14 Years Of Azhagaana Ponnuthan: டீனேஜ் பையனின் காதல்.. பெண்ணை தவறாக சித்தரித்த சமூகத்தின் கதை!
14 Years Of Azhagaana Ponnuthan: அழகான பொண்ணு தான் திரைப்படம் வெளியாகி 14ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

14 Years Of Azhagaana Ponnuthan: நமீதா, கார்த்தீஷ், பார்த்திபன், நிழல்கள் ரவி, அபிஷேக், மயில்சாமி, வாசுவிக்ரம், ஷியாம் கணேஷ், பாலு ஆனந்த், பவா லட்சுமணன், நெல்லை சிவா, பயில்வான் ரங்கநாதன், விக்டோரியா, நிஷா, லக்ஷயா எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து, 2010ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி வெளியான திரைப்படம் தான், அழகான பொண்ணுதான்.
இந்தப் படம், லுயூசியனோ வின்சென்ஜோனி மற்றும் கியூஸ்பி டார்னடோர் ஆகியோர் இயக்கத்தில் வெளியான இத்தாலிய திரைப்படமான மலினாவின் தழுவல் ஆகும். இந்தப்படத்தின் இசையை சுந்தர் சி. பாபு செய்திருந்தார். திரு என்பவர் இந்தப் படத்தை இயக்க, கேஷவன் என்பவர் தயாரித்தார்.
அழகான பொண்ணுதான் திரைப்படத்தின் கதை என்ன? சொல்லிக்கொள்ளும்படி, இதுபெரிய காவியம் எல்லாம் இல்லை. இருந்தாலும் இதுபோன்ற சூழலை அனைத்து ஆண்களும் தங்களது இளம் வயதில் அனுபவித்து இருப்பர். பெரும்பாலும் இதுபோன்ற சிக்கல்களில் இருந்து ஆண்கள் வெளியே வந்துவிடுவர். அப்படியிருக்க, சிலர் மிகவும் இக்கட்டான சூழலில் கற்பனை உலகில் சிக்கித்தவித்து மீண்டால் என்ன ஆனது என்பதே கதை.
வயது முதிர்ந்த கார்த்திக், இப்படத்தின் முதல் காட்சியில் தோன்றி, தனது பதின்மவயதில் வயது மூப்பான பெண்ணிடம் இருந்த ஒரு தொடர்பையும், பயணத்தையும் பற்றி நினைத்துப் பார்க்கிறார்.
அதில் கதை ஃப்ளாஸ்பேக்கிற்கு நகர்கிறது. அதில் இளம்வயதில் இருக்கும் கார்த்திக்,கொடைக்கானலில் வசித்து வருகிறார். அப்போது ஜெனிஃபர் என்னும் தன்னைவிட வயது முதிர்ந்த பெண்ணிடம் ஒரு தலைக் காதலில் விழுகிறாள். சமூகத்தில் அவளை அனைவரும் மிகவும் மரியாதையாக நடத்துகின்றனர்.குறிப்பாக ஆண்களும் அவளை மிகவும் மதிக்கின்றனர். இளம் வயது கார்த்திக், ஜெனிஃபர் மீது பைத்தியக்காரத்தனமான ஒரு தலைக் காதலில் இருக்கிறார். கனவிலேயே ஜெனிஃபருடன் டூயட் பாடுகிறாள், கார்த்திக்.
அதன்பின், ஒரு வீட்டுக்குள் செல்கிறார். தனது காதலி ஜெனிஃபர் பற்றியே யோசித்து இளமையைத் தொலைக்கிறார். கடைசியில் பார்த்தால், பல்வேறு திருப்பங்களுக்குப் பின், ஜெனிஃபருக்கு முன்பே திருமணம் ஆகியிருந்தது, இளம் வயது கார்த்திக்கிற்குத் தெரியவருகிறது. அதுவும் ஜெனிஃபரின் கணவர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் நடந்த 1971ஆம் ஆண்டு இறந்த ராணுவ வீரன் என இளம் வயது கார்த்திக்கிற்கு தெரியவருகிறது.
அதன்பின்,அவர் தங்கியிருக்கும் வீட்டிலுள்ள நபர், அவரை பாலியல் துன்புறுத்தல் செய்ய முயற்சிக்கிறார். அதைத்தடுக்க முயற்சிக்கும் ஜெனிஃபரை, தவறான முத்திரை குத்தி வெளியேற்றுகிறாள், அந்த நபர். அதன்பின், ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஜெனிஃபரை அடித்து உதைத்து, ஊரை விட்டு வெளியேற்றுகின்றனர். இறுதியில் இளம்வயது கார்த்திக், ஒரு ஏக்கத்துடன் அவளைப் பார்க்கிறார். பல ஆண்டுகள் கழித்து, தான் எத்தனையோ அழகான பெண்களைப் பார்த்து இருந்தாலும் ஜெனிஃபர் தான் மிக அழகான பெண் என்று நினைத்துப் பார்க்கிறார், வயதான தோற்றத்தில் இருக்கும் கார்த்திக். மேலும் அந்த தருணத்தில் அவளைக் காப்பாற்றமுடியவில்லை என நினைத்து வேதனைப் படுகிறார்.
இப்படத்தில் இளம்வயது கார்த்திக்காக, கார்த்தீஷ் என்னும் புதுமுகம் நடித்திருந்தார். வயதான கார்த்திக்காக நடிகர் பார்த்திபன் நடித்திருந்தார். நமீதா, ஜெனிஃபராக நடித்து இருந்தார். அபிஷேக், நமீதாவின் கணவராக நடித்து இருந்தார். நிழல்கள் ரவி, கார்த்திக்கின் தந்தையாக நடித்து இருந்தார்.
இப்படம் 2006ஆம் ஆண்டு துவங்கி, 2009ஆம் ஆண்டு பல்வேறு பிரச்னைகளுக்குப் பின் முடிந்தது. படத்தின்பாதியிலேயே நடிக்கமுடியாது என வெளியேறிய நமீதாவால் படப்பிடிப்பு தாமதமானது. பின், தயாரிப்பாளர் சங்கத்தின் சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பின், நமீதா இப்படத்தில் நடித்து முடித்தார். இப்படத்தின் எந்தவொரு புரோமோசன் நிகழ்விலும் நமீதா பங்கேற்கவில்லை. படமும் தணிக்கை சான்றிதழில் பெரியவர்கள் பார்க்கும் படமாக மாறிப்போனதால், நிறைய தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவில்லை. தோல்விப் படமானது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்