறுதியாக எண்ணுகிறான், சக்தி. ஆனால், ரயில் நிலையத்தை அடையும்போது சக்தி காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்படுகிறார். அப்பெண் ரயில் நிலையத்தில் காத்திருப்பதுடன் படம் முடிகிறது.
வித்தியாசமான கதை, திரைக்கதை மற்றும் கதைக்களம் ஆகியவற்றில், புதுமுக நடிகர்களை வைத்து படத்தை ஹிட்டாக்கினார், படத்தின் இயக்குநர் எம். பன்னீர்செல்வம். இப்படம் ரிலீஸாகி 14ஆண்டுகளை நிறைவுசெய்தாலும் சலிக்காத விறுவிறு ஆக்ஷன் திரில்லர் தான்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்