13 Years Of Avan Ivan:சகோதரர்கள் ஊர்ப்பெரியவர் மீது வைத்திருக்கும் பாசத்துக்காக அவரை கொன்றவரை வதம் செய்தால் ‘அவன் இவன்’
13 Years Of Avan Ivan: சகோதரர்கள் ஊர்ப்பெரியவர் மீது வைத்திருக்கும் பாசத்துக்காக அவரை கொன்றவரை வதம் செய்தால் ‘அவன் இவன்’ திரைப்படம் என படத்தின் ஒன்லைனை சொல்லலாம். அவன் இவன் திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

13 Years Of Avan Ivan: எப்போதுமே நிஜவாழ்க்கையின் வலிகளை கதையாகக் கொண்டு, படங்களை எடுக்கும் இயக்குநர் பாலா, தன் மீதான சீரியஸ் டோன் இயக்குநர் என்னும் விமர்சனத்துக்குப் பதில் சொல்லும்விதமாக, நகைச்சுவை பாணியில் எடுத்த படம் தான், ’அவன் இவன்’. இப்படத்தில் விஷால், ஆர்யா, ஜி.எம்.குமார், ஆர்.கே, மது ஷாலினி, ஜனனி அய்யர், அம்பிகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்துக்கு இசையினை யுவன் சங்கர் ராஜா செய்திருந்தார். ஒளிப்பதிவினை ஆர்தர் ஏ.வில்சன் செய்திருந்தார். தமிழில், இப்படத்திற்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வசனங்கள் எழுதியுள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் - தெலுங்கு என இருமொழிகளில் வெளியானது, தமிழைவிட தெலுங்கில் இப்படம் சூப்பர் ஹிட்டானது.
‘அவன் இவன்’ திரைப்படத்தின் கதை என்ன?:
ஒரு கிராமத்தில் ஸ்ரீகாந்த் என்னும் நபருக்கு இரண்டு மனைவிகள். இருவரும் அருகருகே வீடு அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இரண்டு மனைவிகளுக்கும் வால்டர் என்றும், கும்பிடுறேன் சாமி என்றும் மகன்கள் உள்ளனர். இவர்களது குலத்தொழில் திருட்டு என சொல்லப்படுகிறது. அதையே வால்டரும் கும்பிடுறேன் சாமியும் செய்துவருகின்றனர்.
வால்டரும், கும்பிடுறேன் சாமியும் ஊர்ப்பெரியவர் ஜமீன்தார் தீர்த்தபதியுடன் சிறுவயதில் இருந்தே பாசமுடன் இருந்து வருகின்றனர். அடிக்கடி, அவரது அரண்மனைக்குச் சென்று அரட்டையடிப்பது, பாதுகாவலர்கள் போல் இருப்பது என ஜமீன்தாருக்கு அனைத்துமாய் இருக்கின்றனர். தவிர, வால்டருக்கும் கும்பிடுறேன் சாமிக்கும் ஒத்துப்போகாமல் முட்டலும் மோதலுமாக இருக்கிறது.