தமிழ் செய்திகள்  /  Entertainment  /  A Special Story About Tamil Comedy Actor Ganja Karupu Birthday

HBD Ganja Karupu: டக்ளஸ் அண்ணனை மறக்கமுடியுமா? - கஞ்சா கருப்பு பிறந்தநாள் இன்று!

Marimuthu M HT Tamil
Jan 05, 2024 07:03 AM IST

நடிகர் கஞ்சா கருப்பு இன்று தனது 48ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

கஞ்சா கருப்பு
கஞ்சா கருப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

யார் இந்த கஞ்சா கருப்பு? கருப்பு, சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை என்னும் ஊரில் ஜனவரி 5ஆம் தேதி 1976ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது முழுப்பெயர் கருப்பு ராஜா ஆகும். இவரது மனைவியின் பெயர் சங்கீதா ஆகும். இவர் ஒரு பிஸியோதெரபிஸ்ட் ஆவார். கருப்பு மற்றும் சங்கீதாவின் திருமணம் அவரது சொந்த ஊரான நாட்டரசன்கோட்டையில் 2010ஆம் ஆண்டு நடைபெற்றது. இவரது முதல் மகன் 2011ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். 2013ஆம் ஆண்டு, திருச்சியைச் சேர்ந்த 5 மனநலம் பாதித்த நபர்களைத் தத்தெடுத்து அவருக்குண்டான செலவுகளை செய்துவந்தார்.

திரை வாழ்க்கை: இயக்குநர் பாலா, ஒரு சமயம் சிவகங்கை சென்றபோது ஒரு ஹோட்டலில் உணவு உண்டிருக்கிறார். அப்போது நண்பரானவர் தான், கருப்பு. பின் அவரை தன் பிதாமகன் படத்தில் கஞ்சா குடிக்கி என்னும் சிறிய ரோல் கொடுத்து பயன்படுத்தினார், பாலா. பின், அவரது உதவி இயக்குநர் அமீரின் நட்பு கிடைக்கவே, ராம் படத்தில் வாழவந்தான் என்னும் கதாபாத்திரத்தில் படம் முழுக்க நடித்து ஆங்காங்கே காமெடி செய்திருப்பார், கஞ்சா கருப்பு. 

பின் 2005ஆம் ஆண்டு விஜய் நடித்த சிவகாசி படத்திலும், சண்டக்கோழி படத்தில் விஷால் வீட்டு உதவியாளராகவும், உனக்கும் எனக்கும் படத்தில் கருப்பையா எனும் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார், கஞ்சா கருப்பு. 

பின் அடுத்தடுத்து அரண், சிவப்பதிகாரம், தாமிரபரணி, பருத்திவீரன் ஆகியப்படங்களில் நடித்தார். அதிலும் பருத்திவீரன் படத்தில் டக்ளஸ் அண்ணன் என்னும் கதாபாத்திரத்தில் ஒவ்வொருமுறையும் தொழில் செய்ய நினைக்கையிலும் தோற்றுப் போகும் இளைஞராக நடித்து பட்டையைக் கிளப்பியிருப்பார், கஞ்சா கருப்பு. பின், மீண்டும் விஜய்யுடன் சேர்ந்து அழகிய தமிழ் மகன், மிருகம், பிரிவோம் சந்திப்போம் ஆகியப் படத்திலும் நடித்திருந்தார். அறை எண் 305ல் கடவுள் படத்தில் இரு கதையின் நாயகர்களில் ஒருவராகவும், சுப்பிரமணியபுரம் படத்தில் ஆரம்பத்தில் காமெடியனாகவும் இறுதியில் வன்மம் கலந்த வில்லனாகவும் ஜொலித்திருப்பார், கஞ்சா கருப்பு.

அதன்பின் நாடோடிகள், களவாணி, வேங்கை, போராளி, அப்புச்சி கிராமம், தம்பிதுரை, தொண்டன், குரங்கு பொம்மை, நிமிர், சண்டக்கோழி 2, களவாணி 2, வெண்ணிலா கபடிக்குழு 2, மாமனிதன் ஆகிய முக்கியப் படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்றிருந்த கஞ்சா கருப்பு, மீண்டும் ஓர் கம்பேக் மூவிக்காக காத்திருக்கிறார். 

திரையுலகில் இவர் செய்த டக்ளஸ் அண்ணன், சுப்ரமணியபுரம் காசி ஆகிய கதாபாத்திரங்கள் இன்றும் வேறு ஒருவரால் நிரப்பமுடியாதவை. இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் கருப்பு என்கிற கஞ்சா கருப்புவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறுவதில் பெருமிதம் அடைகிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.