Actress Hema Malini: நடிகை ஹேமா மாலினி மீது புகார்.. கோவிலுக்குள் நுழைந்தது குற்றமா?
Actress Hema Malini: பூரி ஜகன்நாதர் கோவிலுக்குள் நுழைந்த நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமா மாலினிக்கு எதிராக, அங்குள்ள ஸ்ரீ ஜகன்நாத சேனா என்ற உள்ளூர் அமைப்பு சிங்கதவார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

Actress Hema Malini: மூத்த நடிகையும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமா மாலினி கடந்த வாரம் ஒடிஷாவின் பிரசித்தி பெற்ற கோவில் பூரி ஜகன்நாதன் கோவிலுக்கு ஹோலி பண்டிகையின் போது சென்று வந்தார். பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ராவுடன் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார்.
இந்நிலையில், அவர் கோவிலுக்குள் நுழைந்தது சட்டவிரோதமானது. இதனால் எங்கள் மத உணர்வுகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்று ஸ்ரீ ஜகன்நாத சேனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக மிட் டே செய்தி வெளியிட்டுள்ளது.
மத உணர்வுகள் காயம்
ஸ்ரீ ஜகன்நாத சேனா என்ற உள்ளூர் அமைப்பு சிங்கதவார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. நடிகை மற்றும் அரசியல்வாதி ஹேமா மாலினி மத உணர்வுகளுக்கு காயம் விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களின் கூற்றுப்படி, நடிகை தர்மேந்திரா என்பவரை மணந்துள்ளார். தர்மேந்திரா ஒரு முஸ்லிம் என்பதை புகாரில் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ மந்திரத்தில் முஸ்லிம் சமூகத்தினருக்கு அனுமதி இல்லை. எனவே, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நடிகை ஹேமா மாலினியை கைது செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பின் தலைவர் பிரியதர்ஷன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்லாம் மதப்படி திருமணம்
செய்திகளின்படி, நடிகை ஹேமா மாலினி 1980 ஆம் ஆண்டில் தர்மேந்திராவை மணந்தார். பிரகாஷ் கவுரை ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட தர்மேந்திரா இஸ்லாத்திற்கு மதம் மாறி, இந்து திருமணச் சட்டத்தை தவிர்த்து ஹேமா மாலினியுடன் நிக்காஹ் செய்து கொண்டார். மௌலானா காஜி அப்துல்லா ஃபைசாபாதி இஸ்லாமிய மரபின்படி அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தார். எனவே, அவர் இந்து அல்ல. அவர் பூரி ஜகன்நாதன் கோவிலுக்குள் நுழைந்தது எங்கள் மத உணர்வுகளுக்கு காயம் விளைவித்துள்ளது என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹேமா மாலினி குடும்பம்
'தி பர்னிங் டிரெயின்', 'ஷோலே', 'ராஜா ஜானி', 'பகவத்', 'தர்ம் ஓர் கானூன்', 'தோ திஷாயன்' உள்ளிட்ட பல பிரபல திரைப்படங்களில் நடிகர் தர்மேந்திரா மற்றும் ஹேமா மாலினி நடித்துள்ளனர். அவர்களுக்கு இஷா தேவோல் மற்றும் அஹானா தேவோல் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ஐந்து பேரக்குழந்தைகள் உள்ளனர். மறுபுறம், நடிகர் தர்மேந்திரா பிரகாஷ் கவுருடன் திருமணம் செய்து கொண்டபோது நால்வர் குழந்தைகள் உள்ளனர். அதாவது, சன்னி தேவோல், பாபி தேவோல், விஜேதா மற்றும் அஜீதா ஆகிய நால்வரின் தந்தையும் அவரே.
பூரி ஜகன்நாதன் கோவில்
ஒடிஷா மாநிலம் பூரியில் உள்ள பிரபலமான கோவில். பூரியில் உள்ள ஸ்ரீ ஜகன்நாதன் கோவில் விஷ்ணுவின் ஒரு அவதாரமான ஜகன்நாதனின் கோவில். இது ஒரு பழங்கால இந்து கோவில். பத்தாம் நூற்றாண்டில் பழைய கோவிலின் இடத்திலேயே மீண்டும் இந்தக் கோயில் கட்டப்பட்டது. கிழக்கு கங்க வம்சத்தின் முதல் மன்னர் அனந்தவர்மன் சோடகங்க தேவ் இந்த கோவிலின் கட்டுமானத்தைத் தொடங்கினார். பூரியின் வருடாந்திர ரத யாத்திரை மிகவும் பிரபலமானது.

டாபிக்ஸ்