25 Years Of Sangamam: பரத வித்வானுக்கு எதிரான சவாலில் வெல்லும் கிராமியக் கலைஞர் மற்றும் அவரது காதல் தான் ‘சங்கமம்’
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  25 Years Of Sangamam: பரத வித்வானுக்கு எதிரான சவாலில் வெல்லும் கிராமியக் கலைஞர் மற்றும் அவரது காதல் தான் ‘சங்கமம்’

25 Years Of Sangamam: பரத வித்வானுக்கு எதிரான சவாலில் வெல்லும் கிராமியக் கலைஞர் மற்றும் அவரது காதல் தான் ‘சங்கமம்’

Marimuthu M HT Tamil
Jul 16, 2024 12:15 PM IST

25 Years Of Sangamam: பரத வித்வானுக்கு எதிரான சவாலில் வெல்லும் கிராமியக் கலைஞர் மற்றும் அவரது காதல் தான் ‘சங்கமம்’ திரைப்படம். சங்கமம் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவுசெய்த நிலையில் அது தொடர்பான சிறப்புக் கட்டுரை!

25 Years Of Sangamam: பரத வித்வானுக்கு எதிராக சவாலில் வெல்லும் கிராமியக் கலைஞர் மற்றும் அவரது காதல் தான் ‘சங்கமம்’
25 Years Of Sangamam: பரத வித்வானுக்கு எதிராக சவாலில் வெல்லும் கிராமியக் கலைஞர் மற்றும் அவரது காதல் தான் ‘சங்கமம்’

சங்கமம் திரைப்படத்தின் கதை என்ன?

திருச்சியைச் சேர்ந்த மூத்த பரதநாட்டியக் கலைஞர், சிவசங்கரமூர்த்தி. இவர் சிறுவயதிலேயே பரதநாட்டியத்தில் சிறப்புத்தேர்ச்சிபெற்று, பலரால் புகழப்பட்டவர். அதனாலேயே கொஞ்சம் கர்வமுடன் காணப்படுகிறார். இவரது மகள் அபிராமி. தனது தந்தையிடமே பரதநாட்டியம் பயின்று பரத நாட்டியக் கலைஞராகத் திகழ்கிறார். தஞ்சை மாவட்டம், சிக்கலூர் கோயிலில் நடக்கும் நடன நிகழ்ச்சியில் எப்போதுமே ஆவுடை பிள்ளையின் மகன்களின் கிராமிய ஆட்டம் தான் இருப்பது வழக்கம். திடீரென்று, அந்தக்கோயிலின் தர்மகர்த்தா நாகராஜ், நடன நிகழ்ச்சிக்கு அபிராமியை புக் செய்கிறார். இதனால், அபிராமி குழுவினர் ஆடுவதைப் பார்க்க, ஆவுடை பிள்ளையின் மகன்கள் செல்கின்றனர். ஆவுடை பிள்ளையின் மகனான செல்வத்துக்கு, அபிராமியைப் பார்த்ததும் ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. அதன்பின், அபிராமி குடும்பத்தினரை, செல்வம் தன் ஆடல் நிகழ்ச்சியைப் பார்க்க அழைக்கிறார். அங்கு செல்வத்தைப் பார்த்ததும் அபிராமிக்கும் ஒரு ஈர்ப்பு வந்துவிடுகிறது. அதன்பின், தர்மகர்த்தா நாகராஜ், ஒருநாள் தன் வீட்டுக்குப் பேச வருமாறு, அபிராமியை அழைக்கிறார். அங்கு தனது தாயுடன் சென்ற அபிராமியைப் பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறார், நாகராஜ்.

அப்போது தனியாக சென்றவர்களை வெகுநேரம் ஆகியும் காணாத அபிராமியின் குழுவினர், செல்வத்தின் குழுவினரிடம் உதவி கேட்கின்றனர். அப்போது நாகராஜின் இல்லத்துக்கு செல்லும் செல்வம், அங்கு அபிராமியைப் பலாத்காரம் செய்யத்துடிக்கும் நாகராஜை தடுத்து நிறுத்தி காப்பாற்றுகிறார். அதன்பின், நாகராஜை வீட்டைவிட்டு வெளியேற்றி, அவரது வேஷ்டியை கழற்றிவிட்டு அவமானப்படுத்துகிறார். இதனால் ஒரு புறம், நாகராஜ் கடும் கோபத்துடன் இருக்கிறார். மறுபுறம், அபிராமிக்கும் செல்வத்துக்கும் இடையில் காதல் வந்துவிடுகிறது. செல்வத்தின் சார்பில், அவரது தந்தை ஆவுடை பிள்ளை, சிவசங்கரமூர்த்தியிடம் சென்று அபிராமியை மருமகள் ஆக்க பெண் கேட்கிறார். அதற்கு, சிவசங்கரமூர்த்தியை அவமானப்படுத்தி வெளியேற்றுகிறார். அதுமட்டுமின்றி, ஆவுடை பிள்ளை போன்ற கிராமியக் கலைஞர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை கிடைக்கவிடாமல் செய்கிறார், சிவசங்கரமூர்த்தி. இதனால் ஆத்திரப்படும், ஆவுடை பிள்ளை, சிவசங்கரமூர்த்தி குழுவினர் நடனநிகழ்ச்சிக்கு காரில் செல்லும்போது தடுத்து நிறுத்தி, தக்கபதிலடி கொடுக்கிறார். அறிவுரை செய்து வழிவிடுகிறார். ஒரு கட்டத்தில் கலைஞர்களின் சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது. அதில் சிவசங்கரமூர்த்தி, தன் செலவில் ஒரு மணி மண்டபம் கட்டித்தருவதாக மேடையில் சொல்கிறார். அப்போது மேடைக்குக் கீழே அமர்ந்திருக்கும் ஆவுடை பிள்ளை, மணி மண்டபம் அனைவருடைய பங்களிப்பிலும் இருக்கவேண்டும் என்கிறார். அப்போது சிவசங்கரமூர்த்தி கொடுக்கும் ரூபாயை விட ஒரு ரூபாய் அதிகம் கொடுப்பேன் என்றும்; அப்படி கொடுக்கமுடியவில்லையென்றால், தனது மகன் செல்வம் காலில் சலங்கையைக் கட்டமாட்டார் என்று சபதமிடுகின்றார். அதேபோல், செல்வத்தின் ஆடல் நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வருகின்றனர். அப்போது இதையறிந்த சிவசங்கரமூர்த்தி சற்று பதற்றமாகிறார். மேலும், சிவசங்கரமூர்த்தி ஆதரவாளரான தர்மகர்த்தா நாகராஜ், அய்யனார் கோயில் சென்றிருக்கும் ஆவுடை பிள்ளையை கத்தியால் குத்திவிட்டு தப்பிவிடுகிறார். அப்போது, சென்று பலமணிநேரம் ஆகி காணாத நிலையில், அவரது வளர்ப்பு மகன்கள் தேடி வருகின்றனர். அப்போது, தன் கடைசி ஆசை, அந்த ஆட்டத்தில் செல்வம் ஜெயிக்கவேண்டும் தான் எனச் சொல்லிவிட்டுசெத்துவிடுகிறார். பின், மேடைக்கு அருகில் ஆவுடை பிள்ளையின் பூத உடல் கம்பீரமாக அமரவைக்கப்படுகிறது. செல்வமும் வெற்றிகரமாக ஆடுகிறார். மக்கள் பணத்தை வாரிக்காற்றில் பறக்கவிடுகின்றனர். இறுதியாக அங்கு வரும் சிவசங்கரமூர்த்தி மனம் திருந்துகிறார். அவரது பூத ஊடல் எரியூட்டும் அக்னிக்கு முன் தன் மகள் அபிராமியையும் செல்வத்தையும் மணமுடித்து வைக்கின்றார்.

சங்கமம் திரைப்படத்தில் நடித்தவர்கள் விவரம்:

ஆவுடை பிள்ளையாக மணிவண்ணனும், சிவசங்கரமூர்த்தியாக விஜயகுமாரும், செல்வமாக ரகுமானும், அபிராமியாக விந்தியாவும் நடித்திருந்தனர். தர்மகர்த்தா நாகராஜ் ஆக ராதா ரவியும், ஹரிதாஸாக வடிவேலுவும், சார்லியாக சண்முகமும் அபிராமியின் தாய் சிவகாமியாக ஸ்ரீவித்யாவும், அபிராமியின் மாமாவாக டெல்லி கணேஷும் நடித்திருக்கின்றனர்.

சங்கமம் திரைப்படத்தின் இசை மற்றும் பாடல்கள்:

சங்கமம் திரைப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். கவிப்பேரரசு வைரமுத்து அனைத்துப் பாடல்களையும் எழுதியிருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ’’செளக்கியமா கண்ணே செளக்கியமா, வராக நதிக்கரையோரம் ஒரே ஒரு பார்வையைப் பார்த்தேன், முதல்முறை கிள்ளிப்பார்த்தேன், மார்கழித் திங்கள் அல்லவா, மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம், ஆலால கண்ட ஆடலுக்குத் தகப்பா’’ ஆகிய ஆறு பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. ’’முதல்முறை கிள்ளிப்பார்த்தேன்’’ பாடலுக்காக வைரமுத்து தேசிய விருதுபெற்றார்.

படம் வெளியானபோது திரையரங்கில் சரியாகப் போகவில்லையென்றாலும், இப்படத்தை ஏன் தவறவிட்டோம் என குற்றவுணர்ச்சியைத் தூண்டும் வகையிலான கிளாஸிக் கதை தான், ’சங்கமம்’. படம் வெளியாகி 25 ஆண்டுகளைக் கடந்தாலும் இப்படத்தினை இன்று டிவியில் போட்டாலும் ரசிக்கலாம். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.