Tamil News  /  Entertainment  /  A Special Article Related To The 26th Anniversary Of The Release Of The Movie Kondattam

26 years of கொண்டாட்டம்: விபத்து.. நண்பர்கள் மரணம்.. ஹீரோவின் காதல் கைகூடியதா என்பதே கதை!

Marimuthu M HT Tamil
Feb 06, 2024 07:20 AM IST

கொண்டாட்டம் திரைப்படம் வெளியாகி 26ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

26 years of கொண்டாட்டம்
26 years of கொண்டாட்டம்

ட்ரெண்டிங் செய்திகள்

கொண்டாட்டம் திரைப்படத்தின் கதை என்ன?

இக்கதையின்படி, ராஜா(அர்ஜூன்) என்னும் பணக்கார நண்பனுக்கு மூன்று உயிர் நண்பர்கள் இருக்கின்றனர். (ஆனந்த் பாபு, சின்னி ஜெயந்த், ஆனந்த் சுந்தர்ராஜன் ஆகியோர் தான் அந்த மூன்று நண்பர்கள்). ராஜாவும் லலிதாவும்(சிம்ரன்) ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகின்றனர். இதனிடையே நண்பர்கள் நால்வரும் சேர்ந்து ஒரு படகு சவாரி சென்றபோது விபத்து ஏற்படுகிறது. அதில் ராஜாவின் நண்பர்கள் மூவரும் மரித்துப்போகின்றனர். இந்த சாவுக்கு ராஜா தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என லலிதா, ராஜா மீது குற்றச்சாட்டை முன்வைக்கிறார். தனது காதலையும் முறித்துக்கொள்கிறார். இதனால் வேதனைஅடையும் ராஜா தனது செயலுக்கு மனம் வருந்தி, விபத்தில் இறந்த தனது நண்பர்களின் குடும்பத்துக்குத் தனது சொத்தினை எழுதி வைத்துவிடுகிறான். இதனைத்தொடர்ந்து ஆனந்த் சுந்தர்ராஜனின் மனைவியும் ஒரு குழந்தையைப் பெற்றுத்தந்துவிட்டு இறந்துவிட்டார் என அறிகிறார், ராஜா.

தனது நண்பனின் குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்க்க நினைக்கும் ராஜா, அவரது வீட்டில் அடைக்கலமாகி தங்குகிறார். ஆனந்தின் குடும்பம் மிகப்பெரியது. அதில் வயதான தம்பதியராக இருக்கும் இருவரைத் தவிர்த்து(ஜெமினி கணேசன், செளகார் ஜானகி) , ராஜா, அந்த குடும்பத்தில் அடைக்கலம் ஆவதை யாரும் விரும்பவில்லை. இருப்பினும் எதையும் கண்டுகொள்ளாத ராஜா விரைவில் அக்குடும்ப உறுப்பினர்களின் அன்பைப்பெறுகிறான். மேலும், அக்குழந்தையைக் கொல்ல நடக்கும் சதியை அறிந்து, அதன் பின்னணியில் இருக்கும் நபரை அமைதியாகத் தேடும்பணியில் ஈடுபடுகிறான்.

அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக, ராஜாவுடன் காதலை முறித்த லலிதாவுக்கு, ஆனந்தின் குடும்பத்தில் இருக்கும் நபருடன்(டகுபதி ராஜா) நிச்சயம் ஆகிறது. மேலும் அவர் அவ்வீட்டிலேயே தங்க வைக்கப்படுகிறார். இதற்கிடையே அக்குடும்பத்தில் இருக்கும் வித்யா(மந்தரா) ராஜாவை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், அதை ராஜா ஏற்கவில்லை. பின் குழந்தையின் பெயர் சூட்டுவிழாவில், ராஜா தான் ஆனந்தின் சாவுக்குக் காரணம் எனும் தகவல் அம்பலமாகிறது. அப்போது ராஜாவின் சொத்தினை, குழந்தைக்கு எழுதி வைத்துவிட்டதாக அவ்விடம் வரும் ராஜாவின் வேலைக்காரன்(டெல்லி கணேஷ்) பொதுவெளியில் அம்பலப்படுத்துகிறான். அப்போது அக்குடும்பம் செய்வதறியாது தவிக்கிறது. ராஜாவை மன்னிக்க முயற்சிக்கிறது. தற்செயலாக, குழந்தையைக் கொல்ல முயன்ற நபர் அணிந்திருந்த மோதிரத்தை கூட்டத்தில் ஓட்டுநர் பழனி(ரமேஷ் கண்ணா) அணிந்திருப்பதை அறிந்த ராஜா, அவரை அடித்து உதைத்து உண்மையை வெளியில் கொண்டு வந்துவிடுகிறார். இதனால் குடும்பத்தினர் ராஜாவை முழுமையாக நம்புகின்றனர். முன்னாள் காதலியான லலிதா கண்ணில் கண்ணீருடன் ராஜாவுடன் சேர்கின்றார். இறுதியில் ராஜா லலிதாவையும், அக்குடும்பத்தைச் சார்ந்த வித்யா, லலிதாவுக்கு நிச்சயிக்கப்பட்ட நபரையும்(டகுபதி ராஜா) மணக்கின்றனர். படம் ஹேப்பி எண்டிங்குடன் முடிகிறது. 

வழக்கமான யூகிக்கக் கூடிய திரைக்கதை, அரதப் பழசான கதை ஆகியவற்றால் இப்படம் சராசரி வெற்றியைத் தான்பெற்றது. இருப்பினும் இப்படத்தின் முதல் பாதியில் நண்பர்கள் அடிக்கும் லூட்டி ரசிக்கவைக்கிறது. ராஜா - லலிதா காதல் போர்ஷனும் கலகலப்பாக இருக்கிறது. அதனால் டைம் பாஸ் மைண்ட் செட்டில் இருக்கும் நபர்கள், இப்படத்தை டிவியில் போட்டால் ஒரு முறை பார்க்கலாம். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.