A R Rahman: அப்பா… பாட்டி… அம்மா…நாய்க்குட்டி…எனக்கு பிடிச்ச எல்லாமே என்ன விட்டு போயிருச்சு.. கடவுள்தான்- ஏ.ஆர்.ரஹ்மான்!
A R Rahman: வாழ்க்கையில் என்ன நடந்தாலும் நான் அன்பை மட்டுமே தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்று முடிவு செய்து விட்டேன்; உண்மையில் நீங்கள் இதற்கு நேர்மாறான மனநிலையில் இருப்பதற்கு அதிகப்படியான சக்தி தேவைப்படும். - ஏ.ஆர்.ரஹ்மான்!
ஏ.ஆர்.ரஹ்மான் அண்மையில் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய பர்சனல் தோல்விகள் குறித்து மனம் திறந்த பேசி இருக்கிறார்.
தாத்தா போல் இசை அமைக்க
இது குறித்து பேசும் போது, ‘நான் இளமையாக இருப்பதற்கு இசை தான் காரணம்; எனக்கு 70 வயதை அடைந்து விட்டால், தாத்தா போல் இசை அமைக்க முடியாது. பாடல்களை இளம் வயதினரும் கேட்கின்றனர். ஆகையால் அவர்களுக்கு ஏற்றவாறும் நான் இசையமைக்க வேண்டும். அதனால்தான் நான் இளமையாக இருக்கிறேன். இது மட்டுமில்லாமல் நம்மை நாம் எப்பொழுதுமே தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். குற்ற உணர்வு, பொறாமை போன்ற எதிர்மறையான விஷயங்களை நெருங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதற்கு ஆன்மீகம் உங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். நீங்கள் ஆன்மீகத்திற்குள் செல்லும் பொழுது, சுக துக்கங்களில் இருந்து எப்படி தள்ளி நிற்பது என்பது உங்களுக்கு உங்களுக்கு தெரிந்துவிடும். இப்படி ஒரு மனநிலை என்பது மிக முன்பாகவே எனக்கு வந்துவிட்டது; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் நான் அன்பை மட்டுமே தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்று முடிவு செய்து விட்டேன்; உண்மையில் நீங்கள் இதற்கு நேர்மாறான மனநிலையில் இருப்பதற்கு அதிகப்படியான சக்தி தேவைப்படும்.
நாய் குட்டி இறந்து விட்டது
இந்த மனநிலை எனக்கு வருவதற்கு எனது சிறு வயது கஷ்டங்களை காரணம். முதலில் என்னுடைய அப்பா இறந்தார்; அதன் பின்னர் என்னுடைய பாட்டி, ஒரு நாய்க்குட்டி வளர்ந்தேன்; அந்த நாய் குட்டி இறந்து போனது; அப்போது எனக்கு ஒரு விஷயம் தெளிவாக தெரிந்தது; அது என்னவென்றால் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் கிடையாது. வாழ்க்கையில் எனக்கு எது அதிகமாக பிடிக்கிறதோ அது என்னை விட்டுச் சென்று விடுகிறது. சிறு வயதிலிருந்து நான் அதிகப்படியாக என்னை விட வயது மூத்தவர்களிடம் அதிகமாக பழகி இருக்கிறேன்.
அதனால், அவர்களின் முதிர்ச்சியான புரிதல் எனக்கும் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்; என் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு கஷ்டத்தையும் கடவுள் எனக்கு கொடுக்கும் பயிற்சியாக நினைக்கிறேன். என் வாழ்க்கைக்கு எது சரியோ, அதனை அவர் செய்கிறார் என்று நினைக்கிறேன்’ என்று பேசினார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு, தன் கணவரை விட்டுப் பிரிவதாக அவரது வழக்கறிஞர் மூலம் அறிவித்தார். இதையறிந்த ஏ.ஆர்.ரஹ்மான் மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கருத்து தெரிவித்திருந்தார்.
எதைக் கொண்டும் இணைக்க முடியாது
மேலும், இந்த முடிவை அவர், அவர்களது உறவில் ஏற்பட்ட ஒரு குறிப்பிட்ட பிரச்னையால் ஏற்பட்ட அழுத்தத்திற்கு பிறகு எடுத்துள்ளார். இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், தம்பதிகளுக்கு இடையே நிலவிய பதற்றமும், சிரமங்களும் அவர்களுக்கிடையே ஒன்று சேர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
அதை இனி எதனைக்கொண்டும் இணைக்க முடியாது. சாய்ரா பானு, இந்த முடிவை வலி மற்றும் வேதனையின் வழியாகவே எடுத்திருக்கிறார். ஆகையால், இந்த நேரத்தில் அவரின் விவாகரத்து முடிவிற்கு தனிப்பட்ட பிரைவசியை அளிக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
விவாகரத்தை உறுதிப்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான்
அதை தனது எக்ஸ் தள பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், வலியோடு உறுதிப்படுத்தி இருந்தார். அதில், "நாங்கள் எங்களின் முப்பதாவது திருமண நாளை கொண்டாடுவோம் என்று நம்பினோம். ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும். இன்னும், இந்த சிதைவில் துண்டுகளாகிப் போன நாங்கள் மீண்டு வர முடியாமல் போனாலும், இந்த நிலைக்கான அர்த்தத்தைத் தேடுகிறோம்.
நாங்கள் பலவீனமாக உள்ள இந்த நாட்களைக் கடக்கும்போது, எங்கள் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கைக்கு மதிப்பும் மரியாதையும் அளித்த அழைத்து நண்பர்களுக்கும் நன்றி" என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மிகவும் உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்