தமிழ் செய்திகள்  /  Entertainment  /  A Special Article Related To The Completion Of 43 Years Since The Release Of Thee

43 Years of Thee: அண்டர்வேர்ல்டு டானாக அண்ணன்.. அவரை பிடிக்கத்துடிக்கும் போலீஸாக தம்பி; அதன் பின்னணியில் நடக்கும் கதை!

Marimuthu M HT Tamil
Jan 26, 2024 07:07 AM IST

தீ படம் வெளியாகி 43 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது தொடர்பான சிறப்புக்கட்டுரையினைக் காணலாம்.

தீ படம் வெளியாகி 43 ஆண்டுகள் நிறைவுசெய்துள்ளது  தொடர்பான சிறப்புக்கட்டுரை
தீ படம் வெளியாகி 43 ஆண்டுகள் நிறைவுசெய்துள்ளது தொடர்பான சிறப்புக்கட்டுரை

ட்ரெண்டிங் செய்திகள்

இப்படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடித்து வெளியான தீவார் என்னும் படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் குறித்து அறிந்துகொள்ள நம்மிடம் சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.

தீ படத்தின் கதை என்ன? ராஜா தான் படத்தின் கதையின் நாயகன். ராஜாவின் தந்தை, ஒரு தொழிற்சங்கவாதியாக இருக்கிறார். ராஜாவின் தாயார் பெயர் சீதா, ராஜாவின் தம்பியின் பெயர் ரவி. இவர்கள் நால்வரும் ஒரு எளிய வீட்டில் வசித்து வருகின்றனர். ராஜாவின் தந்தையின் நேர்மையான குணத்தைச் சிதைக்கும் வகையில், அவர் தனது போராட்டத்தை நிறுத்தாவிட்டால் அவரது குடும்பத்தைக் கொன்றுவிடுவதாக, பணிசெய்யும் நிறுவன அதிபர் மிரட்டுகிறார். இதனால் வேறு வழியில்லாமல், தொழிற்சங்கவாதியான ராஜாவின் தந்தை, முதலாளியை ஆதரிக்கிறார். இவ்விஷயத்தால் சகத்தொழிலாளர்களால் தாக்கப்படுகிறார். மேலும் சிறுவன் ராஜாவின் கையில் ‘ என் தந்தை ஒரு திருடன்’ என முத்திரை குத்திவிட்டு சில தொழிலாளர்கள் செல்கின்றனர்.

இதனால், ராஜாவின் தாய் சீதா, தனது குழந்தைகளுடன் சென்னைக்குப் புலம்பெயர்கிறார். அப்போது சீதா அநாதைச் சிறுவர்களைப் பாதுகாக்கும் பணிக்குச் செல்கிறார். தன் தந்தையின் செயல்பாடுகளால் பாதிப்படைந்த ராஜா, இளம்வயதிலேயே குடும்பத்துக்காக கல்வியைத் தியாகம் செய்கிறான். அவன் பூட்ஸுக்கு ஷூ பாலிஸ் செய்வதில் தொடங்கி பல்வேறு பணிகள் புரிந்து கடத்தல் உலக டான் ஆகிறார். ஆனால், ராஜா தனது தம்பி ரவியை நன்கு படிக்கவைக்கிறான். கமிஷனரின் மகளும் ரவியும் நண்பர்கள் என்பதால், கமிஷனரின் ஆலோசனையின்பேரில் காவல் துறையில் விண்ணப்பித்து, தேர்வாகி, பல்வேறு பயிற்சிகளுக்குப் பின் எஸ்.ஐ ஆகிறார். அதேபோல் ராஜாவும் ஒரு மதுபான கூடத்தில் இருந்த அனிதாவும் விவிங் டூ கெதரில் இருக்கின்றனர். அனிதா கர்ப்பமானதும், அவளைத் திருமணம் செய்து, தாய் மற்றும் தம்பியுடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறான், ராஜா.

ஆனால், விதியின் சதியால் அனிதா, ராஜாவின் எதிரிகள் சிலரால் கொல்லப்படுகிறார். இறுதியில் ராஜா அவர்களைக் கொன்றுவிட்டு தாயிடம் மன்னிப்புக்கேட்க முயற்சிக்கிறார். ஆனால், அவரது தாய் அவரை புறக்கணிக்கிறார். கடைசியில் போலீஸ் அலுவலர் ரவிக்கும் - ராஜாவுக்கும் சண்டை வருகிறது. ரவி, ராஜாவைக் கொல்கிறான். ராஜா தாயின் கைகளில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டே இறக்கிறார். ரவி, தனது அண்ணன் என்றும் பாராமல் கடமையைச் செய்தமைக்காக விருதுபெறுகிறார். 

இதில் ராஜாவாக ரஜினிகாந்தும் காவல்துறை அலுவலர் ரவியாக சுமனும், தாய் சீதாவாக செளகார் ஜானகியும் நடித்துள்ளனர். கமிஷனரின் மகளாக ஸ்ரீப்ரியா நடித்துள்ளார்.

இப்படத்தின் மூன்று பாடல்களையும் கண்ணதாசன் எழுத எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சிறுவயது ரஜினியாக தோன்றியவரின் நடிப்பு மற்றும் பாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

இப்படத்தினை நடிகர் மோகன்லாலின் மாமாவும் நடிகருமான பாலாஜி, தனது சுரேஷ் பேனரில் தயாரித்து இருந்தார். வெளியாகி 43ஆண்டுகளைக் கடந்து இருந்தாலும் விறுவிறுப்பான திரைப்படமாக இருப்பதால், டிவியில் போட்டாலும் இன்றும் ரஜினியின் ‘தீ’ படத்தை ரசிக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.