தமிழ் செய்திகள்  /  Entertainment  /  A Special Article To The Completion Of 23 Years Since The Release Of The Movie Ullam Kollai Pokuthae

23 years of உள்ளம் கொள்ளை போகுதே: மிமிக்ரி கலைஞனின் ஒரு தலைக்காதல் எப்படி கைகூடுகிறது என்பதே கதை!

Marimuthu M HT Tamil
Feb 09, 2024 07:01 AM IST

உள்ளம் கொள்ளை போகுதே திரைப்படம் வெளியாகி 23 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

23 years of உள்ளம் கொள்ளை போகுதே
23 years of உள்ளம் கொள்ளை போகுதே

ட்ரெண்டிங் செய்திகள்

உள்ளம் கொள்ளை போகுதே திரைப்படத்தின் கதை என்ன? அன்பு ஒரு மிமிக்ரி கலைஞர். தனது சகோதரி பாரதியுடன் வசித்து வருகிறார். நல்ல செல்வந்தர் வீட்டுப்பெண்ணான ஜோதி, பாரதியின் வீட்டுக்கு அடிக்கடி வந்துபோகையில், ஈர்க்கப்பட்ட அன்பு, அவரை ஒரு தலையாக காதலிக்கிறார். ஒரு நாள் தனது காதலை அன்பு சொல்ல நினைக்கும்போது, ஜோதியைப் பார்க்க அவரது குடும்ப நண்பர் கெளதம் அமெரிக்காவில் இருந்து வருகிறார். கெளதமுக்கும் ஜோதிக்கும் விரைவில் திருமணம் நடக்கப்போகிறது என்பதை அறிந்த அன்பு சிக்கித்திக்குமுக்காடிப் போகிறார். தன் காதலை யாரிடமும் சொல்லாமல் வைத்துக்கொள்கிறார்.

ஆனால், விதி செய்த சதி, கெளதமும் ஜோதியும் சில பொருட்களை வாங்க வெளியில் சென்றபோது விபத்தில் சிக்குகின்றனர். அதில் ஜோதி பார்வையை இழக்கிறார். கெளதம் சம்பவ இடத்திலேயே பலியாகிறான்.

ஆனால், ஜோதியின் பெற்றோர் கெளதம் மரணம் அடைந்ததை, ஜோதிக்குப் பார்வை கிடைக்கும் வரை சொல்லக்கூடாது என்று முடிவு எடுக்கின்றனர். ஒருவேளை தெரிந்தால் அதிர்ச்சியில் எதுவும் நிகழலாம் என அச்சப்படுகின்றனர், ஜோதியின் பெற்றோர்.

இந்நிலையில் திடீரென ஜோதிக்கு கண்பார்வை கிடைக்கும் வரை, கெளதமின் குரலில் மிமிக்ரி செய்து பேசுகிறார், அன்பு.

இதற்கிடையே ஆஸ்திரேலியா நிகழ்ச்சியொன்றில் மிமிக்ரி செய்ய கிடைத்த வாய்ப்பினையும் மறுதலிக்கிறார். பின், அதை மிஸ் செய்தபின், அதன்மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து, தனது தங்கை பாரதியின் திருமணத்துக்கு உதவ முடியவில்லையே என்னும் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிறார், அன்பு. பின் சிறிது நாட்களில் ஜோதிக்கு அறுவை சிகிச்சை செய்து பார்வை கிடைக்கிறது. அப்போது கெளதமை கேட்க, அவர் அமெரிக்கா சென்று விட்டதாக சுற்றத்தார் தெரிவிக்கின்றனர்.

இதனால் மனம்நொந்துபோன அன்பு, தனது காதல் நிறைவேறாததால், விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக, கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டை விட்டுக் கிளம்புகிறார், அன்பு. இதையறிந்த அவரது தங்கை பாரதி, ஜோதியின் வீட்டுக்கு அன்பு தேடி செல்கிறாள். மேலும், தனது அண்ணின் காதலைச் சொல்கிறாள். அப்போது எதேச்சையாக ஜோதி, தனது தோழியின் திருமண வீடியோவில் அன்புடன் இருக்கும் வீடியோவையும் பார்க்கிறார். உடனே ஜோதிக்கு உண்மை புரிகிறது.

இறப்பதற்கு முன், கடைசியாக மேடையில் ஏறி மிமிக்ரி செய்ய நினைத்த அன்பினைத் தேடி ஜோதியும் பாரதியும் செல்கின்றனர். இறுதியில் ஜோதியும் அன்புவிடம் புரோபோஸ் செய்கிறாள். இறுதியில் இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது.

ஹிட்டடித்த உள்ளம் கொள்ளை போகுதே:

இப்படத்தில் அன்பு கதாபாத்திரத்தில் நடிகர் பிரபுதேவாவும், ஜோதியாக அஞ்சலா ஜவேரியும் பாரதியாக தீபா வெங்கட்டும் நடித்திருந்தனர். மேலும், அன்புவின் நண்பர் அறிவு என்னும் ரோலில் விவேக்கும் ஜோதியின் தந்தையாக சித்ரா லட்சுமணனும் நடித்திருந்தனர். கெளதமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் காத்திக் நடித்திருந்தார். மேலும் அன்புவின் நண்பராக மயில்சாமியும், தமிழரசன் என்னும் ரோலில் தாமுவும் நடித்திருந்தனர்.

உள்ளம் கொள்ளை போகுதே படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்து இருந்தார். பாடல்களை பா.விஜய் மற்றும் கலைகுமார் ஆகியோர் எழுதியிருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற கவிதைகள் சொல்லவா உன்பெயர் சொல்லவா எனும் ஹிட் பாடலை பா.விஜய்யும், கிங்குடா அண்ணன் கிங்குடா என்னும் பாடலை கலைகுமாரும் எழுதியிருந்தனர்.

லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இப்படம் 100 நாட்கள் ஓடி ஹிட்டடித்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.