தமிழ் செய்திகள்  /  Entertainment  /  A Special Article On The 35th Anniversary Of The Release Of Paattukku Oru Thalaivan

35 Years of Paattukku Oru Thalaivan: காதல்.. மிஸ்அன்டர்ஸ்டன்டிங்.. பிரிவு.. இணைவுதான் பாட்டுக்கு ஒரு தலைவன்!

Marimuthu M HT Tamil
Mar 17, 2024 09:04 AM IST

Paattukku Oru Thalaivan: பாட்டுக்கு ஒரு தலைவன் திரைப்படம் வெளியாகி 35 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது தொடர்பான சிறப்புக் கட்டுரையினைக் காணலாம்.

35 ஆண்டுகளை நிறைவுசெய்த பாட்டுக்கு ஒரு தலைவன் திரைப்படம்
35 ஆண்டுகளை நிறைவுசெய்த பாட்டுக்கு ஒரு தலைவன் திரைப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

பாட்டுக்கு ஒரு தலைவன் திரைப்படத்தின் கதை என்ன?: பாட்டுக்கு ஒரு தலைவன் திரைப்படத்தின் ஆரம்பத்தில் அறிவு, சில ரவுடிகளை அடித்து, சாந்தி என்னும் பெண்ணைக் காப்பாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து மது அருந்திவிட்டு வரும் அறிவு, அப்போது எதிர்பாராதவிதமாக தனது தாய் செண்பகத்தை எதிர்கொள்கிறார். அப்போது அறிவின் நண்பரான விக்கி, அவருடைய கடந்த காலம் குறித்து அவனுடைய தாயார் செண்பகத்திடம் கேட்கிறார்.

ஃப்ளாஷ்பேக் ஓபன் ஆகிறது. அறிவு, வேலுச்சாமி என்பவரின் மகன் ஆவார். வேலுச்சாமி அடிப்படையில் ஒரு நாத்திகவாதி. வேலுச்சாமியின் குடும்பத்துக்கு அத்தொகுதியின் எம்.எல்.ஏ மருதநாயகத்தால் சின்ன சின்ன இடைஞ்சல்கள் வருகிறது.

அப்போது எம்.எல்.ஏவின் மகள் சாந்தி, விடுமுறைக்காக கிராமத்துக்கு வருகிறார். அப்போது அறிவு அப்பெண்ணைப் பார்த்து காதலில் விழுகிறார். இருவரும் கிண்டலாகப் பேசிக் கொள்கின்றனர். இதையறிந்த வேலுச்சாமி முறைப்படி, மருதநாயகத்தின் மகளை தன் மகன் அறிவுக்கு மணமுடிக்க பெண் கேட்டுச் செல்கிறார். அப்போது, தான் அவரைக் காதலிக்கவில்லை என சாந்தி கூறுகிறார். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அறிவின் தந்தை வேலுச்சாமி இறந்துவிடுகிறார். பின் அறிவு குடும்பத்துடன் சென்னைக்கு குடி பெயர்கிறார். சாந்தியை மறக்க குடிகாரராகவும் ஆகிறார்.

சாந்தி, சென்னையில் அறிவைப் பார்த்து சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். ஒரு சின்ன விபத்து நடக்கிறது. அதில், செண்பகம் விபத்துக்குள்ளாகி காயம் அடைகிறார். அப்போது, சாந்தி, செண்பகத்தைக் காப்பாற்றுவதோடு ரத்தம் அளித்து உதவுகிறார். மேலும் அவரின் மருத்துவ பில்லையும் கட்டுகிறார்.

சாந்தி, செண்பகத்திடம் ஒரு உண்மையைச் சொல்கிறாள். வேலுச்சாமியைக் காப்பாற்றுவதற்காகத் தான், தான் அறிவைக் காதலிக்கவில்லை என்று சொன்னதாகவும், ஏனென்றால் தனது தந்தையின் அடியாட்கள் வேலுச்சாமியைத் தாக்க தயாராக இருந்ததாகவும் தெரிவித்தார்.

அந்த உண்மையைத் தான் அப்போது வேலுச்சாமியிடம் சொல்ல முயன்றதாகவும், ஆனால், தன் தந்தையால் பிடித்து ஒரு அறையில் வைக்கப்பட்டதாகவும், சாந்தி செண்பகத்திடம் கூறுகிறாள்.

ஆனால், இதையெல்லாம் அறியாத அறிவு அதைப் புரிந்துகொள்ளாமல் சாந்தியை வெறுத்துக்கொண்டே இருக்கிறார். அவர் தன்னுடைய தாய் செண்பகம் மூலம் சாந்தி காதலிப்பதை அறிகிறார். நடந்த உண்மைகளைத் தெரிந்துகொள்கிறார். சாந்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடன்,சாந்தி தற்கொலை செய்யமுயற்சிக்கிறார். ஆனால், அறிவு அவரைக் காப்பாற்றுகிறார். இருவரும் இறுதியில் இணைகின்றனர்.

இப்படத்தில் விஜயகாந்த், அறிவு என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சோபனா, சாந்தி என்னும் கதாபாத்திரத்திலும், எம்.என்.நம்பியார் வேலுச்சாமியாகவும், கே.ஆர்.விஜயா செண்பகமாகவும் நடித்திருந்தனர். மேலும் எம்.எல்.ஏ மருதநாயகமாக விஜயகுமாரும், நண்பன் விக்கியாக ஜனகராஜூம் நடித்து இருந்தனர். தவிர, லிவிங்ஸ்டன், செந்தில், கோவை சரளா, எஸ்.எஸ்.சந்திரனும் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இளையராஜாவின் இசையில் அழகிய நதி என அது ஒரு மழை என இரு மனம் அணைவது என்ன, நினைத்தது யாரோ நீ தானே, சிட்டா சிட்டா சினுக்குத்தான், இசையாலே நான் வசமாகினேன், பாட்டுக்கு தலைவா பாட்டுக்குத் தலைவா பாட்டு ஒன்னு பாடவா ஆகிய அனைத்துப் பாடல்களும் ஹிட்டாகின. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்