28 Years Of Minor Mappillai: பணக்காரர்களுக்கு இடையிலான போட்டி.. இடையில் வரும் நாடகக் காதல் நிஜமானதும் திருந்தும் பெண்
28 Years Of Minor Mappillai: பணக்காரர்களுக்கு இடையிலான போட்டியில், இடையில் வரும் நாடகக் காதல் நிஜமானதும் திருந்தும் பெண்ணைப் பற்றிய கதை ‘மைனர் மாப்பிள்ளை’ ஆகும். இப்படம் வெளியாகி 28ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.
28 Years Of Minor Mappillai:‘’மைனர் மாப்பிள்ளை’’ திரைப்பட இயக்குநர் வி.சி. குகநாதன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், ரஞ்சித், புதுவரவு ராஜ்குமார், சுபஸ்ரீ மற்றும் கீர்த்தனா, ஸ்ரீவித்யா, வடிவேலு, விவேக் ஆகியோர் நடித்து, 1996ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி ரிலீஸானது. இப்படம் முழுக்க முழுக்க காமெடி பாணியில் எடுக்கப்பட்டது. இப்படத்துக்குண்டான ஒளிப்பதிவினை கே.பி.அஹமது, எடிட்டிங்கினை ஆர்.டி. அண்ணாதுரை, இசையினை இசைவாணன் செய்திருந்தார். இப்படத்தை விக்டரி மூவிஸ் தயாரிப்பில் கே.ராகவா செய்திருந்தார்.
மைனர் மாப்பிள்ளை திரைப்படத்தின் கதை என்ன?:
ராமு மற்றும் மோசஸ் அடிப்படையில் ஆதரவற்றவர்கள். நல்ல நண்பர்களாகத் திகழ்ந்தனர். சிறிது காலம் ஏமாற்று வேலைகள் செய்து பிழைப்பினை நடத்தி வருகின்றனர். அப்போது, போதைப்பொருள் கடத்தல்காரனான ‘’சேலஞ்ச்’’சங்கரலிங்கத்துடன் மோதிக்கொள்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, கல்லூரியில் படிக்கும் திலீப்பும், ரேகாவும் ஒருவரை ஒருவர் உயிருக்காக காதலிக்கின்றனர். அப்போது, ரேகாவின் தந்தை ‘குப்பைத் தொட்டி’ கோவிந்தசாமி, தற்போது செல்வந்த தொழிலதிபராக இருந்தாலும், முன்பு, பிச்சை எடுத்தவர். திலீப்பின் தாயார் ‘ராயல்’ ராஜலட்சுமி, பணக்கார ஆணவமிக்க பெண். ராயல் ரிக்ரியேஷன் என்னும் கிளப் தலைவருக்கான போட்டியில் ‘குப்பைத்தொட்ட்டி’ கோவிந்தசாமியும், ‘ராயல்’ராஜலட்சுமியும் எதிரெதிராக போட்டியிடுகின்றனர்.
இதில் ‘குப்பைத்தொட்டி’கோவிந்தசாமி வெல்கிறார்.
ஒரு கட்டத்தில் திலீப்பும், ரேகாவும் திருமணம் செய்துகொள்கின்றனர். ஆனால், இந்த திருமணத்திற்கு ‘ராயல்’ராஜலட்சுமி எதிர்ப்புத் தெரிவித்து, அவமானப்படுத்துகிறார்.
இது ஒருபுறம் இருக்க, ராமுவும் மோசஸும் செய்த திருகு வேலைக்கு, கையும் களவுமாக மாட்டிக்கொள்கின்றனர்.
அப்போது ‘குப்பைத்தொட்டி’ கோவிந்தசாமி அவர்கள் இருவரையும் காப்பாற்றுகின்றார். அப்போது ‘ராயல்’ராஜலட்சுமியின் மகள் சீதாவை காதலிக்கவேண்டும் என ’குப்பைத்தொட்டி’கோவிந்தசாமி, ராமுவிடம் கேட்கிறார்.
அதன்பின், ராஜலட்சுமியின் ஓட்டுநராக மாறும் ராமுவும், ‘ராயல்’ராஜலட்சுமியின் மகள் சீதாவும் உண்மைக்கு உண்மையாக காதலித்து திருமணம் செய்துகொள்கின்றனர். பின்னர் சீதா கர்ப்பிணியாகிறார்.
பின், மோசஸ் பரிசளிக்கும் டாக்ஸியை ஓட்டும், ராமு, தன் மனைவியை பிரசவ வலியில் மருத்துவமனையில் சேர்க்க சென்று கொண்டு இருக்கிறார். அப்போது, முன்பே வைத்த ‘சேலஞ்ச்’சங்கரலிங்கத்தின் ஆட்கள், ராமுவைப் பார்த்துவிட்டு, அவரை கொல்ல முயற்சிக்கின்றனர். எப்படியோ, தனது கர்ப்பிணி மனைவி சீதாவை மருத்துவமனையில் சேர்த்துவிடுகிறார். ‘சேலஞ்ச்’ சங்கரலிங்கத்தின் ஆட்களை, மோசஸ் ஒரு கை பார்க்கிறார். இறுதியில் ராமுவுக்கும் சீதாவுக்கும் அழகிய பெண் குழந்தை பிறந்தது. பின், ‘ராயல்’ ராஜலட்சுமியும் மனம் மாறி, ராமுவையும், தன் மகள் சீதாவையும், பேத்தியையும் ஈகோவை களைந்து ஏற்றுக்கொள்கிறாள்.
மைனர் மாப்பிள்ளை படத்தில் நடித்தவர்கள் விவரம்:
இப்படத்தில் ராமுவாக அஜித் குமாரும், மோசஸாக ரஞ்சித்தும், திலீப் குமாராக புதுவரவு ராஜ்குமாரும், ரேகாவாக நடிகை சுபஸ்ரீயும் நடித்திருந்தனர். பின், வடிவேலு ‘குப்பைத்தொட்டி’ கோவிந்தசாமியாகவும், ‘ராயல்’ ராஜலட்சுமியாக ஸ்ரீவித்யாவும், கிச்சாவாக விவேக்கும் நடித்துள்ளனர். ‘சேலஞ்ச் ரத்னம்’ கேரக்டரில், சங்கரலிங்கமும், ’ராயல்’ராஜலட்சுமியின் கணவராக மோகன் ராமனும், வத்தலக்குண்டு வஞ்சிராஜா கேரக்டரில் ஒயு.ஜி. மகேந்திராவும் நடித்திருந்தனர்.
இப்படத்தில் இசைவாணன் இசையில் 6 பாடல்கள் படத்தில் இடம்பெற்றன. இப்படம் முழுக்க முழுக்க எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் திரைக்கதையைக் கொண்டும், வடிவேலு மற்றும் விவேக் வரும் காட்சிகள் எல்லோரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது. படம் 50 நாட்களைத்தாண்டி ஹிட்டானது.
இப்படம் வெளியாகி 28ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. இன்றும் டிவியில் போட்டால், இப்படத்தை ரசிக்கலாம்.
டாபிக்ஸ்