தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  29yearsofthirumoorthy:தேர்தலில் நிற்கும் லாரி டிரைவர்.. அவருக்குப் பின் நடக்கும் சதியில் இருந்து மீண்டால் ‘திருமூர்த்தி’

29YearsOfThirumoorthy:தேர்தலில் நிற்கும் லாரி டிரைவர்.. அவருக்குப் பின் நடக்கும் சதியில் இருந்து மீண்டால் ‘திருமூர்த்தி’

Marimuthu M HT Tamil
May 11, 2024 10:24 AM IST

நடிகர் விஜயகாந்த் நடித்து வெளியான திருமூர்த்தி திரைப்படம் வெளியாகி 29 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. இந்நிலையில் திருமூர்த்தி திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைக் காண்போம்.

29YearsOfThirumoorthy:தேர்தலில் நிற்கும் லாரி டிரைவர்.. அவருக்குப் பின் நடக்கும் சதியில் இருந்து மீண்டால் ‘திருமூர்த்தி’
29YearsOfThirumoorthy:தேர்தலில் நிற்கும் லாரி டிரைவர்.. அவருக்குப் பின் நடக்கும் சதியில் இருந்து மீண்டால் ‘திருமூர்த்தி’

ட்ரெண்டிங் செய்திகள்

திருமூர்த்தி படத்தின் கதை என்ன?

கதையின் நாயகனான மூர்த்தி என்கிற திருமூர்த்தி ஒரு லாரி டிரைவர். இவர் தனது தாய் ராமாத்தாவுடன் வசித்து வருகிறார். அப்போது அப்பகுதியில் ரவுடி கோவிந்தனுக்கும், திருமூர்த்திக்கும் ஒரு கட்டத்தில் பஞ்சாயத்து வருகிறது. இருவருக்கும் அவ்வப்போது மோதிக்கொள்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, மூர்த்தியும் உமாவும் காதலிக்கின்றனர். அப்போது, உமாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. உடனே உமா, திருமூர்த்தியின் உதவியை நாடுகிறார். அதன்பின், திருமூர்த்தி, உமாவின் தந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கிறார். இதற்கிடையே அப்போது சில அரசியல் கட்சியினரால் சாலை தடுப்பு போடப்பட்டு தடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், மருத்துவமனைக்குச் செல்லும் பாதையிலேயே உமாவின் தந்தை மரணம் அடைகிறார். தந்தையின் மரணத்தால், உமா நிலைகுலைகிறார். காதலி, உமாவின் அழுகை, மூர்த்தி என்கின்ற திருமூர்த்தியை அதைச் செய்தவர்கள் மீது கோபத்தை உண்டுசெய்கிறது.

இதுகுறித்து விசாரிக்கும் திருமூர்த்திக்கு, அவ்வாறு சாலையில் தடுப்புகளை வைக்க வைத்தது, ஆளுங்கட்சி அமைச்சர் சிகாமணியின் பணி என்று தெரிகிறது.

அதன்பின், மூர்த்தி ஒரு பொது இடத்தில் வைத்து ஆளுங்கட்சி அமைச்சர் சிகாமணியிடம் சண்டையிடுகிறார்.

பின், வரும் தேர்தலில் மூர்த்தி வேட்பாளராக களம்காண்கிறார். அப்போது, மூர்த்தியிடம் அடிக்கடி சண்டையிடும் கோவிந்தன், அவருக்கு எதிர்முனையான ஆளுங்கட்சி அமைச்சர் சிகாமணியின் கட்சியில் சேர்ந்து மூர்த்தியை எதிர்க்கும் வேட்பாளராகிறார். இதற்கிடையே மூர்த்திக்கும் உமாவுக்கும் திருமணம் நடைபெற்றுவிடுகிறது. பின், இதற்கிடையே பொது இடத்தில் மூர்த்தியால் அவமானப்படுத்தப்பட்ட ஆளுங்கட்சி அமைச்சர் சிகாமணி, ரகசியமாக சதித் திட்டம் தீட்டுகிறார். அதாவது, கோவிந்தனைக் கொன்றுவிட்டு, மூர்த்தியின் மீது பழியைப் போட்டு, அவரை சிறையில் வைக்கமுயற்சிக்கிறார்.

அதில் இருந்து மூர்த்தி எப்படி மீண்டார்; ஆப்பிரிக்காவில் இருந்து சமாதானப் புறாக்களை பறக்கவிட வரும் தலைவர் ஒருவரை கொல்ல நடக்கும் சதியை மூர்த்தி எப்படி முறியடிக்கிறார் என்பது தான் பரபரப்பான கிளைமேக்ஸ்.

படத்தில் நடித்தவர்கள் யார்?

இப்படத்தில் மூர்த்தி என்கிற திருமூர்த்தியாக, விஜயகாந்த் நடித்துள்ளார். உமாவாக ரவளி நடித்திருக்கிறார். கோவிந்தனாக ஆனந்த ராஜூம், சிகாமணியாக ராஜன்.பி.தேவ்வும், உமாவின் தந்தையாக ஜனகராஜூம் நடித்திருக்கின்றனர். மூர்த்தியின் அம்மா ராமாத்தாவாக மனோரமா நடித்திருக்கின்றார். தவிர, செண்பகம், செந்தில், ஜனகராஜ், சுந்தர்ராஜன், பசி நாராயணன், ஓமக்குச்சி நரசிம்மன் ஆகியோர் முக்கியக்கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன் திரைப்படமான ‘திருமூர்த்தி’, விஜயகாந்தின் நல்ல ஒரு ஹிட் படமாக அமைந்தது. படத்தின் வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணமாக இருந்தது, தேவாவின் இசையில் வெளிவந்த பாடல்கள் எனலாம். 

மொத்தமுள்ள ஆறு பாடல்களில், செங்குருவி செங்குருவி காரமடை செங்குருவி சேலைகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி, மதுரைக்கார மச்சானுக்கு ஜாஸ்தி தான் மஸ்து ஜாஸ்தி தான் ஆகியப் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ஆகி, தற்போது வரை விசேஷ வீடுகளில் ஒலிபரப்பு செய்யப்படுகின்றன.

படம் வெளியாகி 29ஆண்டுகள் ஆனாலும் விஜயகாந்தின் அதிரடி ஆக்‌ஷன் மற்றும் பாடல்களுக்காக, இப்போதுபோட்டாலும் படத்தை டிவியில் பார்க்கலாம். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்