Actor Dhanush: லீக்கான தனுஷ் பட ஷூட்டிங்.. வைப் செய்யும் ரசிகர்கள்.. ட்ரெண்டாகும் வீடியோ..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Dhanush: லீக்கான தனுஷ் பட ஷூட்டிங்.. வைப் செய்யும் ரசிகர்கள்.. ட்ரெண்டாகும் வீடியோ..

Actor Dhanush: லீக்கான தனுஷ் பட ஷூட்டிங்.. வைப் செய்யும் ரசிகர்கள்.. ட்ரெண்டாகும் வீடியோ..

Malavica Natarajan HT Tamil
Published Feb 16, 2025 05:15 PM IST

Actor Dhanush: நடிகர் தனுஷ் நடித்து வரும் தேரே இஷ்க் மெயின் எனும் இந்தி படத்தின் படப்பிடிப்பு காட்சி ஒன்று கசிந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Dhanush: லீக்கான தனுஷ் பட ஷூட்டிங்.. வைப் செய்யும் ரசிகர்கள்.. ட்ரெண்டாகும் வீடியோ..
Actor Dhanush: லீக்கான தனுஷ் பட ஷூட்டிங்.. வைப் செய்யும் ரசிகர்கள்.. ட்ரெண்டாகும் வீடியோ..

இந்நிலையில், தனுஷ் கல்லூரி வளாகத்தில் நடித்த காட்சியின் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இதனை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

டெல்லியில் தனுஷ் படப்பிடிப்பு

தனுஷ் படப்பிடிப்பு நடத்தியபோது கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் எடுத்த படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின. ஒரு புகைப்படத்தில் அவர் ஒரு கூட்டத்தின் வழியாக ஓடுவதைக் காட்டுகிறது. அவருக்கு அருகில் நிற்கும் சிலர் அவரைப் பார்ப்பது போன்ற காட்சிகள் அதில் காணப்பட்டன.

இதனை ஏராளமான ரசிகர்கள் எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டு தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும், தனுஷின் தோற்றம் மற்றும் நடிப்புத் திறமையைக் கண்டு வியந்து பாராட்டியும் வருகின்றனர்.

கொண்டாடும் ரசிகர்கள்

இதில், எக்ஸ் தள பயனாளி ஒருவர், 41 வயதான நடிகர் கல்லூரி மாணவராக நடிக்க எந்த விதமான டி-ஏஜிங் வேலைப்பாடுகளும் தேவையில்லை' என்று கூறி, அவரை புகழ்ந்துள்ளார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில், தனுஷ் கேரவனில் இருந்து வெளியேறுவது தொடங்கி, அவர் ஷூட்டிங்கிற்கு தயாராவது வரை சின்ன சின்ன கிளிப்பிங்ஸ்ஸை வீடியோவாக இணைத்து தங்களது ஆச்சரியத்தையும் அன்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும், கல்லூரியில் வீடியோ எடுக்கப்பட்டு வருவதால், அவர் நிச்சயம் இந்தப் படத்தில் மாணவராகத் தான் நடிப்பார் என்றும், அவர் ஒரு வேளை மாணவ சங்கத் தலைவராக கூட இருக்கலாம் என்றும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

தேரே இஷ்க் மெயின் பற்றி

இயக்குநர் ஆனந்த் எல் ராய் உடன் இணைந்து இதற்கு முன் தனுஷ் இதற்கு முன்பு 2013 ஆம் ஆண்டு வெளியான ராஞ்சனா (தமிழில் அம்பிகாபதி) மற்றும் 2021 ஆம் ஆண்டு வெளியான அத்ரங்கி ரே (தமிழில் கலாட்டா கல்யாணம்) ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். ராஞ்சனா மற்றும் தேரே இஷ்க் மெயின் இடையேயான கருப்பொருள் ஒற்றுமைகள் இருப்பதாக எழுந்த கேள்விகளுக்கு ஆனந்த் ராய் பி.டி.ஐ.யிடம் பதிலளித்தார்.

இது ராஞ்சனா 2 படமா?

அப்போது "இது ராஞ்சனா உலகத்திலிருந்து வந்த கதை தான். ஆனால், இந்தப் படம் ராஞ்சனா 2 தானா எனக் கேட்டால் அது இல்லை. ராஞ்சனாவின் உலகம் என்று நான் சொல்லும்போது, ராஞ்சனாவில் இருந்த உணர்ச்சிகளை நான் கூறுகிறேன்.

அதேபோல், இந்த இரண்டு படத்திலும் சோகங்கள், கோபம் மற்றும் ஆத்திரம் என எல்லாமே உள்ளது. காதல் கதைகளும் அடுக்கடுக்காக உள்ளன. இருப்பினும் இது நேரடியாக ஆண்-பெண் விஷயங்களை பற்றி பேசும் படம் அல்ல. அதனால்தான் சொல்கிறேன் இது ராஞ்சனா உலகத்திலிருந்து வந்தது. ஆனால் இரண்டுமே வெவ்வேறான கதைகள் என்று எனக் கூறினார். மேலும் இந்தப் படம் நடப்பு ஆண்டிலேயே திரைக்கு வரவும் வாய்ப்பிருப்பதாக கூறினார்.

தனுஷின் அடுத்த படைப்புகள்

இந்த படத்தைத் தவிர, தனுஷ் தெலுங்கில் சேகர் கம்முலாவுடன் இணைந்து குபேரா படத்திலும், தமிழில் அவரே இயக்கி வரும் இட்லி கடை படத்திலும் நடித்து வருகிறார். மேலும், இவரது இயக்கில் பல இளம் நடிகர்கள் நடித்துள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படமும் இம்மாதம் வெளியாகிறது. இது தவிர அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடிக்க உள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், 2017ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். காட்சி (விஷூவல்), டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெரியார் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சினிமா, புகைப்படத்தொகுப்பு சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.