டைட்டில் சிக்கலில் பிரதீப் ரங்கநாதன் 'ட்யூட்'.. சொன்ன பெயரில் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா?
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட ட்யூட் படத்தின் தலைப்பு தனக்கு சொந்தமானது என இயக்குநர் ஒருவர் கூறியிருக்கிறார்.

பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு நடிக்கும் 'ட்யூட்' படத்திற்கு புதிதாக பிரச்சனை ஒன்றை சந்தித்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் போஸ்டர், ரிலீஸ் தேதி என அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வழங்கி வந்த நிலையில், இந்தப் படத்தின் தலைப்பே பிரச்சனையாக மாறியுள்ளது.
ட்யூட் பெயர் பிரச்சனை
நடிகரும் இயக்குநருமான தேஜ் என்பவர், ட்யூட் என்ற தலைப்பு தனக்கு சொந்தமானது என்றும் இந்த படத்திற்கான அறிவிப்பை ஒரு வருடத்திற்கு முன்னதாகவே தெரிவித்து தற்போது படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுபற்றி பேசிய தேஜ், மைத்ரி மூவிஸ் போன்ற பெரிய நிறுவனத்தை எதிர்த்து என்னால் போராட முடியாது. ஆனால், இதுபற்றி அவர்களிடம் விளக்கம் அளித்துள்ளோம். நல்ல முடிவு எட்டப்படும் என நினைக்கிறோம் எனக் கூறினார். தேஜ் 'ட்யூட்' படம் கால் பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுத்து வருகிறார். இப்படத்தை, இன்னும் 3 அல்லது 4 மாதத்திற்குள் வெளியிட திட்டமிட்டிருந்ததாகவும் கூறியிருந்தார்.