தமிழ் செய்திகள்  /  Entertainment  /  A Special Article Related To The Completion Of 19 Years Of The Movie Varnajalam

19 years of வர்ணஜாலம்: ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலரை உறவாடிப் பழிவாங்கத்துடிக்கும் இளைஞரின் கதை!

Marimuthu M HT Tamil
Feb 13, 2024 07:15 AM IST

தமிழில் வர்ணஜாலம் திரைப்படம் வெளியாகி 19 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

19 years of வர்ணஜாலம்
19 years of வர்ணஜாலம்

ட்ரெண்டிங் செய்திகள்

வர்ணாஜாலம் படத்தின் கதை என்ன?

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலர் தேவநாதன் (நாசர்), ஓய்வுபெற்றவுடன் தனது சகோதரர் சேகர்(தலைவாசல் விஜய்), கொழுந்தியாள் விஜி(காஞ்சனா மெண்டீஸ்). இந்நிலையில் தேவநாதன் தனது குழந்தைகள், தம்பியின் குடும்பத்துடன் கூட்டுக்குடித்தனமாக ஊட்டியில் தேயிலைத்தோட்டங்களை வாங்கி குடியேறுகிறார்.

தேவநாதனுக்கு மகள் அனிதா(குட்டி ராதிகா), மகன் அஷ்வின்(ஆனந்த் சாமி) ஆகிய இருபிள்ளைகள் உள்ளனர். அனிதாவுக்கு ஐபிஎஸ் ஆக ஆசை, அதற்கான முயற்சியில் இருக்கிறார். பின், டேனியல்(ஸ்ரீகாந்த்), ஒரு சில குற்றவாளிகளிடம் இருந்து தேவநாதனைக் காப்பாற்றி, தேயிலைத்தோட்ட மேலாளராகப் பணியைப் பெறுகிறார்.

ஒரு இரவில் வேடன் போல வேடமிட்டு அஷ்வின், தேவநாதனை அச்சுறுத்துகிறான். இதனால் அஷ்வினுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டது அவரது குடும்பத்தினரும் அஞ்சுகின்றனர். இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் டேனியல், தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டு,அதைச் செய்தது அஷ்வின் எனக் குற்றம்சாட்டுகிறார். ஒரு கட்டத்தில் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார், அஷ்வின். அங்கு இருந்து தப்பித்து வரும் அஷ்வின், டிஸ்சார்ஜ் செய்து வீட்டில் இருக்கும் டேனியலின் வீட்டுக்குத் தீ வைக்கிறார். இறுதியில் மீண்டும் மனநலமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்.

மேலும், டேனியல், தேவநாதனின் கோட் மற்றும் தொப்பி அணிந்து, விஜி குளிக்கும்போது உளவுபார்க்கிறார். இதை உணரும் விஜி, மாமா தேவநாதன் தவறான எண்ணத்தில் இருப்பதாக கணவர் சேகரிடம் சொல்ல, சகோதரர்களான தேவநாதனுக்கும் சேகருக்கும் இடையே பிரச்னை உண்டாகிறது.

ஃப்ளாஷ்பேக்: பின்னர் ஒரு சில மாதங்கள் கழித்து, அனிதா, டேனியல் ஒரு பெண்ணின் நினைவிடத்தில் இந்து சடங்குகள் செய்வதைக் கண்டு அதிர்ந்து அவரிடம் கேட்கிறார். அப்போது ஃபிளாஷ்பேக் ஓப்பன் ஆகிறது.

பிறப்பால் இந்துவான டேனியலின் இயற்பெயர் சக்திவேல். அவர் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஓவியராக இருக்கிறார். அவரது அக்கா கார்த்திகா(சரண்யா பொன்வண்ணன்), மாமா(நிழல்கள் ரவி), அக்காவின் மகள் அபிராமி(சதா). அக்காவின் குடும்பத்தால் வளர்கிறார், சக்திவேல். அப்போது அக்காவின் மகளை(சதா) காதலித்து வந்தார், சக்திவேல்(ஸ்ரீகாந்த்). இருவரும் ஒருவருக்கொருவர் திருமணம் செய்ய ஆசைப்பட்டு இருந்தனர். அப்போது, தேவநாதன் ஓய்வுபெறுவதற்கு முந்தைய கடைசிநாளில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தவறுதலாக அபிராமி கொல்லப்படுகிறார். அந்தக் கொலையை மறைக்க தேவநாதன், அது ரவுடியின் காதலி என பொய்யாக ரவுடி குணாவின் புகைப்படத்தினை அவருடைய உடைமைகளில் வைக்கிறார். இது அந்தப் பெண்ணின் குடும்பத்திற்குத்தெரிந்து தாய், தந்தை இருவரும் தற்கொலை செய்துகொள்கின்றனர். சக்திவேல் கைதாகி ஆறு மாத சிறைத்தண்டனை பெறுகிறார். அப்போது, இந்த நிகழ்வுகளை இன்னொரு ஐபிஎஸ் அதிகாரியான பிரபாகரன் ஐபிஎஸ் (அஜய் ரத்தினம்), சக்திவேலிடம் சொல்கிறார்.

இந்த ஆத்திரத்தில் சக்திவேல் டேனியல் என்னும் பெயரை மாற்றி, அவரைப் பழிவாங்க வந்ததை, அவரது மகள் அனிதாவிடம் தெரியப்படுத்துகிறான். ஆனால், அனிதாவால் முதலில் இதை நம்பமுடியவில்லை. அவர் சிலரை திருகுவேலை செய்து காப்பாற்றமுடிவதை, சக்திவேல் அனிதாவை அழைத்துச் சென்று அடையாளப்படுத்துகிறான்.

படத்தின் கிளைமேக்ஸில், அபிராமி கொல்லப்பட்டதுபோலவே, ரவுடி குணாவால் தேவநாதன் கொல்லப்படும்படி, மறைமுகத்திட்டம் தீட்டி செயல்படுத்துகிறார், சக்திவேல். அது சரியாக நடந்து தேவநாதன் இறக்கும்போது, தான் டேனியல் அல்ல சக்திவேல் என்பதை வெளிப்படுத்துகிறார்.

கடைசி காட்சியில் ஊட்டியில் இருந்து கிளம்பும் பேருந்தில் செல்லும்போது செய்தித்தாளில் ஒரு கட்டுரையைப் படிக்கிறார், சக்திவேல். அதில் அனிதா தனது தந்தை குற்றவாளி எனப் பேட்டி கொடுத்ததைப் பார்க்கிறார். படம் முடிகிறது.

படம் வெளியாகி 19 ஆண்டுகள் ஆனாலும் விறுவிறுப்பான திரில்லர் கதையால் படத்தை இப்போதும் பார்க்கலாம். மிகப்பெரிய ஹிட் ஆகவில்லையென்றாலும்போட்ட காசை எடுத்து வெற்றிபெற்றது, வர்ணஜாலம். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.