Tamil News  /  Entertainment  /  A Special Article Related To The Completion Of 16 Years Since The Release Of The Film Sadhumiranda

16 Years Of Sadhu Miranda: வங்கி கொள்ளையும் அதில் பாதிக்கப்பட்டவனின் எழுச்சியும் தான் ‘சாதுமிரண்டால்’!

Marimuthu M HT Tamil
Feb 08, 2024 07:13 AM IST

சாது மிரண்டா திரைப்படம் வெளியாகி 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

16 Years Of சாதுமிரண்டா
16 Years Of சாதுமிரண்டா

ட்ரெண்டிங் செய்திகள்

சாது மிரண்டா திரைப்படத்தின் கதை என்ன? டிஐடி என்னும் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு வங்கியில் 20 கோடி ரூபாய் திருடப்படுகிறது.  அப்போது கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்கையில் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட ஒரு கல்லூரி மாணவி கொல்லப்படுகிறார். இதனால் வங்கியின் மேலாளர் தற்கொலை செய்துகொள்கிறார். இந்தக் கொள்ளையில்  ராம் மோகன் மற்றும் முன்னாள் அமைச்சர் வெங்கட சபாபதி ஆகியோர் தொடர்புவகிக்கின்றனர்.  சுந்தரமூர்த்தி இந்த கொள்ளையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சார்ந்வர். அவர் பிரியா என்பவரைப் பார்க்கிறார். ராம் மோகன் தான் கொள்ளையன் என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்து அதன்பின் விளைவுகளைத் தேடி அவர்களுக்குத் தண்டனைப் பெற்றுத்தர முயற்சிக்கிறான், சுந்தரமூர்த்தி. இதைப் பல்வேறு திருப்பங்களுடன் காட்சிப்படுத்தியிருக்கிறது, சாது மிரண்டா. சுந்தரமூர்த்தி ராம் மோகனுடன் சண்டையிட்டு, க்ளைமாக்ஸில், ராம் மோகனைக் கொல்வதற்கான அவரது உந்துதலை வெளிப்படுத்துகிறார். படத்தின் தொடக்கத்தில் கொல்லப்பட்ட கல்லூரி மாணவி சுந்தரமூர்த்தியின் சகோதரி என்பது தெரியவருகிறது. சுந்தரமூர்த்தியின் சகோதரியுடைய உடலைப் பார்த்ததும், சுந்தரமூர்த்தியின் தாயும் அதிர்ச்சியில் இருந்து இறந்துவிடுகிறார் என்பது தெரியவருகிறது. சுந்தரமூர்த்தி இறுதியாக ராம் மோகனை கட்டடத்திலிருந்து தூக்கி எறிந்து கொன்றுவிட்டு பிரியாவுடன் செல்வதாகப் படம் முடிகிறது. 

இப்படத்தில் சுந்தரமூர்த்தியாக பிரசன்னாவும், ராம் மோகனாக அப்பாஸூம் பிரியாவாக காவ்யா மாதவனும் நடித்துள்ளனர். வெள்ளை என்கிற வெள்ளைச்சாமியாக கருணாஸ் நடித்துள்ளார். அமைச்சர் வெங்கட சபாபதியாக கோட்டா சீனிவாச ராவ்வும் டேவிட் ராஜ் என்னும் ரவுடி தலைவராக மனோஜ் கே.ஜெயனும் நடித்துள்ளனர். வங்கியின் மேலாளராக மணி வண்ணனும்; சுந்தரமூர்த்தியின் சகோதரியாக மித்ரா குரியனும் நடித்துள்ளனர். மேலும் எம்.எஸ். பாஸ்கர், சார்லி, வையாபுரியும் நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் சேது விநாயகம், ஸ்வேதா மேனன், ஸ்ரீமன், தலைவாசல் விஜய் ஆகியோர் சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் குறிப்பாக ‘நீதானா.. நீதானா’;’ராமனா பொறந்தாலும்’; ‘ஆகாயம் காணாமல்’, ‘ஹபிபி ஹபிபி’, ‘புயலோடு மோதிடும்’என அனைத்துப் பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதியுள்ளார்.

இப்படம் வெளியானபோது, '’நகைச்சுவை மற்றும் சஸ்பென்ஸ் கலந்த இயக்குநரின் முயற்சியே சாது மிரண்டா. திரைக்கதை எழுதுவதில் இருந்து உள்ள அவரது புத்திசாலித்தானம் ஒவ்வொரு சட்டகத்தில் இருந்தும் வெளிப்படுகிறது. அதே போல் நன்கு வடிவமைக்கப்பட்ட ஸ்கிரிப்டை திறமையாக செயல்படுத்தியுள்ளனர்’’ என பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனம் எழுதியது. 

’’இப்படத்தில் இயக்குநர் சித்திக் த்ரில்லர் கதைக்களத்துடன் நகைச்சுவையைப் பகிர்ந்து இருக்கிறார்.  என்ன பழிவாங்கும் திருப்பங்கள் எல்லாம் மிகவும் பரிச்சயமானதாகத் தெரிகிறது. நகைச்சுவைப் படத்தை விரும்புவர்களுக்கு சாது மிரண்டால் பார்க்கத் தகுந்தது" என எழுதியுள்ளது, சிஃபி இணையதளம்.

இப்படம் வெளியாகி 16 ஆண்டுகளை நிறைவுசெய்தாலும் டிவியில் போட்டால், இப்படத்தின் நகைச்சுவைக்காகவே இப்படத்தினை ஒருமுறைப் பார்க்கலாம். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.