HBD Yashika Aannand: சோசியல் மீடியா முதல் கனவுக்கன்னி வரை: கிளாமர் நடிகையாக யாஷிகா ஆனந்த் ஜெயித்த கதை!
HBD Yashika Aannand: நடிகை யாஷிகா ஆனந்தின் பிறந்தநாளை ஒட்டி, சோசியல் மீடியா முதல் கனவுக்கன்னி வரை கிளாமர் நடிகையாக யாஷிகா ஆனந்த் ஜெயித்த கதை குறித்துப் பார்ப்போம்.
HBD Yashika Aannand: சினிமாவில் கவர்ச்சி என்பது ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ப மாறி வந்து இருக்கிறது. அது நடிகைகளின் முக பாவனைகள், உடல் மொழிகள், உடைகள் ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ப பரிணமித்து இருக்கிறது. தமிழ் சினிமாவில் கவர்ச்சியைத் தாராளமாக காட்டி, பெரும் நடிப்பு ஜாம்பாவன்களின் படத்தையே வசூலில் பின்னுக்குத்தள்ளிய ஏராளமான நடிகைகள் ஏராளமானோர் இருந்தனர். அப்படி, ஜோதிலட்சுமி, ஜெயலட்சுமி, சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி, அனுராதா, குஷ்பூ, மும்தாஜ், மாளவிகா, ராய் லட்சுமி, முமைத் கான், கிரண், நமீதா, சன்னி லியோன், தமன்னா என அதன்பட்டியல் மிக நீளம். அந்த வகையில் சமீபத்திய இளசுகளின் கவர்ச்சி கனவுக்கன்னியாகத் திகழ்ந்து வருபவர், யாஷிகா ஆனந்த். இவரது பிறந்தநாளான இன்று இவரைப் பற்றி பேச நம்மிடம் தாராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.
யார் இந்த யாஷிகா ஆனந்த்?:
தமிழ் சினிமாவில் நடிகையாகவும், டிவிக்கள் ஷோக்களில் பங்கேற்பாளராகவும் அறியப்பட்ட நடிகை யாஷிகா ஆனந்த், 1999ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 4ஆம் தேதி டெல்லியில் பிறந்தவர். இவரது குடும்பத்தினர் அடிப்படையில் பஞ்சாபி மொழிபேசும் இந்து குடும்பத்தினர் ஆவர். சிறு வயதிலேயே சென்னைக்கு குடும்பத்தினர் குடிபெயர்ந்ததால், யாஷிகாவும் சென்னைக்கு குடிபெயர்ந்து, சேத்துப்பட்டில் இருக்கும் ஷெர்வுட் ஹால் சீனியர் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து தன் பள்ளிப் படிப்பை முடித்தார். சிறுவயது முதலே மாடலிங்கில் ஆர்வமாக இருந்த மேல்நிலைப்பள்ளிக்குச் சென்றவுடனே சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருந்த யாஷிகா ஆனந்த், இன்ஸ்டாகிராமிலேயே அவ்வப்போது மாடலிங் செய்து புகைப்படங்களைப் பதிவேற்றி வந்தார். அப்போதே இவருக்கு நிறைய ரசிகர்கள் உருவாக ஆரம்பித்துவிட்டனர்.
கிடைத்த சினிமா வாய்ப்பு:
இதனால் இவருக்கு 14 வயதிலேயே சந்தானத்தின் படமான ‘இனிமே இப்படித்தான்’ படத்தில் ஒரு சிறிய ரோலில் நடிக்க வாய்ப்புக் கிட்டியது. அப்போது பள்ளிப்படிப்பைத் தொடரவேண்டிய நிர்பந்தத்தால், யாஷிகா ஆனந்த் ஒரு பாடல் படப்பிடிப்பில் கலந்துகொள்ளமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனால், இப்படத்தில் இருந்து இவரது காட்சிகளை படக்குழுவினர் நீக்கினர்.
அதன்பின், ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா மற்றும் சுனைனா நடித்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் நீச்சல் சொல்லித்தரும் பயிற்றுநராக யாஷிகா ஆனந்த் நடித்தார். நடிகையாக இதுவே இவரது முதல் படம்.
அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’என்னும் திரைப்படத்தில் ஸ்ருதி என்னும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், யாஷிகா ஆனந்த்.
உமாபதியுடன் கிசுகிசுக்கப்பட்ட யாஷிகா ஆனந்த்:
பின்னர் 2018ஆம் ஆண்டு இவர் நடித்து வெளியான பாடம் மற்றும் மணியார் குடும்பம் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. மணியார் குடும்பம் திரைப்படத்தை தம்பி ராமையா தனது மகன் உமாபதியை வைத்து இயக்கியிருந்தார். அப்போது உமாபதியும் யாஷிகா ஆனந்தும் டேட்டிங்கில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது.
அதே 2018ஆம் ஆண்டு சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கிய ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் தான், மிக கிளாமராக நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின், தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகையாக ரசிகர்கள் யாஷிகா ஆனந்தை அங்கீகரித்தனர். இந்தப் புகழை வைத்து ’பிக்பாஸ் தமிழ் சீசன் 2’வில் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்பாளராக களமிறக்கப்பட்ட யாஷிகா ஆனந்த், 98ஆவது நாள் வரை தாக்குப்பிடித்து, ரூ.5 லட்சம் பரிசுடன் வெளியேறினார். பின்,விஜய் டிவி நடத்திய ‘ஜோடி அன்லிமிட்டேட் டிவி சீரிஸிலும்’ வழிகாட்டியாக பங்கு எடுத்தார்.
யாஷிகா ஆனந்த் அடுத்தடுத்து நடித்த திரைப்படங்கள்:
அதன்பின், ’ஜாம்பி’திரைப்படத்திலும், 2021ஆம் ஆண்டு ‘பெஸ்டி’ முன்னணி கதாபாத்திரமாக திரைப்படத்தில் நடித்திருந்தார். தவிர, கழுகு 2,மூக்குத்தி அம்மன், தி லெஜண்ட் திரைப்படங்களில் சிறப்புத்தோற்றத்திலும், 2022ஆம் ஆண்டு, ‘கடமையைச் செய்’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் ஜோடியாகவும்; சைத்ரா படத்தில் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடித்து சில நொடிகளில், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, டபுள் டக்கர், படிக்காத பக்கங்கள், வெப்பன் ஆகியப் படங்கள் வெளியாகியுள்ளன.
தனது 25ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் யாஷிகா ஆனந்த் இன்னும் திரைத்துறையில் பல நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வாழ்த்துகள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்