TTF Vasan: டிடிஎஃப் வாசன் குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு பறந்த புகார்.. கடைக்கு நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை!-a complaint flew to the prime ministers office about tdf vasan the police sent a notice to the shop - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ttf Vasan: டிடிஎஃப் வாசன் குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு பறந்த புகார்.. கடைக்கு நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை!

TTF Vasan: டிடிஎஃப் வாசன் குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு பறந்த புகார்.. கடைக்கு நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை!

Pandeeswari Gurusamy HT Tamil
May 22, 2024 12:57 PM IST

TTF Vasan: பிரபல பைக் ரேசர், மற்றும் யூடியூப் பிரபலமாகவும் திகழ்ந்தவர் டிடிஎஃப் வாசன். இவர் அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்சர்களை தனது கடையில் விற்பனை செய்ததாக எழுந்த புகார் எழுந்தது. பிரதமர் அலுவலகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

டிடிஎப் வாசன்
டிடிஎப் வாசன்

பிரபல பைக் ரேசர், மற்றும் யூடியூப் பிரபலமாகவும் திகழ்ந்தவர் டிடிஎஃப் வாசன். இவர் அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்சர்களை தனது கடையில் விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து பிரதமர் அலுவலகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் போக்குவரத்து போலீசார்நோட்டீஸ் அளித்துள்ளனர்.

டிடிஎஃப் வாசனின் கடைக்கு சென்று ஆய்வு செய்த போலீசார் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தினர்.

விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன்

பிரபல யூடியூப்பர் மற்றும் பைக்கராக இருப்பவர் டிடிஎஃப் வாசன். தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் மத்தியில் தனது சாகச பைக் பயணத்தால் பிரபலமானார். பலரை மிரட்டும் விதமாகவும், ஆபத்தை விளைவுக்கும் விதமாக பைக்குகளை ஓட்டியும், ஸ்டண்ட் செய்தும் வீடியாேவாக பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு காஞ்சிபுரம் அருகே ஆபத்தான முறையில் வீலிங் செய்தபோது விபத்தில் சிக்கனார்.  இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் மூலம் மீட்கப்பட்ட டிடிஎஃப் வாசன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், அவர் மீது காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் காவல்நிலையத்தினர் பாதசாரிகளின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் பிரிவுகள் உட்பட 5 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் இருந்து வெளியில் வர ஜாமீன் விண்ணப்பித்த அவருக்கு பலமுறை ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, டிடிஎஃப் வாசனின் பைக்கை எரிக்கும்படியும், அவரது யூட்யூப் சேனலை மூடவேண்டும் எனவும் கடுமையாகப் பேசி, ஜாமீனை நிராகரித்தார். பின் 10 ஆண்டுகளுக்கு அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டது காஞ்சிபுரம் ஆர்டிஓ அலுவலகம். இந்நிலையில் பல்வேறு மேல்முறையீடுகளுக்குப்பிறகு டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில் இருசக்கர வாகனம் ஓட்ட மட்டும் தானே கூடாது, அதில் ஏறி அமர்ந்து போஸ் கொடுக்கலாம்ல என்னும் தொனியில், அமர்ந்து தனது யூட்யூப் சேனல் பார்வையாளர்களுக்கான ஒரு வீடியோவை உருவாக்கி வெளியிட்டுள்ளார்.

அதில், 'லைசென்ஸ் கேன்சல் ஆனால் என்ன? வண்டி ஓட்டத்தானே கூடாது. உட்கார்ந்து பார்க்கலாம்ல. லைசென்ஸ் இல்லையென்றால் ரோட்டில் தான் வண்டி ஓட்ட முடியாது. மத்தபடி, ரேஸ் டிராக்கில் ஓட்டமுடியும். இதற்காக இண்டர்நேஷனல் லைசென்ஸை விரைவில் எடுப்பேன்’ எனப் பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.

டிடிஎஃப் பிட் ஷாப்க்கு நோட்டீஸ்

இதையடுத்து தற்போது சென்னை  அயப்பாக்கத்தில் பகுதியில் டிடிஎஃப் பிட் ஷாப் என்ற பெயரில் இவர் பைக் சம்பந்தப்பட்ட உபகரணங்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். அந்த கடையில் அதிக ஒலி எழுப்பும் சைலண்சர்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. 

இந்த புகாரை தொடர்ந்து அவரது கடைக்கு  அம்பத்தூர் போக்குவரத்து காவல்துறையினர் அயப்பாக்கத்தில் உள்ள அவரது கடைக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர். மேலும் டிடிஎஃப் வாசனின் கடைக்கு சென்று போலீசார் ஆய்வு செய்தனர்.

அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தி காவல்துறையினர் அதிரடி காட்டினர். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.