Desingh Periyasamy: உடன் இருந்து உதவி இயக்குநர் வைத்த ஆப்பு.. சிம்பு பட இயக்குநரிடம் 3 லட்சம் மோசடி! - சங்கதி என்னவோ?
சிலம்பரசன் பட இயக்குநரிடம் 3 லட்சம் மோசடி செய்த உதவி இயக்குநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் மூலமாக திரைத்துறைக்கு இயக்குநராக அறிமுகம் ஆனவர் தேசிங்கு பெரியசாமி. அந்த திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவதாக இவர் நடிகர் ரஜினிகாந்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே அந்தப்படம் ட்ராப் ஆனதாக செய்திகள் வந்தன.
இதனையடுத்துதான் அவர் சிலம்பரசனின் 48வது படத்தில் கமிட் ஆனார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் வேலைகள் மும்மரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அது என்னவென்றால், தேசிங்கு பெரியசாமியின் உதவி இயக்குநரான முகமது இக்பால் அவரிடம் 3 லட்சம் மோசடி செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து பெரியசாமி முகமது மீது காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அவர் மீது 4 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.
முன்னதாக, சிலம்பரசன் நடிப்பில், கமல் தயாரிப்பில் உருவாகி வரும் எஸ்.டி.ஆர் 48 திரைப்படம் தொடர்பான அப்டேட்கள் எதுவு பெரிதாக வராத நிலையில், அந்தப்படம் ட்ராப் ஆனதாக தகவல் வெளியானது.
இது குறித்து ஆகாயம் தமிழ் சேனலுக்கு பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசினார்.
அவர் பேசும் போது, “ கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை ரஜினிகாந்த் பார்க்கிறார்.அவருக்கு படம் பிடிக்கிறது. இதனையடுத்து அந்த படத்தின் இயக்குநர் தேசிங்கு ராஜாவை அழைத்து பேசுகிறார்.
அவர் ஒரு இயக்குநர் என்பதை தாண்டி, தன்னுடைய மிகப்பெரிய ரசிகர் என்பதை ரஜினிகாந்த் தெரிந்துகொள்ள, ஏதாவது லைன் இருந்தால் சொல்லுங்கள் என்கிறார். இதனையடுத்து தேசிங்கு பெரியசாமி லைன் ஒன்றைச் சொல்ல,அது ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்து போனது.
இதை கதையாக மாற்ற முடியுமா? என்று ரஜினி கேட்க, அவரும் கதையாக மாற்றலாம் என்று வேலையில் இறங்குகிறார்.ரஜினியும் தன்னுடைய ஆலோசனைகளை அந்த கதையில் புகுத்துகிறார். இந்த வேலைகள் கிட்டத்தட்ட ஒரு வருடமாக நடந்தது. இந்த நிலையில்தான், திடீரென்று ரஜினிகாந்த் தேசிங்கு பெரிய சாமியை, நீங்கள் இந்த கதையை வேறு எந்த கதாநாயகனுக்கு வேண்டுமென்றால் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்.
இதனையடுத்து தான் அந்த கதை பல்வேறு தயாரிப்பாளர்களிடம் சென்று, கலைப்புலி தாணுவின் கைக்கு வந்தது. அவரோ இந்த மாதிரியான பெரிய சப்ஜெக்ட்டை எல்லாம் கமல் சாரால்தான் பண்ண முடியும் என்று சொல்ல, இந்த கதை கமல் கைக்கு சென்றது.
கமலோ அந்த கதையில் சிலம்பரசனை கமிட் செய்து நடிக்க வைத்து, தானே அந்த படத்தை தயாரிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். இதனையடுத்து தான் அந்த படம் தொடர்பான போஸ்டர் வெளியானது.
ஒவ்வொரு முறையும் இந்த படம் ட்ராப் என செய்திகள் வரும்பொழுது, சிலம்பரசன் தரப்பிலிருந்து யாராவது ஒருவர் பேசி படம் தொடர்பான வேலைகள் மும்முரமாக சென்று கொண்டிருக்கின்றன. சிலம்பரசன் வெளிநாடுகளில் பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார் என்று சொல்வார்.
ஆனால், தொடர்ந்து இந்த படம் ட்ராப் என்ற செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இதனை தவிர்ப்பதற்காக ராஜ்கமல் ஃபிலிம்சிலிருந்து ஏதாவது ஒரு போஸ்டரோ அல்லது ஒரு சின்ன வீடியோ வெளியிட்டு இருந்தால், இந்த தகவல் அப்படியே அமிழ்ந்து சென்றிருக்கும். ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு விதமான அப்டேட்டும் வராத காரணத்தால் உண்மையில் இந்த படம் ட்ராப் ஆகி விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்